மெல்லக் கற்கும் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட தமிழ் கட்டுரைகள்
இயல்-3 தொகுப்புரை எழுதுதல்
தொகுப்புரை எழுதுக:
பள்ளியில் நடைபெற்ற
இலக்கியமன்ற விழா நிகழ்ச்சி செய்திகளைத் திரட்டித் தொகுப்புரை எழுதுக.
கோரணம்பட்டி அரசினர்
உயர்நிலைப் பள்ளியில் 15-09-20 அன்று வள்ளுவன் இலக்கிய மன்ற தொடக்க விழா
நடைபெற்றது. பள்ளி மாணவ – மாணவியர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர்.
பள்ளித் தலைமையாசிரியர் சிறப்பான
வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக வந்த முனைவர் எ.மாணிக்கம்
தாய்மொழியின் மூலமாகத்தான் கருத்துக்களைச் சிறந்த முறையில் வெளியிட முடியும்,
தாய்மொழி வழியே கற்பதன் மூலமே பாடங்களைச் செம்மையாகவும் திருத்தமாகவும்
கற்றுக்கொள்ள முடியும்.
மாணவர்கள் நாட்டுப்பற்றும் ,மொழிப்பற்றும்
கொண்டு ஒழுக்கச் சீலர்களாகத் திகழ வேண்டும் என்று மாணவர்களுக்கு நல்ல அறிவுரைகளைக்
கூறி சிறப்புரையாற்றினார்.
மாணவர் செயலர் நன்றி கூறினார்.
மாணவிகள் நாட்டுப்பண் பாட விழா இனிதே முடிந்தது.
DOWNLOAD IN PDF
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது