இந்த பதிவு கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாடங்களுக்கான நேர ஒளிபரப்பு அட்டவணையை நகல் எடுத்துக் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். அந்தந்த பாடங்களில் மாணவர்கள் கற்றதை மதிப்பீடு செய்ய நாம் பயிற்சித்தாளை உருவாக்கி அதனை இணையத்தில் பகிர்ந்து அதனை மாணவர்கள் இணையம் வழியே அதனை செய்து அனுப்பும் போது நமக்கு ஒரு மனநிறைவு ஏற்படும். மேலும் மாணவர்கள் இயங்கக் கூடிய பயிற்சித்தாளை பயிற்சி செய்யும் போது அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியும் கிடைக்கிறது.
சரி இந்த மாதிரியான பயிற்சித்தாளினை எவ்வாறு உருவாக்குவது என அனைவருக்கும் அறியும் ஆவல் ஏற்படலாம். இந்த இணைய பயிற்சித்தாளினை எவ்வாறு உருவாக்கு என்பது குறித்து காணொளி ஒன்று ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். அதில் அந்த வலைதளத்தில் எவ்வாறு கணக்கு துவங்குவது?என்னென்ன செயல்பாடுகள் உள்ளன? எவ்வாறு அவற்றை செய்வது ? என்பது குறித்து கூறியுள்ளேன். பார்க்காதவர்கள் கீழே உள்ள இணைப்பினை சொடுக்கிப் பார்க்கவும்.
இந்த பதிவில் அந்த.வலைதளத்தில் பொருத்துக என்ற செயல்பாட்டினை எவ்வாறு செய்யலாம் என்பதனைக் குறித்து கூறியுள்ளேன். ஆசிரியர்கள் அனைவரும் பயன்படுத்தி தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு இவ்வகையான பயிற்சித்தாளினை உருவாக்கித் தருமாறு பணிவோடு வேண்டுகிறேன். இல்லையெனில் என்னுடைய இந்த வலைதளத்தினை பகிர்ந்து உதவுங்கள்.
PDF FILE ஐ எவ்வாறு உருவாக்குவது என்ற காணொளியைக் காண
LIVE WORKSHEET இல் எவ்வாறு கணக்குத் துவங்குவது என்ற காணொளியைக் காண
பயிற்சித்தாளில் பொருத்துக செயல்பாட்டினை எவ்வாறு உருவாக்குவது என்பதனைக் காண
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது