பயிற்சிப்புத்தகம் - ஆறாம் வகுப்பு - தமிழ் - தாள் -23க்கான விடைக்குறிப்புகள்

 

ஆறாம் வகுப்பு

தமிழ்

பருவம் – 2

இயல் – 1 – உரைநடை உலகம்தமிழ்நாட்டில் காந்தி

பயிற்சித்தாள் – 23 ( விடைகள் மட்டும் )

 

1.  . ரெளலட் சட்டம்

   .தென்னாப்பிரிக்கா

 

2.

. பாரதியார்

3. தமிழ்நாட்டின் கவிஞர்

. இராஜாஜி

1. கலந்தாய்வுக் கூட்டம் ஏற்பாடு

. .வே.சாமிநாதர்

4. வரவேற்புக்குழுத் தலைவர்

. காந்தியடிகள்

2. எளிமையின்  திருக்கோலம்

 

3. .) மனிதர்களிடம் உயர்வு தாழ்வு பாராட்டக் கூடாது             என்பதில் காந்தியடிகள் உறுதியாக இருந்தார்.

 

  ) நமது இந்திய தேசியக் கொடி மூவர்ணங்களால் ஆனது.

 

4. தமிழ்க்கையேடு, திருக்குறள்

 

5.                                  காமராசர்

          விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு சூலை 15 ஆம் தேதி காமராசர் பிறந்தார். இவர்தம் பெற்றோர் குமாரசாமி நாடார்  மற்றும் சிவகாமி அம்மாள். முதலில் இவருக்குக் குலத் தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், அவரை ‘” ராசாஎன்றே அழைத்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி,    காமராசுஎன ஆனது. இவர் காந்தியடிகள் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸில் இணைந்தார். பின்னர் பல்வேறு கட்சிப் போராட்டங்களில் பங்கேற்றார். இவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர். இவர் 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் ஆனார். இவர் ஒன்பது ஆண்டுகள்  தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, பிரதமரை உருவாக்குபவர், பெருந்தலைவர் என்றெல்லாம் அழைக்கப்பட்டார். இவர் கருப்பு காந்தி   என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். காமராசரின் மறைவுக்கு பின், 1976இல் இந்திய அரசு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கியது.    

 

                              அப்துல் கலாம்    

          ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதின் அப்துல் கலாம் பொதுவாக ஏ.பி.ஜே. அப்துல்கலாம் என்று குறிப்பிடப்படிகிறார். இவர் இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும், நிர்வாகியும் ஆவார். இவர் தமிழ்நாட்டில் இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். கலாம் குடியரசு தலைவராக பதவி ஏற்பதற்குமுன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் ( DRDO ), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் ( ISRO ) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில் நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்பட்டார். கலாம் தனது இந்தியா 2020 என்ற புத்தகத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற திட்டங்களை முன்மொழிந்தார். இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உட்பட பல மதிப்புமிக்க விருதுகளை பெற்றுள்ளார். இவரின் பொன்மொழிகள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவற்றுள் சிலவற்றை காணலாம்.

1. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம்,என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

2. முன்னோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒரு வேளை பின் நோக்கி வர நேரிட்டால்       யாராவது உதவுவார்கள்.

3. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒரு போதும் உதவி செய்யாது.

4. நீ தூங்கும் போது வருவது கனவலல். உன்னை தூங்க விடாமல் எது செயல்படுகிறதோ      அதுவே கனவு.

5. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி. அழகான பசி. ஒரு முறை சுவைக்கப்   பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

6. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.  

 

6. பாரதியார் சென்றதும்,” இவர் யார்?” என்று காந்தி வியப்புடன் கேட்டார்.அதற்கு, “ இவர் தமிழ்நாட்டின் சொத்துஎன்று பதிலளித்தார் இராஜாஜி. 

 

A

7.

 


1. குற்றால அருவியில் அனைவருக்கும் நீராட அனுமதி இருந்தது.ஆனால் அருவிக்கு செல்லும் வழியில் இருந்த கோயிலுக்கு செல்ல அனுமதி இல்லை. ஒரு சாராருக்கு தடை இருந்தது. இதனால் காந்தியடிகள் அருவியில் நீராட வில்லை..

2. மனிதர்களிடம் உயர்வு தாழ்வு பாராட்டக்கூடாது என்பதில் காந்தியடிகள் உறுதியாக இருந்தார்.

 1. 1919 ஆம் ஆண்டு காந்தியடிகள் சென்னை வந்த போது ஆங்கில அரசு ரெளலட் சட்டம் என்னும் கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்தி இருந்தது.

2. அதனை எதிர்த்து பெரிய போராட்டத்தை நடத்தக் காந்தியடிகள் திட்டமிட்டார். அதைப்பற்றிய கருத்தாய்வுக் கூட்டம் இராஜாஜியின் வீட்டில் நடைபெற்றது.

1. 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காந்தியடிகள் புகைவண்டியில் மதுரைக்கு வந்தார்.செல்லும் வழியில் மக்கள் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே அணிந்திருந்ததைக் கண்டார்.இந்த காட்சி அவரை பெரிதும் பாதித்தது.

2. அன்றுமுதல் அவர் வேட்டியும் துண்டும் மட்டுமே அணியத் தொடங்கினார்.

 

8. மனிதர்களிடம் உயர்வு தாழ்வு பாராட்டக்கூடாது எனபதில் காந்தியடிகள் உறுதியாக இருந்ததை இதன் மூலம் அறிய முடிகிறது.

 

9. . வெள்ளையனே வெளியேறு இயக்கம்

  . அந்நியத் துணிகளை மிதித்து, கடைகளின் முன் மறியல் செய்ததற்காகக் கைது செய்யப்பட்டார்.

 

10.                         உப்பு சத்தியாகிரகம்

        பிப்ரவரி 1930இல் ஆங்கிலேய அரசு, இந்தியாவில் இந்தியர்களால் தயாரிக்கப்படும் உப்புக்கு வரி விதித்தது. மேலும், இந்தியாவில் இந்தியரால் தயாரிக்கப்படும் உப்பை பிரிட்டிஷ் அரசாங்கத்தை தவிட வேறு யாரும் விற்கக் கூடாது என்ற சட்டத்தையும் இயற்றியது. இதை விலக்கிக் கொள்ளுமாறு காந்தி பிரிட்டிஷாரிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. சத்தியாகிரக முறையில் இதை எதிர்க்க முடிவெடுத்த காந்தி மார்ச்2,1930 அன்று 78 சத்தியாகிரகிகளுடன் அகமாதபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார். 23 நாட்கள் நடைப் பயணத்திற்குப் பிறகு, தன் சகாக்களுடன் தண்டி கடற்கரை வந்து சேர்ந்த காந்தி, அங்கிருந்த கடல் நீரை காய்ச்சி உப்பு தயாரித்து பிரிட்டிஷ் சட்டத்திற்கு எதிராக பகிரங்கமாக பொதுமக்களுக்கு விநியோகித்தார். மேலும் இந்தியாவில் கடலோரத்தில் இருந்த அனைத்து இந்தியர்களையும் இது போல் உப்பு தயாரித்து பயன்படுத்தச் சொன்னார். இந்தியாவின் பல இடங்களில் இது போல் நடந்தது. காந்தி உட்பட பல்லாயிரக் கணக்கான இந்தியர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். வேறு வழியில்லாமல் பிரிட்டிஷ் அரசாங்கம் காந்தியுடன் பேச்சு வார்த்தை நடத்தி இறுதியில் வரியை நீக்கிக் கொண்டது. உப்பு சத்தியாகிரகம் என்று அழைக்கப்படும் இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது.

   

 

  

 

பயிற்சித்தாள் -23க்கான விடைக்குறிப்புகள் - PDF FORMAT



About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...