2ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆசிரியர்கள் கவனத்திற்கு
வழிகாட்டுதலும் கல்வித்தொலைக்காட்சிக்கான நேர அட்டவணையும்
1. பாட ஆசிரியர்கள் கல்வி தொலைக்காட்சி அலைவரிசை நிகழ்ச்சி கால அட்டவணை தங்கள் வசம் வைத்திருக்க வேண்டும்
2. கல்வி தொலைக்காட்சி கால அட்டவணை மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் சென்றடையும் வகையில் வாட்ஸ்அப் மூலமாகவும் புத்தகம் வழங்கும் போது அதனுடைய நகல் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
3. பாட ஆசிரியர்கள் தங்கள் பாடம் எந்த நேரத்தில் கல்வி டிவியில் ஒளிபரப்பப்படுகிறது என்பதை மாணவர்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து அதை பார்த்தார்களா என்பதை உறுதி செய்து பதிவேடு பராமரிக்க வேண்டும்.
4. நடத்தப்பட்ட பாடங்களுக்கு உரிய ஒப்படைப்பு பாட ஆசிரியர்களால் பெற்றோர்களின் WhatsApp எண்ணிற்கு அனுப்பப்பட வேண்டும் வாட்ஸ்அப் இல்லாத பெற்றோர்களை பள்ளிக்கு நேரடியாக வரவழைத்து விபரங்களை கொடுத்து அனுப்ப வேண்டும்
ஒப்படைப்பு கூறிய பதில் வாட்ஸ்அப் மூலமாகவும் பெற்றோரின் நேரடியாகவோ அனுப்புவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும்
மாதத்திற்கு ஒரு பாடத்திற்கு ஒரு பயிற்சி என்ற அடிப்படையில் ஒப்படைப்பு வழங்கப்பட வேண்டும்
5. கல்வி டிவியில் ஒளிபரப்பு பார்க்க தவறவிட்ட மாணவர்களை யூடியூப் சேனலில் பார்க்க அறிவுறுத்த வேண்டும்
கல்வி டிவி ஒளிபரப்பு திங்கள் முதல் சனி வரை கல்வி சார்ந்த பாட வகுப்புக்களும் ஞாயிற்றுக்கிழமை கல்வி சார்ந்த இணை செயல்பாடுகள் ஒளிபரப்பப்படுகிறது
காலை ஐந்தரை மணி முதல் இரவு பத்தரை மணி வரை வகுப்பு வாரியாக பாடங்கள் நடத்தப்படுகிறது
மறு ஒளிபரப்பு இரவு பத்தரை மணி முதல் காலை ஐந்தரை மணி வரை ஒளிபரப்பப்படுகிறது
பதினோராம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை ஐந்தரை மணி முதல் 8 மணி வரை மற்றும் மாலை 7 :30மணி முதல் இரவு பத்தரை மணி வரை பாடங்கள் நடத்தப்படுகிறது
திங்கள் புதன் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 12ஆம் வகுப்புக்கும்
செவ்வாய் வியாழன் சனி கிழமைகளில் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கும் ஒளிபரப்பப்படுகிறது
ஆறாம் வகுப்பு ஏழாம் வகுப்புகளுக்கு ஒரு நாள் ஒரு பாடம் என்ற முறையிலும்
எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு நாளும் அனைத்து பாடங்களும் ஒளிபரப்பப்படுகிறது
மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றுமாறு பாட ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தபடுகிறது.
கல்வித்தொலைக்காட்சிக்கான நேர ஒளிபரப்பு அட்டவணையை பதிவிறக்கம் செய்ய........
Download Timer
கல்வி தொலைக்காட்சி மாணவர் பார்வை பதிவேடு மாதிரி வேண்டும் சார்
ReplyDeleteதயார் செய்து அனுப்புகிறேன். இந்த வலைதளத்தை தொடர்ந்து இணைந்திருங்கள்
Delete