இந்த கொரானா காலக் கட்டத்தில் பள்ளிகள் இயங்காமல் உள்ள நிலையில் மாணவர்கள் வீட்டிலிருந்து பயில வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது. இந்நிலை விரைவில் மாறி அனைவரும் பள்ளி சென்று பயிலும் காலம் விரைவில் வரும். அதுவரை மாணவர்கள் பாதுகாப்போடு இருந்து வீட்டிலிருந்தே கல்வி பயில தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சி வழிகாட்டுகிறது. மாணவர்கள் அதனை நன்றாக கவனித்து பாடங்களை பயில வேண்டும். மாணவர்கள் பாடங்களை பயில்வதோடு நில்லாமல் அதற்குரிய பயிற்சிகளையும் வீட்டில் செய்தால் தான் அந்த கற்றல் நிலையாக இருக்கும். அதனை மனதில்க் கொண்டு இந்த வலைதளம் பல்வேறு பயிற்சித்தாள்களை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. மாணவர்கள் இந்த பயிற்சித்தாள்களில் நன்கு பயிற்சி செய்து பல புதிய புதிய தகவல்களையும், தங்களின் வரையும்த்திறன்களையும் வளர்த்துக் கொள்ளும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இந்த பயிற்சித்தாள் பல்வேறு செய்தித்தாள்களிலே நாம் பார்த்து இருப்போம். புள்ளிகளையோ அல்லது எண்களையோ இணைத்து ஒரு ஓவியம் வரைவோம். அது மனத்துக்கு மகிழ்ச்சி தரும் ஒரு நிகழ்வாகும். சிறியோர் முதல் பெரியோர் வரை அவ்வாறு வரும் ஓவியங்களை கண்டிப்பாக வரைவோம். அது போன்றே இங்கு எண்களை இணைத்தால் நீங்கள் உருவம் பெறலாம். இதனால் மாணவர்களுக்கு கணிதத்தின் அடிப்படைத் திறன் எண்களை அடையாளம் காணுதல், நினைவில் இருத்தல் போன்ற செயல்பாடுகள் நிகழ்கின்றன. மேலும் மாணவர்கள் தாங்களாகவே மனம் ஒன்றி இந்த பயிற்சியில் ஈடுபடுவர். இது அவர்களுக்கு மன நிறைவைத் தரும் ஒரு மிகச் சிறந்த பயிற்சி. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது