ஆறாம் வகுப்பு
தமிழ்
பருவம் – 2
இயல் – 3 – கற்கண்டு – சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள்
பயிற்சித்தாள் – 21 ( விடைகள் மட்டும் )
1. 1. அண்மைச்சுட்டு
2. அ. தவறு
ஆ. சரி
3.
சுட்டுச் சொற்கள்
சுட்டுவகை
அ. இவன்
3. அகச் சுட்டு
ஆ. இம்மாடு
4. அண்மைச் சுட்டு
இ. அக்குளம்
1. சேய்மைச் சுட்டு
ஈ. இந்த ஆடு
2. சுட்டுத் திரிபு
4. மாறன் துணிக்கடைக்குச் சென்று விற்பனையாளரிடம் “ ஆயத்த ஆடைகள் பகுதி எங்குள்ளது? “ என்று வினவினான். “ யாருக்கு ஆடை வேண்டும்? உனக்கா? பெரியவர்களுக்கா?” என்று விற்பனையாளர் கேட்டார்.” ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்?.சிறுவர்களுக்கான ஆடைகள் இல்லையோ? என்று வினவினான். “ நீ கேட்பது உன் அளவுக்குரிய ஆடை தானே? அதோ அந்தப் பகுதியில் இருக்கிறது” என்றார் விற்பனையாளர்.
5. இதனை – அண்மைச் சுட்டு
அதனை – சேய்மைச் சுட்டு
6. அ,இ ஆகிய சுட்டு எழுத்துகள் அந்த, இந்த எனத் திரிந்து சுட்டுப் பொருளைத் தருவது சுட்டுத்திரிபு எனப்படும்.
எ.கா: அம்மரம் – அந்த மரம்
இவ்வீடு – இந்த வீடு
7. வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு வினா எழுத்துகள் என்று பெயர். சில வினா எழுத்துகள் சொல்லின் முதலில் இடம் பெறும்.சில வினா எழுத்துகள் சொல்லின் இறுதியில் இடம் பெறும்.
எ,யா, ஆ, ஓ, ஏ – ஐந்தும் வினா எழுத்துகள் ஆகும்.
· மொழியின் முதலில் வருபவை – எ,யா ( எங்கு,யாருக்கு)
· மொழியின் இறுதியில் வருபவை – ஆ, ஓ ( பேசலாமா, தெரியுமோ )
· மொழி முதலிலும், இறுதியிலும் வருபவை – ஏ ( ஏன், நீ தானே )
8. சென்றான் – ஆ - நீ சென்றாயா?
எ – எங்கு சென்றான்?
யா – யாருடன் சென்றான்?
ஓ – நீயும் சென்றாயோ?
ஏ – ஏன் சென்றான்?
9. அன்பு அங்கே இங்கே எனச் சுற்றி வந்து கொண்டிருந்தான். அதுகண்டு அவன் வீட்டினர், நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதே என அஞ்சினர். அன்புவின் பாட்டி, “ இப்படி வா, உட்கார்”, என்று அவனை அழைத்தனர். அவனும் “என்ன,பாட்டி,சொல்லுங்கள்” என்று அருகில் சென்றான். பாட்டி அவனுக்குத் தாயம்,பல்லாங்குழி,பரமபதம்,சதுரங்கம் போன்றவற்றைக் கற்றுத் தந்தார்.
10. 1. மீன் பிடிக்கக் கடலுக்குள் சென்றவர்கள் யாவர்?
2. மீனவர்கள் மீன் பிடிக்க எங்குச் சென்றனர்?
3. மீனவர்கள் எதற்கு கடலுக்குச் சென்றார்கள்?
பயிற்சித்தாள் -21க்கான விடைக்குறிப்புகள் - PDF FORMAT
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது