மாணவர்களே இந்த கொரானா காலக் கட்டத்தில் பள்ளி செல்ல இயலா நிலையில் இருக்கிறோம். வீட்டிலிருந்து கற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் மாணவர்களுக்குத் தேவையான காணொளிகளையும், பயிற்சித்தாள்களையும் இந்த வலைத் தளத்தில் பதிவிட்டு வருகிறோம். மாணவர்கள் இவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ளவும். காணொளி பாடங்களை தமிழ்விதை ( YOUTUBE ) வலையொலியில் நீங்கள் கண்டு கற்கலாம்.
தமிழ் எழுத்துகள் மொத்தம் 247. அதில் உயிர் எழுத்துகள் -12, ஆய்த எழுத்து-1,உயிர் மெய் எழுத்து - 216,மெய்யெழுத்து -18. இந்த மெய்யெழுத்துகளை அவை உச்சரிக்கப்படும் ஒலியைக் கண்டு மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை வன்மையாக,மென்மையாக, வன்மையாகவும் இல்லாமல், மென்மையாகவும் இல்லாமல் இடைப்பட்டும் ஒலிக்கின்றன. அவை 3 இனத்திற்கும் ஆறு எழுத்துகள் வீதம் மொத்தம் 18 மெய்யெழுத்துகளை உள்ளன. இதற்கான விளக்கம் தமிழ்விதை வலையொளியில் உள்ளது அதனைக் கண்டு பயிற்சித்தாளில் விடையளிக்கவும்.
மாணவர்களே இந்த தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும் என்ற பாடத்தின் ஒரு காணொளியைக் கண்டு அதற்கான மூன்று பயிற்சிகளையும் தவறாது செய்யுங்கள். அப்போது தான் பாடம் உங்கள் மனதில் நிற்கும். மனப்பாடம் செய்யாமல் பயிற்சியை மேற்கொண்டால் இந்தப் பாடப்பகுதி மிக மிக எளிமையானது. அனைவரும் தவறாமல் காணொளியைக் காணுங்கள் பயிற்சியினை மேற்கொள்ளுங்கள். நன்றி, வணக்கம்.
எழுத்துகளின் வகையும் தொகையும்
காணொளி
இயங்கலைத் தேர்வு
👇👇👇👇👇👇
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது