நாள் : 29-11-2021 முதல் 04-12-2021
வாரம் : நவம்பர் - இறுதி வாரம் வாரம்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
( புத்தாக்கப் பயிற்சி)
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : புத்தாக்கப்பயிற்சி 7முதல் 9
நோக்கம் :
Ø கடித வகைகள் அறிதல்.
Ø கடிதம் எழுதும் முறைகள் அறிதல்
Ø மாணவர்களின் சிந்தனை ஆற்றலை வளர்த்தல்
Ø பிறமொழிச் சொற்களுக்கான இணையான தமிழ்ச்சொற்கள் அறிதல்
கற்றல் விளைவுகள்:
Ø
பல்வேறு பாடப்பொருள்களைப் பல்வேறு நோக்கங்களுக்காக எழுதும் போது பொருத்தமான
சொற்கள், தொடர்கள், சொற்றொடர், மரபுத் தொடர், நிறுத்தற் குறியீடுகள் மற்றும் பிற
இலக்கணக் கூறுகளை பயன்படுத்துதல்.
Ø
புதிய சொற்களை அறிதல், அகராதிகளைப் பார்த்து அவற்றின் பொருள்களை புரிந்து
கொள்ள முயலுதல்
கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் :
Ø
செய்தியை எழுத்து வடிவில் பரிமாற்றம் செய்வது கடிதம் அல்லது மடல்
Ø
கடித வகைகள் : 2
Ø
உறவு முறைக்கடிதம்,அலுவலகக் கடிதம்.
Ø
அலுவலக கடிதம் எழுதும் படிநிலைகள் அறிதல்.
Ø
விடுகதையின் பொருள் அறிதல்
Ø
மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலை வலுப்படுத்துதல்.
Ø
பிற மொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் அறிதல்.
Ø
டிரஸ்ட் - அறக்கட்டளை
Ø
லைப்ரரி - நூலகம்
Ø
வருஷம் - ஆண்டு
Ø
கும்பாபிஷேகம் – குட முழக்கு
வலுவூட்டல்:
Ø கற்பித்தல் செயல்பாடுகளை விளையாட்டு முறையில்
மாணவர்களுக்கு மீண்டும் நினைவூட்டி பாடப்பொருளை
வலுவூட்டி மாணவர்களை வகுப்பறையில் மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
மதிப்பீடு:
Ø
கடிதத்தின் வகைகள் யாவை?
Ø
அலுவலகக் கடிதத்தில் இடம் பெற
வேண்டியவை யாவை?
Ø
மழைக்காலத்தில் குடை பிடிப்பான் அவன் யார்?
Ø
பிறமொழிக்கு நிகரான தமிழ்ச்சொற்கள் தருக:-
o
காலண்டர் -
o
ஸ்கூல் பெல் -
o
ப்ரண்ட்ஸ் -
தொடர்பணி:
Ø உங்கள் பகுதிக்கு சாலை வசதி வேண்டி நகராட்சி ஆணையருக்கு விண்ணப்பம் வரைக.
Ø உனக்கு தெரிந்த விடுகதைகள் -
10 எழுதி வருக
Ø அன்றாட வாழ்வில் பயன்படுத்தக் கூடிய பிறமொழிச் சொற்களை அடையாளம் கண்டு அவற்றை தமிழ் சொற்களாக எழுதி வருக.
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை
ஏழாம் வகுப்பு விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்
நவம்பர் இறுதி வார மற்ற வகுப்பு பாடக்குறிப்பேடுகள் பெற
- ஆறாம் வகுப்பு - பாடக்குறிப்பேடு
- ஒன்பதாம் வகுப்பு - பாடக்குறிப்பேடு
- பத்தாம் வகுப்பு - பாடக்குறிப்பேடு
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது