மெல்லக் கற்கும் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட தமிழ் கட்டுரைகள்
இயல் -8 கடிதம் எழுதுதல்
1)முத்துக்குமார் தம் மகனுக்கு
எழுதிய கடிததைப்போல நீங்கள்
யாருக்குக் கடிதம் எழுத விரும்புகிறீர்கள்?
அப்படியொரு கடிதம் எழுதுக.
படித்து மகிழ்ந்த
நூல்பற்றி நண்பருக்குக் கடிதம் .
சென்னை 28.09.2019
அன்புள்ள நண்பா,
உன் கடிதம் கிடைத்தது . வீட்டில் உள்ளவர்கள் நலம் அறிந்து மகிழ்ந்தேன். உன் அறிவுரைப்படி பாடநூல்களைப்
படிப்பதோடு நின்றுவிடாமல், நல்ல பிற புத்தகங்களையும் படிக்கிறேன்.
கல்வி வளர்ச்சி நாள் அன்று தமிழாசிரியர்
காமராஜர் பற்றிய பல அரிய தகவல்களைப் பற்றிக் கூறி இருந்தார். தான் காமராஜர் வாழ்க்கை
வரலாறு நூலைப் படித்து அதிலிருந்து கருத்துகளைப் பகிர்ந்துக் கொண்டார் எனக் கூறியிருந்தார்.
நானும் எழுத்தாளர் மு.சரபோஜி எழுதிய காமராஜர் வாழ்வும் அரசியலும் என்ற நூல் வாங்கிப்
படித்தேன். தன்னலமற்ற ஒரு தலைவர் உருவான விதம் அறிந்துக் கொண்டேன். நீயும் அவரைப் போல்
ஆக வேண்டும் எனகூறியிருந்தாய் நிச்சயம் உனக்கு அந்த நூல் உதவியாக இருக்கும்.
சிறந்த நூல்களைத் தேடிப் படிக்கும் இயல்புடைய
நீ, நல்ல நூல்களைப் படித்தால், எனக்கு அவற்றைப் பற்றி எழுதி அறிமுகம் செய்யவும்.
வணக்கம்.
உன் அன்புள்ள நண்பன்,
சி.வாசு.
உறைமேல்முகவரி:
வெ.ராமகிருஷ்ணன்,
2 ,பாரதி நகர்,
சேலம்-6.
2) வகுப்பில்
நீங்கள் தேர்ந்தெடுத்த நண்பரின் சிறந்த பண்பைப் பாராட்டியும் அவர் மாற்றிக்கொள்ள வேண்டிய
பண்பையும் பெயரைக் குறிப்பிடாமல் கடிதமாக எழுதிப் படித்துக் காட்டுக .
அன்பு நண்பர்களே,
அனைவருக்கும் வணக்கம். நம் வகுப்பில் படிக்கும்
படிக்கும் நண்பன் ஓருவன், தன் பெயருக்கு ஏற்பப் பணவசதியிலும் அவன் செல்வந்தன்தான்!
தன்னோடு படிக்கும் மாணவர்களோடு வேறுபாடு கருதாமல் பழகுவான். பல்வேறு திறமைகளைக் கொண்டிருப்பவன்.
சோலையில் வண்ணத்துப் பூச்சிகளைப் பிடிப்பான்.
அவற்றின் சிறகுகளைப் பிடித்துவிட்டும், அவை தவிப்பதைப் பார்த்து, மகிழ்ச்சி அடைவான்.
பொன்வண்டுகளைப் பிடித்துகல்லோடு கட்டி, அவை திண்டாடும் காட்சியைக் கண்டு ரசிப்பான்.
நண்பர்களும் எப்படியோ போகட்டும் என்று விட்டுவிட்டார்கள்.
நம்மைவிட வலிமை குறைந்தவர்களை நாம்
துன்புறுத்தக் கூடாது என உணர வேண்டும் ., எந்த உயிருக்கும் துன்பம் செய்யக்கூடாது.
அன்பு நன்பன்,
கண்ணன்.
இயல் -8 அஞ்சல் அட்டையில் எழுதுதல்
வார
இதழ் ஒன்றில் படித்த கவிதையை/கதையைப் பாராட்டி அந்த இதழாசிரியருக்கு அஞ்சலட்டையில்
கடிதம் எழுதுக.
4,ஔவை நகர்,
கடலூர்-1.
30-09-2021.
மதிப்புமிகு இதழாசிரியருக்கு,
வணக்கம்.தங்களது
”தமிழ்விதை” என்ற இதழில் வெளியாகக் கூடிய கவிதைகளை விரும்பிப் படிக்கும் வாசகர் நான்.24-09-2021
அன்று வெளியான இதழில் திரைப்பட இயக்குநர் இரா.பார்த்திபன் அவர்களின் “கருணை” என்ற தலைப்பில்
வெளிவந்த கவிதையில்,
“கருவுற்றிருந்தால்
ஒரு குழந்தைக்கு மட்டுமே
தாயாகியிருப்பாய்:
கருணையுற்றதால்,
உலகிற்கே தாயானாய்”
என்ற அன்னை தெரேசா
பற்றிய கவிதையைப் படிக்க நேர்ந்தது.படித்ததும் மிகவும் நெகிழ்ந்து போனேன்.கருணையையும்,தாய்மையையும் ஒன்றிணைத்து மேன்மைப் படுத்தியிருப்பது பாராட்டத்தக்க
ஒன்று.இரா.பார்த்திபன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.
இப்படிக்கு,
தங்கள் அன்பு வாசகர்,
ச.யாழினி.
உறைமேல் முகவரி:
ஆசிரியர்,
தமிழ்விதை இதழ்,
12,தமிழ்ச்சோலை நகர்,
சேலம்-2.
DOWNLOAD IN PDF
It's helpful for me..............
ReplyDeleterolll
Deletewaste
ReplyDelete