ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம். மாணவச்செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். தமிழ் விதை என்ற வலைதளத்திற்கு நீங்கள் நல்கி வரும் ஆதரவுக்கு இரு கரம் கூப்பி உங்களை வணங்குகிறேன். கடந்த ஓராண்டிற்கும் மேலாக நாம் பள்ளிக்கு செல்ல இயலவில்லை. மாணவர்களின் முகங்களை காண இயலவில்லை. பல்வேறு ஆசிரியர்கள் பல்வேறு விதமான முயற்சிகள் மேற்கொண்டு பல விதமான கற்றல் - கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டனர் என்பதனை நாம் செய்திகள்,நாளிதழ்கள் மூலம் அறிந்தோம். அவர்கள் அனைவரும் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள். அந்த வகையில் கடந்த ஓராண்டாக தமிழ்விதை என்ற வலைதளம் வலையொளி மூலம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 50 காணொளிகள் தயாரிக்கப்பட்டு அது மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இந்த ஆண்டு தமிழ்விதை என்ற வலைதளம் வாயிலாக கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காணொளிகளின் இணைய இணைப்பும் அந்ததந்த பாடங்களுக்கான இணைய வழிப் பயிற்சித்தாளும் உருவாக்கப்பட்டு அது அனைத்து சமூக ஊடங்களிலும் பகிரப்பட்டது. மாணவர்களின் கற்றலில் இந்த தமிழ்விதை என்ற வலைதளம் சிறிதளவாவது உதவியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 6 முதல் 10 வகுப்புகளுக்கு இணையவழிப் பயிற்சித்தாள்கள் உருவாக்கப்பட்டு அது மாணவர்களுக்கும் ,ஆசிரியர்களுக்கும் பயன்படும் விதமாக இருந்தது என்று நீங்கள் கூறியதைக் கேட்டு என் மனம் மகிழ்ச்சி அடைகிறது.
இப்போதும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் கற்றலில் கவனம் செலுத்த வேண்டும் அதுவும் மெல்ல கற்கும் மாணவர்களின் கற்றலில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என எண்ணி கடந்த ஓராண்டாக அனைத்து வழிகாட்டி நூல்கள், புத்தகங்கள் இவற்றைப் படித்து அதிலிருந்து தொகுத்து எளிய நடையில் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு இந்த படைப்பு பயன்பட வேண்டும் என எண்ணி, அரசாங்கம் அறிவித்த முன்னுரிமை அளிக்கப்பட்ட பாடங்களிலிருந்து புத்தக வினாக்களை எடுத்து அதற்கு எளிய நடையில் பதில் அளிக்கும் வண்ணம் இந்த படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நிச்சயம் இந்த தமிழ்விதை என்ற வழிகாட்டியானது அவர்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்பது நிதர்சனம். இங்கு இயல்கள் வாரியாக PDF கோப்புகள் பதிவேற்றம் செய்யப்படும். ஆசிரியகள் மாணவர்கள் தங்களின் பணியை எளிமையாகவும், விரைவாகவும் செய்து முடிக்க இந்த வலைதளம் கண்டிப்பாகத் துணை நிற்கும்.
உங்களுக்கு எந்த வகையான தேவைகள் இருந்தாலும் இந்த வலைதளத்தின் கருத்துப் பெட்டியில் பதிவிடவும். அல்லது தமிழ்விதை என்ற 8695617154 என்ற புலன எண்ணில் தொடர்பு கொள்ளவும். ஆசிரியர்கள் தங்கள் படைப்புகளை தமிழ்விதை என்ற இந்த வலைதளத்தில் பதிவேற்ற விரும்பினால் ramakrishnan79097@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். உங்களின் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் இந்த வலைதளம் மூலம் கிடைக்கும். அனுப்பும் படைப்பு எவ்வித மாற்றமும் செய்யாமல் உள்ளது உள்ளபடி அப்படியே பதிவேற்றம் செய்யப்படும். உங்களின் பொன்னான படைப்புகளை இந்த வலைதளம் மூலம் வழங்கி பல ஆயிரங்கணக்கான மாணவர்களின் கற்றலுக்கு நீங்களும் ஒரு காரணமாக திகழ்வீர்கள்.
நன்றி, வணக்கம் - தமிழ்விதை
குறைக்கப்பட்ட தமிழ் பாடத்திற்கான வழிகாட்டி
தமிழ்விதை - சிறப்பு வழிகாட்டி
மெல்ல கற்போர் சிறப்பு வழிகாட்டி
பத்தாம் வகுப்பு – தமிழ்
இயல் – 2
உயிரின் ஓசை
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது