மாணவர்களே இந்த கொரானா காலக் கட்டத்தில் பள்ளி செல்ல இயலா நிலையில் இருக்கிறோம். வீட்டிலிருந்து கற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் மாணவர்களுக்குத் தேவையான காணொளிகளையும், பயிற்சித்தாள்களையும் இந்த வலைத் தளத்தில் பதிவிட்டு வருகிறோம். மாணவர்கள் இவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ளவும். காணொளி பாடங்களை தமிழ்விதை ( YOUTUBE ) வலையொலியில் நீங்கள் கண்டு கற்கலாம்.
இப்போது இங்குக் கொடுக்கப்பட்ட பயிற்சித்தாள் மாணவர்களின் தமிழ் மொழிப் பற்றிய அருமையை அறிந்துக் கொள்ளக் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கொடுக்கப்பட்ட இரு படங்களையும் காணுங்கள், அந்த இரு படங்களையும் குறிக்கும் ஒரு சொல் உள்ளது. அதனைக் கண்டுப்பிடித்து எழுதுங்கள். வாருங்கள் மாணவர்களே கொஞ்சம் விளையாடிப் பார்ப்போம்.
liveworksheets.com
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது