முதல் ஐந்து வகுப்பு மாணவர்கள் இந்த பயிற்சித்தாளினை செய்யலாம்.
இந்த கொரானா காலக் கட்டத்தில் பள்ளிகள் இயங்காமல் உள்ள நிலையில் மாணவர்கள் வீட்டிலிருந்து பயில வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது. இந்நிலை விரைவில் மாறி அனைவரும் பள்ளி சென்று பயிலும் காலம் விரைவில் வரும். அதுவரை மாணவர்கள் பாதுகாப்போடு இருந்து வீட்டிலிருந்தே கல்வி பயில தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சி வழிகாட்டுகிறது. மாணவர்கள் அதனை நன்றாக கவனித்து பாடங்களை பயில வேண்டும். மாணவர்கள் பாடங்களை பயில்வதோடு நில்லாமல் அதற்குரிய பயிற்சிகளையும் வீட்டில் செய்தால் தான் அந்த கற்றல் நிலையாக இருக்கும். அதனை மனதில்க் கொண்டு இந்த வலைதளம் பல்வேறு பயிற்சித்தாள்களை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. மாணவர்கள் இந்த பயிற்சித்தாள்களில் நன்கு பயிற்சி செய்து பல புதிய புதிய தகவல்களையும், தங்களின் கணிதத்திறன்களையும் வளர்த்துக் கொள்ளும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
தொடக்க நிலை மாணவர்களுக்கான பயிற்சித்தாள்
வீட்டிலிருந்து கற்போம். வீட்டிலிருந்து எழுதுவோம்.
கணித பயிற்சித்தாள். கொடுக்கப்பட்டுள்ள படங்களை எண்ணி அதன் எண்ணிக்கையை அதற்குரிய கட்டத்தில் எழுதவும். பின் இரண்டு எண்ணிக்கைகளையும் கூட்டி அதன் கூட்டுத் தொகையை எழுதவும்.
இதனை இணையத்திலும் எழுதலாம்.எண்ணிக்கைகளை எழுதி அதன் கூட்டுத் தொகையினையும் எழுத வேண்டும். அனைத்தும் சரியாக எழுதினால் உங்களுக்கு அந்த பயிற்சித்தாள் தானாகவே மதிப்பெண் வழங்கிவிடும். மேலும் இந்த பயிற்சித்தாளினை நகல் எடுத்து கைகளால் எழுதும்படியாகவும் வடிவமாக வழங்கப்பட்டுள்ளது.
இணையம் மூலம் பயிற்சித்தாள் பயிற்சிப் பெற
liveworksheets.com
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது