கொரானா பேரிடர் காலத்தில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க தமிழ் நாடு அரசு ஏற்படுத்திய கல்வித் தொலைக்காட்சி வாயிலாக மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர் என்பதனை நாம் அறிந்ததே.... இதனை நாட்கள் வாரியாக வகுப்பு வாரியாக அன்றைய தினங்கள் ஒளிபரப்பப்பட்ட பாடங்களை பகிர்ந்து அதற்கான பயிற்சித்தாளினை உருவாக்கி மாணவர்களின் கல்வியில் இந்த வலைதளமும் பங்கெடுத்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
இங்கே கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்களின் அடிப்படையில் இணையத் தேர்வு உருவாக்கியுள்ளோம். மாணவர்கள் இந்த கல்வித் தொலைக்காட்சியில் பாடங்களை காணுங்கள். பயிற்சித்தாளினை பயிற்சிப் பெற்று மதிப்பெண் பெறுங்கள்.
நீங்கள் இந்த பதிவில் 21-06-2021 முதல் 25-06-2021 வரை திங்கள் முதல் வெள்ளி வரை கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடங்களைப் பார்த்திருப்பீர்கள். மேலும் அந்த பாடப்பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்களுக்கு இங்கு இணைய வழி தேர்வு வைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த இணைய வழித் தேர்வினை எழுதி மதிப்பெண்கள் பெறுங்கள்.
பள்ளி திறக்கும் வரை அந்ததந்த வாரங்களில் ஒளிபரப்பப்படும் பாடங்களுக்கு வாரத்தின் இறுதி நாளில் இந்த வலைதளத்தில் இணைய வழித் தேர்வு எழுதுங்கள். பள்ளிகள் திறக்கப்படும் சூழலில் அனைத்து வாரங்களுக்குமான பாடங்களை கண்டு இணைய வழி தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மின் சான்றிதழ் இறுதியாக வழங்கப்படும்.
21- 06- 2021 முதல் 25-06-2021 வரை நடத்தப்பட்ட பாடங்களை அறிய அல்லது பார்க்கத் தவறிய மாணவர்கள் கீழே காணும் இணைப்பில் சென்று பாடங்களை பார்த்துவிட்டு இணைய வழித் தேர்வு எழுதும் படிக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
பாடங்களை காண
👇👇👇👇
இணையத் தேர்வுக்கான வினாக்களைத் தேர்ந்தெடுத்து தட்டச்சு செய்து அனைத்து மாணவர்களுக்கும் பயன்பட வேண்டும் என இதனை உருவாக்கிக் கொடுத்த ஆசிரியருக்கு நன்றி.
இணையத் தேர்வு வினாக்கள் தயாரிப்பு
திரு.சு.அழகுராஜ்,
தமிழாசரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி,
திருகண்ணபுரம்,
நாகை மாவட்டம்.
இணையத் தேர்வு எழுத
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது