மாணவர்களே இந்த கொரானா காலக் கட்டத்தில் பள்ளி செல்ல இயலா நிலையில் இருக்கிறோம். வீட்டிலிருந்து கற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் மாணவர்களுக்குத் தேவையான காணொளிகளையும், பயிற்சித்தாள்களையும் இந்த வலைத் தளத்தில் பதிவிட்டு வருகிறோம். மாணவர்கள் இவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ளவும். காணொளி பாடங்களை தமிழ்விதை ( YOUTUBE ) வலையொலியில் நீங்கள் கண்டு கற்கலாம்.
தமிழ் எழுத்துகள் மொத்தம் 247. அதில் உயிர் எழுத்துகள் -12, ஆய்த எழுத்து-1,உயிர் மெய் எழுத்து - 216,மெய்யெழுத்து -18. இந்த மெய்யெழுத்துகளை அவை உச்சரிக்கப்படும் ஒலியைக் கண்டு மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை வன்மையாக,மென்மையாக, வன்மையாகவும் இல்லாமல், மென்மையாகவும் இல்லாமல் இடைப்பட்டும் ஒலிக்கின்றன. அவை 3 இனத்திற்கும் ஆறு எழுத்துகள் வீதம் மொத்தம் 18 மெய்யெழுத்துகளை உள்ளன. இதற்கான விளக்கம் தமிழ்விதை வலையொளியில் உள்ளது அதனைக் கண்டு பயிற்சித்தாளில் விடையளிக்கவும்.
இந்த பயிற்சித்தாளானது மாணவர்களுக்கு மகிழ்ச்சியாகவும், கற்றலில் இன்பத்தை புகுத்துவதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இது போன்ற பயிற்சித்தாள்களை இந்த வலைதளத்தினை பின் தொடருங்கள்...... வாருங்கள் மாணவர்களே......மெய்யெழுத்துகளின் வகைகள் கண்டறந்து அந்த இனத்தோடு பொருத்துவோம்
liveworksheets.com
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது