ஆறாம் வகுப்பு
தமிழ்
பருவம் – 2
இயல் – 2 – உரைநடை உலகம் – தமிழ்ர் பெருவிழா
பயிற்சித்தாள் – 16 ( விடைகள் மட்டும் )
1. ஆ. பொங்கல்
2. கர்நாடகம் – அறுவடைத் திருவிழா.
காரணம் : அறுவடை திருநாள் கர்நாடக மாநிலத்தில் மகரசங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
3 பொருத்துக.
விழாக்கள்
கொண்டாடக் காரணம்
அ. காணும் பொங்கல்
4. உறவினர் இல்லம் செல்லல்.
ஆ. போகித் திருநாள்
1. பழையனவற்றைப் போக்குதல்
இ. உழவர் திருநாள்
2. மாடுகளுக்கு நன்றி சொல்லல்
ஈ. பொங்கல் திருநாள்
3. கதிரவனுக்கு நன்றி சொல்லல்
4. பொங்கல் விழா என்பது யாது?
இயற்கை, நன்றியுணர்வு, உழைப்பு, பண்பாடு ஆகியவற்றைப் போற்றும் விழாவே பொங்கல் விழா ஆகும்.
5. அ. 2021 + 31 = 2052
ஆ. 2010 + 31 = 2041
6.
உழவர்களின் பணிகள்
உழவர்களுக்கு உதவும் கருவிகள்
நாற்றுநடல்
விதைத்தல்
உரமிடுதல்
களை எடுத்தல்
அறுவடை செய்தல்
கலப்பை
ஏர்
மண்வெட்டி
7. மாவிலைத் தோரணம் கட்டுவது வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்களை வெளியேற்றுவதால் கட்டப்படுகிறது.
காப்புக்கட்டு என்பது சடங்கல்ல. அது ஒரு மூலிகைப் பெட்டி.காப்பு கட்டில் இடம் பெறுவது
ஆவாரை, சிறுபீளை, வேப்பிலை, மாவிலை, தும்பை, பிரண்டை. காலப்போக்கில்
தற்பொழுது ஆவாரை, சிறுபீளை, வேப்பிலை இவை மூன்றும் தான் இடம் பெறுகின்றன.
இந்த மூன்றின் குணம் அறிவோமா.
1. ஆவாரை : “ ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ” என்கிறது சித்தர் பாடல். இந்த ஆவாரை சர்க்கரை மற்றும் புற்று நோய்களுக்கு தீர்வாகிறது.இதன் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து தேன் அல்லது பனங்கருப்பட்டி கலந்து அருந்தினால் உடல் புத்துணர்வு பெறும். சரும நோய்கள் குணமாகும்.
2. சிறு பீளை : சிறுநீர் கல்லை உடைக்கும் அபாரமான சக்தி படைத்தது.
3. வேப்பிலை : காற்றில் பரவும் கிருமிகளைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.
8. ஏறுதழுவுதல், மாடு பிடி விளையாட்டு, சல்லிக்கட்டு,மஞ்சு விரட்டு என பல்வேறுப் பெயர்களில் வழங்கப்படும் இந்த வீர விளையாட்டு தமிழர்களின் மரபுகளில் ஒன்று. பண்டைய காலத்தில் மாட்டை அடக்குபவரே சிறந்த வீர்னாக கருதப்படுவர். இன்றும் பொங்கல் விழாக்கள், ஊர் பண்டிகைகளில் இந்த ஏறுதழுவுதல் விளையாட்டு நடைப்பெற்றுக் கொண்டு இருக்கிறது.
9. முகில் : தாத்தா..... வயலில் என்ன பயிர் போட்டு இருக்கீங்க?
தாத்தா : இன்னும் எதுவும் பயிரிடலை.. நாளைக்கு ஆடி 18 பிறக்குது. ஆடி மாசத்துல தான் விதைப்போம். ஆடிப்பட்டம் தேடி விதை ன்னு சொல்லுவாங்க. அதனால ஆடியில் பயிரிடனும்.
முகில் : தாத்தா. நானும் அந்த பழமொழியைக் கேள்விப்பட்டு இருக்கிறேன். அதற்கானகாரணம் தான் தெரியவில்லை. கொஞ்சம் சொல்லுங்க தாத்தா...
தாத்தா : சொல்லுகிறேன் கேள். ஆடித் திங்களில் விதைப்பதற்கு சில காரணங்கள இருக்கு.
1. கடும் கோடையில் மண் இறுகி இருக்கும். ஆனி மாத மிதமான மழையில மண் இளகத் தொடங்கும்.
2. மண்ணில் நுண்ணுயிர்கள்,மண் புழு உருவாகத் தொடங்கும்.
3. புதிததாக முளைத்த சிறுச் செடிகளை மேய வரும் கால்நடைகளின கழிவுகளும் மண்ணில் சேர்ந்து உரமாகும்.
4. தமிழகத்தில் ஆனி,ஆடி,ஆவணி மூன்று மாதங்கள் மிதமான மழைப்பொழியும் மாதங்கள். இதனால் இவை வேளாண்மைக்கான மாதங்கள்.
5, ஆடியில் விதைக்கும் பயிர் நன்றாக விளைச்சலைத் தரும்.
முகில் : தாத்தா. மிக அருமை. ஆனால் இன்று காலம் மாறிவிட்டது அல்லவா?
தாத்தா : உண்மை தான். இதனால் தான் ஆடி 18 அன்று அணைகளிலிருந்து நீர் வெளியேற்றி பயிர் வளத்தை அரசு காக்கிறது. மீண்டும் மழை பெய்ய அனைவரும் அவசியம் மரம் நட வேண்டியது அவசியமாகிறது.
10. சேலம் -6
20-01-2021
அன்புள்ள நண்பன் கனிஷ்க்கு,
நலம் நலமறிய ஆவல். நாங்கள் இங்கு நலம். ஜனவரி மாதம் வந்தாலே உன்னுடைய நினைவு வந்துவிடுகிறது. ஒவ்வொரு முறையும் நீ, என்னிடம் பொங்கல் விழா கொண்டாட்டிய விதத்தை கேட்டுக் கொண்டு இருக்கிறாய். இந்த ஆண்டு கொரானா பெருந்தொற்றுக் காரணமாக நேரில் நாம் சந்தித்து பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பில்லாமல் போனாதால் இந்த கடிதம் வாயிலாக நான் பொங்கல் விழாவினை பகிர்ந்து கொள்ள விளைகிறேன். மார்கழி திங்கள் கடைசி நாள் எப்போதும் போல வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை எல்லாம் இந்த முறை எரிக்காமல், அந்த பொருட்களுக்கு தேவையானவர்கள் யார் எனக் கண்டு அவர்களுக்கு பகிர்ந்தளித்தேன். இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் சுற்றுப்புறம் தூய்மை பேணப்பட்டது. அடுத்து தை மாதத்தின் முதல் நாள் பொங்கல். வீட்டில் உள்ள அனைவரும் காலையில் எழுந்து நீராடி விட்டு, புத்தாடை அணிந்து, மாவிலைத் தோரணங்கள் வீட்டின் முகப்பில் கட்டி,கரும்பில் பந்தல் கட்டி, பானைக்கு வண்ணங்கள் இட்டு, உலையில் பொங்கல் வைத்து வழிபட்டு, கதிரவனுக்கு நன்றி செலுத்தினோம். அடுத்த நாள் எங்களுக்காக பாடுபட்ட கால்நடைகளுக்கு நன்றி சொல்லி உழவர் திருநாள் கொண்டாடப்பட்டது. காணும் பொங்கலுக்கு உறவினர் வீட்டுக்கு சென்று அங்குள்ளவர்களுடன் நன்கு பழகி உறவினை மேம்படுத்திக் கொண்டோம். இந்த பெருந்தொற்று வரும் ஆண்டாவது விலக வேண்டும் என வேண்டுவோம்.
நன்றி.
இப்படிக்கு,
உன் அன்பு நண்பன்,
முகில்.
உறைமேல் முகவரி.
பெறுநர்
இரா. கனிஷ்,
த/பெ. வெ.ராமகிருஷ்ணன்,
133/2, கன்னந்தேரி,
சேலம் – 637102.
பயிற்சித்தாள் -16க்கான விடைக்குறிப்புகள் - PDF FORMAT
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது