ஆறாம் வகுப்பு
தமிழ்
பருவம் – 2
இயல் – 2 – விரிவானம் – மனம் கவரும் மாமல்லபுரம்
பயிற்சித்தாள் – 17 ( விடைகள் மட்டும் )
1. மாமல்லன். மற்போரில் சிறந்தவன் என்பதால் அப்பெயர் வழங்கப்பட்டது.
2. கயல் : வணக்கம் ஐயா! தாங்கள் யார்?
மாமல்லன் : என் பெயர் நரசிம்மவர்மன். உன் பெயர் என்ன?
கயல் : என்பெயர் ம.தி.கயல்
மாமல்லன் : நன்று. எதைப்
பார்த்துக்கொண்டிருக்கிறாய்?
கயல் : இக்கோவிலைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இது கோவிலா?
இரதமா? எனத் தெரியவில்லை.
மாமல்லன் : ஒரே பாறையில் செதுக்கப்பட்ட கோவில் இது. இரதம் போன்ற தேர்வடிவத்தில் இருப்பதனால். இதனை ‘ இரதக்கோவில்’ என்பர்.
3. பஞ்சபாண்டவர்கள் : தர்மன், பீமன், நகுலன்,சகாதேவன், அர்ச்சுனன்
4. கலை: கல்லிலே கலை வண்ணம் கண்டான்.
இரதம் : அம்பாள் இரதத்தில் உலகை பவனி வருகிறாள்.
5.” கயல்,கயல் எழுத்திரு. இன்று மாமல்லபுரத்திற்குக் கல்விச் சுற்றுலா செல்ல வேண்டும் என்று கூறினாயே! இன்னும், தூங்கிக் கொண்டிருக்கிறாய். என்னும் தாயின் குரல் கேட்டுக்
கண் விழித்தாள் கயல்.
6. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவ நாட்டை ஆட்சி செய்தவர் மகேந்திரவர்ம பல்லவர்,அவரின் காலத்தில் மகாபலிபுரத்தில் சிற்பப் பணித் தொடங்கியது. இங்குள்ள சிற்பங்கள் எல்லாம் நான்கு தலைமுறைகள் கடந்து உருவாக்கப்பட்டது. அங்குள்ள குன்றுகளை எல்லாம் செதுக்கினர். கோயிலாக தோன்றிய குன்றை கட்டுமானக் கோயிலாக மாற்றினர். ஒரு குன்றினைக் குடைந்து குடைவரை கோயிலை உருவாக்கினர். அது பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது. மேலும் ஒரு பாறையில் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்ற
சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவை உயிருள்ளவற்றை நேரில் பார்ப்பது போல அழகாக உள்ள புடைப்புச் சிற்பங்கள். மேலும் ஒற்றைக் கல் கோயில்கள், அர்ச்சுனன் தபசு,ஆகாய
கங்கை போன்றவை மிக அழகாகவும்,பார்ப்பதற்கு உண்மையிலேயே இருப்பது போல அனைத்து சிற்பங்களும் உள்ளதால் இது தமிழகத்தின் மிகப்பெரிய சிற்பக்கலைக் கூடமாகிய மாமல்லபுரம் என்ற சிறப்பு பெறுகிறது.
7. 1. நெய்பவர் – நெசவாளி
2. உழுபவர் – விவசாயி
3. கவிதை எழுதுபவர் – கவிஞர்
4. பானை செய்பவர் – குயவர்
5. மர வேலை செய்பவர் – தச்சர்
8. மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்கள் யாவும் பல்லவர் காலத்தில் ஏழாம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டவை. இங்குள்ள சிற்பங்கள் இன்றளவும் உயிர்ப்போடும், உண்மையோடும்
இருக்கிறது. இதனால் மாமல்லபுரம் தமிழகத்தின் மிகப்பெரிய சிற்பக் கலைக்கூடம் என்னும் பெயரைப் பெறுகிறது. மாமல்லபுரத்தில் காண வேண்டிய இடங்களான அர்ச்சுனன்தபசு, கடற்கரைக் கோயில், பஞ்சபாண்டவர் இரதம்,புலிக்குகை, குகைக்கோவில்,திருக்கடல்மல்லை,கண்ணனின் வெண்ணெய்ப் பந்து. இந்த இடங்கள் எல்லாம் மிக அழகாகவும், இன்றும் உயிர்ப்போடும் உள்ளது. மாமல்லபுரத்தில் கலங்கரை விளக்கம் கடல் பயனாளிக்கு நன்மை பயக்கிறது. இவ்வாறு உள்ள இந்த பாரம்பரியச் சின்னங்களை போற்றிப் பேணிக்காப்பது நம் கடமை ஆகும்.
9. 1. சிற்பங்கள் எப்படி நுணுக்கமாக செய்கிறீர்கள்?
2. சிற்பம் செய்ய பயன்படும் பொருட்கள் யாவை?
3. சிற்பம் எல்லாக் கல்லிலும் செதுக்க முடியுமா?
4. பாறைகளில் சிற்பம் செதுக்குவதற்கும், கல்லில் செதுக்குவதற்கும் உள்ள வேறுபாடு என்ன?
5. ஒரு சிற்பம் செதுக்க எத்தனை நாட்கள் ஆகும்?
10. கலை
கோடுகளில் ஓவியம் கண்டேன்
வண்ணங்களிலே எண்ணங்களை கண்டேன்
எதுகை,மோனைகளில் கவிதைக் கண்டேன்
கல்லிலே கலை வண்ணம் கண்டேன் - அதை
மா மல்லபுரத்தினிலே கண்டேன்
பயிற்சித்தாள் -17க்கான விடைக்குறிப்புகள் - PDF FORMAT
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது