ஆறாம் வகுப்பு
தமிழ்
பருவம் – 2
இயல் – 1 – கவிதைப்பேழை – பாரதம் அன்றைய நாற்றங்கால்
பயிற்சித்தாள் – 22 ( விடைகள் மட்டும் )
1. ஆ. கவிஞாயிறு
2. அ. இந்தியா
ஆ. காளிதாசரும்,கம்பரும்
3.
அ. மெய்
3. உண்மை
ஆ. தேசம்
4. நாடு
இ. கன்னிக்குமரி
1. கூந்தல்
ஈ. காஷ்மீர்
2. பூ
4. அ. திருக்குறள்.
அ. திருக்குறள் பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்று.
ஆ. மனிதன் மனிதனாக வாழ தேவையான அறக் கருத்துகளை கூறுகிறது.
இ. திருக்குறளை இயற்றிய்வர் திருவள்ளுவர்.
ஈ. திருக்குறளுக்கு வாயுறை வாழ்த்து, பொய்யாமொழி,தெய்வநூல் என பல சிறப்பு பெயர்
களைக் கொண்டது.
உ. உலக நாடுகளில் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரே தமிழ் நூல் திருக்குறள் மட்டுமே..
ஆ. அறம்
1. அறம் என்பது ஒழுக்க நெறியைச் சேர்ந்தது.
2. சமூகத்தில் ஒருவர் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என்ற பார்வையைக் குறிக்கிறது.
3. இது நல்லவை,தீயவை என்பன தொடர்பில் ஒரு சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடத்தைகளின் தொகுப்பு எனலாம்.
4. தர்மம் தலைக்காக்கும், தக்க சமயத்தில் உயிர்காக்கும் என்ற வரிகளுக்கு ஏற்ப ஒருவர் அறத்துடன் செயல்பட்டால் அவரை இந்த சமூகம் தாங்கி நிற்கும்.
5. அறம் என்பது நல்ல பண்பை உணர்த்துவது. நீதி வழுவாத் தன்மையை குறிப்பிடுவது.
இ. ஒற்றுமை
1. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதற்கிணங்க மக்கள் அனைவரும் இச்சமூகத்தில்ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.
2. மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து எந்த காரியத்தை செய்தாலும் அது நன்மை பயக்கும்.
3. ஒற்றுமை என்பது பொருள் மற்றும் ஊனர்வு ஆகிய இரண்டையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொளகிறது.
4. செஞ்சிலுவை சங்கம் ஒரு மனிதாபிமான நோக்கத்துடன் ஒற்றுமையுடன் ஏற்படுத்தப்பட்ட ஒரு பக்கச் சார்பற்ற அமைப்பாகும்.
5. ஒற்றுமை உலகை மாற்றுகிறது.அது சிறந்ததாகவும், வாழக்கூடியதாகவும் மேலும் கண்ணியமாகவும் ஆக்குகிறது.\
5. அ. அறிவியல்
ஆக்கப்பூர்வமான செயல்களாம்
விண்ணில் பறந்து செல்லுமாம்
நிகழ்வுகளை இருந்த இடத்தில் காட்டுமாம்
வளர்ச்சியை நோக்கி செல்லுமாம்
அது அறிவியல் சிந்தனையாம்.
ஆ. புதுமைகள்
ஒரு விரலில் இட்ட மை
அது நாட்டை ஆளும் புதுமை
எழுது கோலில் இட்ட மை
அது கவிதைப் படைக்கும் புதுமை
இமைகளில் இட்ட மை
புதுமை படைக்கும் பதுமை
இ. ஆறு
மலை தனில் தோன்றி
கல்லிடையே புரண்டோடி
கடல் தனில் கலக்கு மாறே
மக்கள் மனங்களிலே காணும்
வன்மங்களை களைய விரைந்தோடி
அன்பில் கலக்க வா ஆறே.....
ஈ.புல்வெளி
நிலமகளுக்கு பச்சை வண்ண பட்டாடை
அது தேசம் காணும் நூலாடை
எங்கெங்கு காணினும் பச்சை வண்ணம்
அது வளத்தை பேணும் வண்ணம்
6. நமது நாடு வளம் பொருந்திய நாடு. இங்கு இயற்கை வளங்கள் மட்டுமன்றி புதுமைகள் பலவும் கண்டது இந்திய நாடு.அதனால் தான் இந்திய நாடு பூமியின் கிழக்கு வாசலாக திகழ்கிறது.
7. மேற்கு திசையில் தோன்றும் நதிகள் கரைப்புரண்டு ஓடி கிழக்கு திசையை வளமாக்குகிறது.
8. புல்வெளி யெல்லாம் பூக்கா டாகிப்
புன்னகை செய்த பொற்காலம்!
கல்லைக் கூட காவிய மாக்கிக்
கட்டி நிறுத்திய கலைக்கூடம்!
9. எதுகை : அன்னை – அன்னிய
மோனை : அன்னை – அன்னிய
அண்ணல் – அறத்தின்
நாட்டின் - நாடு
கைத்தடி – கோலாக
10. அண்ணல் காந்தி
மகாத்மா காந்தி என்று அழைக்கப்படும் மோகன்தாஸ் காந்தி 1869 – ஆம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி குஜராத் மாநிலம் போர்ப்பந்தலில் கரம்சந்தி காந்தி – புத்திலிபாய் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.
இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்ட முக்கியத் தலைவர்களில் இவருடைய பெயர் தான் முதன்மையாக உச்சரிக்கப்பட்டது. இந்திய விடுதலை போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் “ விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை “ என அனைவராலும் அழைக்கப்பட்டார். சத்தியாகரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழிவகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது. இவரது பிறந்த நாள் காந்தி ஜெயந்தி
என்று இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இவருக்கு மகாத்மா என்னும் கெளரத்தை வழங்கியவர் இரவீந்திரநாத் தாகூர் ஆவார். காந்தி குஜராத்தி மொழியில் எழுதிய சுயசரிதை, சத்திய சோதனை என்ற பெயரில் தமிழ் மொழியிலும், An Autobiography : The Story of My Experiments with Truth என்ற பெயரில் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது
பயிற்சித்தாள் -22க்கான விடைக்குறிப்புகள் - PDF FORMAT
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது