அரசுப் பொருட்காட்சி
உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று
வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.
குறிப்புச்சட்டகம் |
முன்னுரை |
பொருட்காட்சி |
நுழைவுச் சீட்டு |
பல்துறை அரங்கம் |
அங்காடிகள் |
பொழுதுபோக்கு |
முடிவுரை |
முன்னுரை :
எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப்பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வை இக்கட்டுரையில்
காண்போம்.
பொருட்காட்சி :
மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் பொருட்காட்சி நடைபெற்றது.
நுழைவுச் சீட்டு:
பொருட்காட்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல நுழைவு கட்டணம்
வசூலிக்கப்பட்டது.பெரியவர்களுக்கு 30 ரூபாயும்,சிறுவர்களுக்கு 15 ரூபாயும்
என நுழைவுச்சீட்டு நிர்ணயம் செய்யப்பட்டது.
பல்துறை அரங்கம் :
அரசின் சாதனைகள் கூறும் பல்வேறு அரசுத்துறை அரங்கங்களும்,தனியார்
பொழுது போக்கு நிறுவனங்களும் நிறைய இருந்தன.
அங்காடிகள்:
வீட்டு உபயோகப் பொருட்கள்,விளையாட்டுப்
பொருட்கள், கைவினைப் பொருட்கள் என பல்வேறு பொருட்களும் ஒரே இடத்தில்
கிடைத்தன.
பொழுதுபோக்கு :
சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாட பொம்மை அரங்கம் போன்ற
பல்வேறு அரங்கங்களும்,இராட்டின்ங்களும் நிறைய இருந்தன.
முடிவுரை:
எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று
வந்த நிகழ்வினை இக்கட்டுரையில் கண்டோம்.
Quotes?
ReplyDeletenice, it is help full
ReplyDelete