அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கு வணக்கம். இந்த புத்தாக்கப்பயிற்சியில் தமிழ் பாடங்களில் கொடுக்க்ப்பட்டு இருக்கும் பயிற்சிகள் மொழியை ஆள்வோம், மொழியோடு விளையாடு என்ற பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட பயிற்சிகள். மேலும் முந்தைய பாடங்களிலிருந்து இந்த பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சிகளைத் துணையாகக் கொண்டு நம் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் அத்தகைய பயிற்சி வினாக்கள் எங்கெங்கு உள்ளன எனக் கண்டறிந்து அவற்றைத் தொகுத்து இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. நமக்கு வழங்கப்பட்டுள்ள பத்தாம் வகுப்பிற்கு 20 தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை ஒட்டி பத்தாம் வகுப்பில் உள்ள பகுதிகளைக் கண்டறிந்து அவற்றை மாணவர்களுக்கு வழங்கி பத்தாம் வகுப்பிற்கான பாடங்களையும், அதே சமயம் புத்தாக்கப் பயிற்சியின் வலுவூட்டல் செயல்பாடுகளாக அல்லது மாணவர்களுக்கு வழங்கக் கூடிய தொடர் பணியாகவும் நீங்கள் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவும். ஒவ்வொரு பயிற்சிக்கும் பத்தாம் வகுப்பில் உள்ள பயிற்சிகளை புத்தாக்கப்பயிற்சியின் பயிற்சித்தாள்களாகவும் இவற்றைப் பயன்படுத்தி ஒரே சமயத்தில் இரு செயல்பாடுகளையும் நாம் இதன் மூலம் செய்யலாம்.
1. புத்தாக்கப்பயிற்சியினை கட்டகத்தின் துணையோடு நடத்துதல்.
2. புத்தாக்கப்பயிற்சிக் கட்டகத்தின் துணையோடு அதிலுள்ள பயிற்சிகளை மையமாகக் கொண்டு பத்தாம் வகுப்பு அனைத்து இயல்களிலும் உள்ள மொழித்திறன் பயிற்சிகளை செய்ய வைக்கலாம்.
இதன் மூலம் மாணவர்கள் புத்தாக்கப்பயிற்சியில் காணும் பயிற்சிகளை வலுவூட்டல் அல்லது தொடர்பணி வாயிலாக காணும் போது அவர்கள் பத்தாம் வகுப்பிற்கான பயிர்சியினை மேற்கொள்ள இயலும்.
இங்கு ஒவ்வொரு பயிற்சியின் தலைப்பினை ஒட்டி பத்தாம் வகுப்பிற்கான பயிற்சிகள் ஒவ்வொரு வாரம் வரும் பாடக்குறிப்படு பதிவுகளுடன் இந்த புத்தாக்கப்பயிற்சிகளுக்கான பயிற்சித்தாள்கள் அடங்கிய பதிவுகள் பதிவிடப்படும். இதன் மூலம் நீங்கள் இந்த வலைதளத்தில் அந்தந்த வாரங்களுக்கான பாடக் குறிப்பேடு மற்றும் மாணவர்களுக்கு வழங்கக் கூடிய பயிற்சித்தாள் இரண்டும் ஒரே சமயத்தில் நீங்கள் பெறலாம்.
இது போன்ற பயிற்சித்தாள்களை வாராவாரம் நீங்கள் தவறாமல் பெற நீங்கள் உங்கள் தொடர்புகள் மற்றும் புலனக்குழுவில் என்னுடைய எண்ணை இணைத்து விடுங்கள். அப்போது தான் நான் அனுப்பும் இணைப்புகளை நீங்கள் காண இயலும். நீங்கள் என்னுடைய எண்ணை சேமிக்கவில்லையென்றால் என்னுடைய இணைப்பு கருப்பு நிற வண்ணத்தில் மட்டுமே தெரியும். அந்த கருப்பு நிற வண்ணத்தில் உள்ள இணைப்பில் காணும் பதிவும் காண இயலாது போகு. ஆகவே நீங்கள் என்னுடைய எண் : 8695617154 இந்த எண்ணை தமிழ்விதை என சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் நான் அனுப்பக்கூடிய இணைப்புகள் நீலநிறமாக காட்சி தரும். நீல நிறத்தில் உள்ள இணைப்பை மட்டுமே நீங்கள் காணவியலும்.
நன்றி,வணக்கம்
தமிழ் விதை.
பத்தாம் வகுப்பு
தமிழ்
பயிற்சியின் வாரம் : இரண்டாம் வாரம்
பயிற்சி -1
பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி
பயிற்சி -2
பத்தியைப் படித்து வினாக்கள் அமைக்க.
பயிற்சித்தாள்
இரண்டாம் வாரத்திற்கான பாடக்குறிபேடு
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது