1930ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைகூவலை நினைவுகூர ஜனவரி 26ஆம் நாள் விடுதலை நாளாக காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அன்றைய நாளில் நகர்ப்புறங்களிலும் சிற்றூர்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்தியடிகள் கீழே கண்டவாறு பரிந்துரைத்த விடுதலை நாள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
28ஆம் நாள் ஆகஸ்ட் மாதம் 1947 ஆண்டு ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4ஆம் நாள் அரசியமைப்பு சட்டவாக்கயவையில் சமர்ப்பித்தது.
2 ஆண்டுகள், 11 மாதங்கள், 166 நாட்கள் பொது திறந்த அமர்வுகளில், சந்தித்து அரசியலமைப்பின் ஏற்புக்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக ஜனவரி 24ஆம் நாள் 1950 ஆம் ஆண்டு 308 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது.
அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து, 1950ஆம் ஆண்டில், விடுதலை பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய விடுதலை நாளான ஜனவரி 26ஆம் நாளை, மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது.
1950 முதல் இது குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இக்கட்டுரை கட்டடற்ற கலைகளஞ்சியமான விக்கிப்பீடியாவிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது.
குடியரசு என்றால் என்ன?
மக்களே தங்களை ஆள்பவர்களைத் தேர்வு செய்யும் உரிமை கொண்டுள்ள அமைப்பு 'ஜனநாயகம்' (Democracy) என்று அழைக்கப்படுகிறது.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அதிகாரத்தில் இருக்கும் அரசு அமைப்பு 'குடியரசு' (Republic) எனப்படுகிறது.
குடியரசு நாள் என்றால் என்ன? குடியரசு நாள் ஏன் கொண்டாடப்படுகிறது?
இந்திய அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த நாள் குடியரசு நாள் ஆகும்.
இந்திய அரசமைப்புச் சட்டம் என்பது இந்தியாவின் ஆட்சி நிர்வாகத்திற்கான விதிகளைக் கொண்டுள்ள ஆவணம் ஆகும். அதற்கு முன் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்திய அரசுச் சட்டம், 1935 (Government of India Act , 1935) இந்த தகுதியைப் பெற்றிருந்தது.
இந்தியா எப்பொழுது அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டது?
1947 ஆகஸ்டு 29 அன்று பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் தலைமையில் அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு உருவாக்கப்பட்டதுஅம்பேத்கர் தலைமையிலான அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவால் (Drafting Committee) உருவாக்கப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டம், 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்திய அரசமைப்புச் சட்டம் முழுமையாக 1950, ஜனவரி 26 அன்றுதான் அமலுக்கு வந்தது என்றாலும், குடியுரிமை, தேர்தல், இடைக்கால அரசு, இடைக்கால நாடாளுமன்றம் உள்ளிட்டவை குறித்த சரத்துகள் உடனடியாக அமலுக்கு வந்தன.
ஜனவரி 26ஆம் தேதி குடியரசு நாளாக எப்படி ஆனது?
1929 டிசம்பரில், பிரிக்கப்படாத இந்தியாவின் லாகூர் நகரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பூர்ண சுதந்திர (முழு விடுதலை) தீர்மானம் நிறைவேறியது.
1930 ஜனவரி 26 அன்று, ஆண்டுதோறும் அந்தத் தேதியை விடுதலை நாளாக அனுசரிக்க நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்தது.
இந்தியா விடுதலை அடைந்த பின்னர் ஜனவரி 26 அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வரும் குடியரசு நாளாக அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது.
குடியரசு தின கொண்டாட்டங்களின் போது மாநில தலைநகரங்களில் யார் இந்திய தேசியக் கொடியை ஏற்றுவார்கள்?
1973 வரை மாநில தலைநகரங்களில் அந்தந்த மாநில ஆளுநர்தான் குடியரசு நாள், விடுதலை நாள் ஆகிய இரு கொண்டாட்டங்களின்போதும் தேசியக் கோடியை ஏற்றினார்கள்.
அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றுவதைப் போல மாநில முதல்வர்களும் விடுதலை நாள் கொண்டாத்தின்போது கொடியேற்ற வேண்டும் என்று பிரதமராக இருந்த இந்திரா காந்தியிடம் வலியுறுத்தினார் .
அது ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்திய மாநிலத் தலைநகரங்களில் மாநில அரசு சார்பாக நடக்கும் குடியரசு நாள் கொண்டாட்டங்களில் 1974 முதல் ஆளுநர்களும், விடுதலை நாள் கொண்டாட்டங்களில் மாநில முதல்வர்களும் கொடி ஏற்றுகின்றனர்.
'பாசறை திரும்புதல்' (beating retreat) எனப்படும் நிகழ்வு எப்போது எங்கு நடக்கும் ?
குடியரசு நாள் அணிவகுப்பில் கலந்துகொண்ட முப்படை வீரர்களும் தங்கள் முகாமுக்கு திரும்பும் நிகழ்வு 'பாசறை திரும்புதல்' எனப்படும்.
குடியரசு நாள் கொண்டாட்டங்கள் நிறைவு பெறுவதைக் குறிக்கும் இந்த நிகழ்வு, ஆண்டுதோறும் ஜனவரி 29, மாலை இந்திய நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை அருகே அமைந்துள்ள விஜய் சவுக்கில் நடக்கும்.
இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தது யார்?
1916இல் தமது 'இந்தியாவுக்கு ஒரு தேசியக் கொடி' (A National Flag for India) எனும் நூலை வெளியிட்டார் பிங்கலி வெங்கய்யா.
1921இல் விஜயவாடாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின்போது மாகாத்மா காந்தியைச் சந்தித்த இவர் தேசியக் கொடியின் தேவை குறித்துக் கூறினார்.
காந்தியும் ஒரு புதிய கொடி வடிவமைப்பு வேண்டும் என்று கூறவே மூவர்ணக் கொடியின் நடுவே, ராட்டை இருக்கும் கொடியை உருவாக்கினார் பிங்கலி வெங்கய்யா.
சுதந்திரத்துக்கு முன் கொடியின் நடுவே இருந்த ராட்டை அசோகச் சக்கரமாக மாற்றப்பட்டது.
இந்தியாவின் முதல் குடியரசு தினத்தின் பொழுது இந்தியக் குடியரசு தலைவராக இருந்தவர் யார்?
ஜனவரி 24, 1950 அன்று அரசியல் நிர்ணய மன்றத்தின் உறுப்பினர்கள், அரசமைப்புச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் வகையில், அதன் இந்தி மற்றும் ஆங்கில பிரதிகளில் கையெழுத்திட்டனர்.
அன்று முதல் அந்த மன்றத்தின் தலைவராக இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் இந்தியக் குடியரசின் முதல் தலைவரானார்.
அரசியல் நிர்ணய மன்றம் இடைக்கால நாடாளுமன்றம் ஆனது.
இந்திய அரசமைப்புச் சட்டம் எத்தனை நாட்களில் உருவாக்கப்பட்டது?
டிசம்பர் 9, 1946 அன்று இந்திய அரசியல் நிர்ணய மன்றத்தின் முதல் கூட்டம் நடந்தது.
2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் கழித்து நவம்பர் 26, 1949 அன்று புதிய அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நன்றி: BBC - தமிழ்
இந்திய தேசியக் கொடி
இந்திய தேசியக் கொடி அல்லது மூவர்ணக் கொடி என்பது ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், ஜூலை 22, 1947 அன்று ஏற்கப்பட்ட இந்திய நாட்டின் கொடியாகும். ஜனவரி 26, 1950-இல் இந்தியா குடியரசு நாடாக ஆகும் வரையிலும், அதன் பிறகும் இக்கொடி தேசியக் கொடியாக விளங்கி வருகிறது.
நீள்சதுர வடிவில் உள்ள இக்கொடியில், மேலிருந்து கீழாக, காவி, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று வண்ணங்கள் உண்டு. கொடியின் நடுவில், கடற்படை நீல வண்ண நிறத்தில் அசோகச் சக்கரம் எனக் கூறப்படும் 24 கோல்களைக் கொண்ட சக்கரம் உண்டு. இச்சக்கரம் கொடியின் வெள்ளைப் பாகத்தின் உயரத்தில் நான்கில் மூன்று பாக உயரத்தைக் கொண்டது. கொடியின் முழு உயரம், முழு நீளத்தில் மூன்றில் இரண்டு பாகமாகும். இக்கொடி இந்தியப் போர்க் கொடியாகவும் விளங்கும்.
இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் சுரையா தியாப்ஜி ஆவார்., ஆனால் பொதுவாக பிங்கலி வெங்கைய்யா வடிவமைத்ததாகச் சொல்லப்படும் கொடியில் இராட்டை சின்னம் இடம் பெற்றிருக்கும். அரசியல் முறைப்படி, தேசியக்கொடியைக் கையால் நெய்த காதி துணியில் செய்ய வேண்டும். தேசியக் கொடியின் வெளிப்படுத்துதல், கையாள்தல் முறைகள், இந்திய கொடிச் சட்டத்தால் ஆளப் படுகிறது.
இந்திய தேசியக் கொடிப்பற்றிய முழு தகவல்கள் அறிய இங்கே சொடுக்கவும்
குடியரசு தின சிறப்பு வினாடி - வினாவில்
பங்கேற்க CLICK HERE என்பதனை அழுத்தவும்
Happy republic day
ReplyDeleteWish you happy republic day
ReplyDeleteHappy Republic Day
ReplyDeleteHappy Republic Day
ReplyDeleteHappy republic day to all
ReplyDeleteGreat
ReplyDeleteHappy republic day to all my Brothers and sisters
ReplyDeleteI got 72%
ReplyDeleteYou all so try
I wish you to get centum