நாள் : 13-09-2021 முதல் 18-09-2021
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
( புத்தாக்கப் பயிற்சி)
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : இலக்கணக்கூறுகளை கண்டறிதல்,
பழமொழி,மரபுத்தொடர்,
செய்யுள் அடிகள் அளித்து விளக்கம் கேட்டல்
பக்க எண் : 8 - 11
நோக்கம் :
Ø புணர்ச்சி
பற்றி அறிதல்.
Ø நிலைமொழி,வருமொழியை
அடையாளம் காணுதல்.
Ø புணர்ச்சியின்
வகைகள் அறிதல்.
Ø உரைநடைப்பகுதியில்
வரும் சொற்களுக்கான புணர்ச்சி அறிந்து பயன்படுத்துதல்.
Ø பழமொழிகளின்
பொருள் அறிதல்.
Ø பழமொழிகள்
கொடுத்து அதனைக் கொண்டு தொடர் அமைத்தல்.
கற்றல்
விளைவுகள்:
Ø புணர்ச்சி
இலக்கண அடிப்படைகளை அறிந்து அன்றாட வாழ்வில் பயன்படுத்துதல்.
Ø படித்தனவற்றைப்
பற்றி நன்கு சிந்தித்துப் புரிதலை மேலும் சிறப்பாக்குதல்.
கற்றல்-கற்பித்தல்
செயல்பாடுகள் :
Ø புணர்ச்சி
– நிலைமொழியோடு வருமொழி இணைவது.
Ø சில
எடுத்துக்காட்டுகளை கொடுத்து நிலைமொழி வருமொழியை மாணவர்கள் அடையாளம் காணுதல்
சொற்கள் |
நிலைமொழி |
வருமொழி |
சிலை +
அழகு |
சிலை |
அழகு |
பொற் +
சிலை |
பொன் |
சிலை |
Ø புணர்ச்சி
: 1. இயல்பு புணர்ச்சி 2.விகாரப்புணார்ச்சி.
Ø விகாரப்புணார்ச்சி
: 1.தோன்றல் 2. திரிதல் 3. கெடுதல்
Ø உரைப்பத்தியில்
காணும் புணர்ச்சிகளை அடையாளம் காணல்
Ø பழமொழிக்கான
சரியான பொருள் அறிதல்.
Ø பழமொழி
பொருள் அறிந்து தொடர் அமைத்தல்
வலுவூட்டல்:
Ø கட்டகத்தின்
பயிற்சியினை மையமாகக் கொண்டு உரைப்பத்தியில் உள்ள புணர்ச்சியை அடையாளம் காணல்
Ø இது
சார்ந்து பாடப்புத்தகத்தில் காணப்படும் பயிற்சிகளைக் கொண்டு வலுவூட்டல்.
Ø பழமொழிக்கான
சரியான பொருள் கூறல்
மதிப்பீடு:
Ø ஏதேனும் ஒரு பத்தியை தேர்ந்தெடுத்து
அதில் காணும் புணர்ச்சி அடிப்படையில் சில வினாக்கள கேட்டல். ( ஆசிரியர் செய்தித்தாள்
அல்லது பாடப்புத்தகத்தின் துணைக் கொண்டு மதிப்பீடு செய்யவும் )
Ø சில பழமொழிகளைக் கொடுத்து
அதன் பொருள் கேட்டல்
தொடர்பணி:
Ø செய்தித்தாளில்
காணும் செய்தியினை மையமாகக் கொண்டு புணர்ச்சியின் வகைகளை அடையாளம் காண்க/ பத்தாம் வகுப்பு
பாடப்புத்தகத்தில் ஒரு உரைப் பத்தியை தேர்ந்தெடுத்து புணர்ச்சியின் வகைகளை கண்டு எழுதி
வருதல்
Ø வீட்டில்
பெற்றோரிடம் கேட்டு பழமொழிகளைத் தொகுத்து வருக
PDF - FORMAT
குறிப்பு :
தமிழ்விதை தினசரி செய்ய
வேண்டிய செயல்பாடு திட்டங்கள் அட்டவணை கொண்ட பட்டியல் படி இந்த பாடக்குறிப்பேடு தயார்
செய்யப்பட்டுள்ளது. இதனை அப்படியே பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லை. சூழலுக்கு ஏற்றவாறு
மாறுபாடு செய்துக் கொண்டு எழுதுக. இதற்கு அடுத்ததடுத்த வரும் பாடக் குறிப்பேடுகளும்
ஒரு மாதிரிக்காகத் தான் பதிவு செய்யப்படுகிறது என்பதனை நினைவில் கொள்க. நன்றி, வணக்கம் – தமிழ்விதை
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது