மெல்லக் கற்கும் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட தமிழ் கட்டுரைகள்
இயல்-2 வரவேற்புரை எழுதுதல்
அரசினர் உயர்நிலைப் பள்ளி,
சேலம் மாவட்டம்.
28.9.2021 அன்று பள்ளியில் நடைபெற்ற சிறந்த
பள்ளிகளுக்கான பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்ட மாவட்டக் கல்வி அலுவலர்
திருமிகு. க. விஜயா அவர்களுக்கு வழங்கிய வரவேற்பு மடல்
தமிழகம் பெற்ற தவப்புதல்வியே!
வருக! வருக! வணக்கம்.
மாவட்ட அளவில் நடைபெற்ற சுற்றுசூழல் பாதுகப்புப்
பற்றிய ஆய்வில் எம் பள்ளி முதலிடம் பெற்றதாகத் தாங்கள் அறிவித்தது கண்டு, பெருமகிழ்ச்சி
அடைகின்றோம். தங்களை வரவேற்கும் பேறு பெற்றமைக்குப் பெரிதும் உவகை கொள்கிறோம்!
பள்ளியின் சுற்றுபுறத்தைப் பேணிகாப்பதில்
மிகுந்த கவனம் செலுத்தினோம்!
எங்கள் வகுப்பறையைப் போலவே ஆய்வுக்கூடம், விளையாட்டிடம், கழிப்பறை ஆகிய அனைத்தையும்
நீங்கள் கூறிய வழிமுறைகளை நாளும் கடைப்பிடித்து
வருகிறோம்.
நீங்கள் பள்ளிக்கு முதற்பரிசு கொடுத்துப்
பாராட்டியதற்கு, நன்றியை நவில்கின்றோம்.
நன்றி, வணக்கம்
கோரணம்பட்டி
28.9.2021.
தங்கள் அன்புள்ள,
விழாக்குழுவினர்.
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது