8,9,10 வகுப்புகளுக்கான கல்வித் தொலைக்காட்சி பார்வை பராமரிப்பு மற்றும் பயிற்சித்தாள் மதிப்பெண்பதிவேடுகள்

 அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களுக்கு வணக்கம். இந்த கொராணா காலக்கட்டத்தில் பல்வேறு இடர்பாடுகளை இந்த உலகம் சந்தித்திக்கொண்டது. அதிலிருந்து சிறிது சிறிதாக தனது வழக்கமான பாதையை நோக்கி மக்கள் சென்றுக் கொண்டு உள்ளனர். மக்கள் சுதந்திரமாக நடமாடும் காலம் வெகுவிரைவில் வரும் என நம்புகிறோம். என்ன தான் அன்றாட செயல்பாடுகள் நடைபெற்றாலும் கல்வி மட்டும் சற்று பின் நோக்கி தான் உள்ளது. மாணவர்களின் கல்வி தடைபடக் கூடாது என்பதற்காக தமிழக அரசு கல்வித்தொலைக்காட்சி வாயிலாக மாணவர்களின் இல்லங்களுக்கே பாடம் சென்று புகட்டப்படுகிறது. எந்த நாளில் எந்தெந்த பாடங்கள் ஒளிபரப்பப்பட்டன அதற்கான காணொளி இணைப்பு மற்றும் அந்த பாடங்களுக்கு உண்டான இணைய வழி பயிற்சித்தாள்கள் தயார் செய்து நாள் தோறும் அறிவிப்பாக கட்செவி அஞ்சல் ( whatsapp) ,முகநூல், பகிர்வு அரட்டை ( share chat ), போன்றவற்றின் மூலமாக பகிர்ந்து வருகிறேன். மேலும் ஆசிரியர்களுக்கு  கல்வித்தொலைக்காட்சி தொடர்பான பதிவேடுகளும் தயார் செய்து பகிர்ந்து வருகிறது இந்த தளம். அந்த வரிசையில் பல ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த பயிற்சித்தாள் மதிப்பெண் பதிவேட்டினை பகர்வதில் பெரு மகிழ்வு கொள்கிறேன்.  தொடர்பு கொள்வோம் ; நட்பு பேணுவோம்; மாணவர் கல்வி நலனில் அக்கறை கொள்வோம்;  

ஆசிரியர்கள் எவரேனும் தங்கள் படைப்புகளை இந்த தளத்தில் பதிவிட விரும்பினால் நீங்கள் என்னுடைய கட்செவி அஞ்சல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். உங்களின் படைப்பானது உங்களின் பெயர்,பள்ளி,ஊர் இவற்றுடன் தான் இந்த தளத்தில் பதிவிடப்படும். மேலும் உங்களின் படைப்புகளில் water mark  ( வலைதள முகவரி பெயர் ) இல்லாமல் பதிவேற்றம் செய்யப்படும்.

நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 8695617154 ( whatsapp)

                                                                                                 8667426866 ( contact )

படைப்புகளை அனுப்ப விரும்பினால அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

ramakrishnan79097@gmail.com.

கல்வித் தொலைக்காட்சி பயிற்சித்தாள் மதிப்பெண் பதிவேடு மற்றும் பராமரிப்பு பதிவேடு பெற கீழ்க்காணும் தலைப்பில் உள்ள பதிவிறக்கவும் என்பதனை தொட்டு பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

பார்வை பராமரிப்பு பதிவேடு

( தலைப்புடன் கூடியது )

பயிற்சித்தாள் மதிப்பெண் பதிவேடு

 ( தலைப்புடன் கூடியது )

பதிவிறக்கவும்

பதிவிறக்கவும்



About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...