குறைக்கப்பட்ட தமிழ் பாடத்திற்கான வழிகாட்டி
மெல்ல கற்போர் சிறப்பு வழிகாட்டி
பத்தாம் வகுப்பு – தமிழ்
இயல் – 6
நிலா
முற்றம்
அ) பலவுள் தெரிக:-
1. குளிர் காலத்தைப் பொழுதாக்க் கொண்ட நிலங்கள்_____________________________________
அ)முல்லை,குறிஞ்சி,மருத நிலங்கள்
ஆ)குறிஞ்சி,பாலை,நெய்தல் நிலங்கள்
இ) குறிஞ்சி,மருதம்,நெய்தல் நிலங்கள்
ஈ) மருதம்,நெய்தல்,பாலை நிலங்கள்
2. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?
அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்
ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்
இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்
ஈ) அங்கு வறுமை இல்லாததால்
ஆ. குறு வினா.
1. காட்டில் விளைந்த வரகில் சமைத்த
உணவு மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும். இத்தொடரில் அமைந்துள்ள முதற் பொருள்,கருப்பொருள்களை வகைப்படுத்தி
எழுதுக.
முதற்பொருள்:
Ø
நிலம் – காட்டில்
Ø
பெரும் பொழுது - மழைக்காலம்
Ø
சிறுபொழுது - மாலை
கருப்பொருள்:
Ø
உணவு - வரகு
2. “நேற்று நான் பார்த்த அருச்சுனன்
தபசு என்ற கூத்தில் அழகிய ஒப்பனையையும் சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து
மிக மகிழ்ந்தேன்!” என்று சேகர் என்னிடம் கூறினான். இக்கூற்றை அயற்கூற்றாக எழுதுக:-
சேகர் தான் பார்த்த அர்ஜூனன் தபசு என்ற கூத்தில் அழகிய ஒப்பனையும்
சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மகிழ்ந்ததாக அவனிடம் கூறினான்.
3. உறங்குகின்ற கும்பகன்ன’
எழுந்திராய் எழுந்திராய்’
காலதூதர் கையிலே ‘ உறங்குவாய் உறங்குவாய்
‘
கும்பகன்னனை என்ன
சொல்லி எழுப்புகிறார்கள்?
எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?
·
. கும்பகர்ணனே எழுந்திடுவாய்!ஏழுந்திடுவாய்!
·
கால தூதர் கையிலே படுத்து உறங்கிடுவாய்.
இ) சிறு வினா
1. “ கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது;மலைப்பகுதிகளில் மலைப் பயிர்களும்
நிலப் பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.” – காலப் போக்கில்
பல மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும், பண்டைத் தமிழரின் திணைநிலைத்
தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.
·
கடற்கரைகளில் ஓய்வு விடுதிகள் பெருகி உள்ளன.எனினும் மீன் பிடித்தல், உப்பு காய்ச்சுதல்
தொழில்கள் நடைபெறுகின்றன.
·
மலைப்பகுதிகளில் ஓய்வு இல்லங்கள் கட்டப்பட்டுள்ளன.எனினும் காபி,தேயிலைத்
தோட்டங்கள் அமைக்கப் பெற்றுள்ளன.
·
நிலப்பகுதிகளில் வீடுகள்,தொழிற்சாலைகள் பெருகி உள்ளன. எனினும் உழவுத் தொழில் நடைபெற்றுக்
கொண்டு இருக்கிறது.
இயல் – 6
திருக்குறள்
அ) குறுவினா:-
1. கரப்பிடும்பை இல்லார் – இத்தொடரின் பொருள்
கூறுக:-
கரப்பிடும்பை
இல்லார் – தன்னிடம்
உள்ள பொருளை மறைத்து வைத்துக் கொண்டு இல்லை எனக் கூறாதவர்.
2. தஞ்சம் எளியர் பகைக்கு – இவ்வடிக்குரிய
அசைகளையும் வாய்பாடுகளையும் எழுதுக.
சீர் |
அசை |
வாய்பாடு |
தஞ்/ சம் |
நேர் – நேர் |
தேமா |
எளி/ யர் |
நிரை – நேர் |
புளிமா |
பகைக்/ கு |
நிரை – நேர் |
புளிமா |
3. வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி
நகையாடுவது குறித்துக் குறிளின் கருத்து என்ன?
ஏளனம் செய்யாமல்
பொருள் கொடுப்பவரைக் காணும் போது உள்ளத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
4. பின் வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார்
கூறுகிறார்? ஏன் என்பதை எழுதுக.
பெரிய கத்தி,
இரும்பு ஈட்டி, உழைத்தால் கிடைத்த ஊதியம்,
வில்லும் அம்பும்
v
கூரான ஆயுதம் - உழைத்தால் கிடைத்த ஊதியம்.
v
பகைவரை வெல்லும் கூர்மையான ஆயுதம் உழைத்ததால் கிடைக்கும் ஊதியமே ஆகும்.
நெடுவினா:-
1. சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற
தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.
அன்பும் பண்பும் குணச்சித்திரமும்
கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை
தொடுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே!
வணக்கம், இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப்
பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி..... தண்டலை மயில்கள் ஆட.......
இவ்வுரையைத் தொடர்க.
Ø மயில்கள் அழகுற ஆடுகிறது.
Ø தாமரை மலர்கள் விளக்கு போல் விரிகிறது.
Ø மேகங்களின் இடி மத்தளமாய் ஒலிக்கிறது.
Ø குவளை மலர்கள் கண்கள் விழித்து பார்ப்பது போல உள்ளது.
Ø அலைகள் திரைச்சீலைகளாய் விரிகிறது.
Ø வண்டுகளின் ரீங்காரம் மகர யாழின் இசைப் போல இருக்கிறது.
மொழியை ஆள்வோம்
அ) மொழி பெயர்க்க:-
Koothu
Therukoothu is, as its name indicates, a popular form
of theatre performed in the steets.It is performed by rural artists.The stories
are derived from epics like Ramayana,Mahabharatha and other ancient
puranas.There are more songs in the play with dialogues improvised by the
artists on the spot. Fifteen to twenty actors with a small orchestra forms a
koothu troupe.Though the orchestra has a singer, the artists sing in their own
voices. Artists dress themselves with heavy costumes and bright makeup.Koothu
is very popular amoung rural areas.
விடை: கலைஞர்களால் தெருவில் இசை நாடகம் போல் நடத்தப்படுவதே தெருக்கூத்து.
இதில் இராமாயணம்,மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும்
இன்னபிற பழங்கால புராணங்களிலிருந்தும் கதைகளை,நிறைய பாடல்களுடன்
நாடகமாக்கம் செய்து, சூழ்நிலைக்கேற்ப வசன்ங்களை சேர்த்து கலைஞர்கள்
மெருகேற்றி நடிப்பார்கள். பதினைந்திலிருந்து இருபது கலைஞர்கள்
ஒரு குழுவாக “ கூத்து குழு “ ஒன்றை அமைத்து
இதை நடத்துவர். குழுவுக்கென பாடகர் இருந்தாலும் அனைவருமே தங்கள்
குரலில் பாடுவர். கலைஞர்கள் மிக கனமான உடைகளும்,ஆபரணங்களும் அணிந்து கனமாக முகப்பூச்சும் அணிந்து பங்கு கொள்கிறார்கள்.
இவை கிராமங்களில் புகழ் பெற்றவை
ஆ. தொடர்களை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுக.
1. அழைப்பு மணி ஒலித்தது. கயல்விழி கதவைத்
திறந்தார்.
( கலவைச் சொற்றொடராக மாற்றுக )
விடை: அழைப்பு மணி ஒலித்ததால்
கயல்விழி கதவைத் திறந்தார்
2. இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தினார். அவற்றைப் புத்தக அடுக்கங்களில் அடுக்கிவைத்தார்.புத்தகங்களைக்
கேட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார்.
(தொடர் சொற்றொடராக மாற்றுக )
விடை: இன்னாசியார் புத்தகங்களை
வரிசைப்படுத்தி, அவற்றைப் புத்தக அடுக்கங்களில் அடுக்கி வைத்து,புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார்
3. ஒயிலாட்டத்தில்
குழுவினர் ஒரே நிறத் துணியை முண்டாசு போலக் கட்டிக்கொண்டு,காலில் சலங்கை அணிந்து கொண்டு,கையில் ஒரு சிறுதுணியை இசைக்கேற்ப வீசியும் ஆடுவர்.
( தனிச் சொற்றொடர்களாக மாற்றுக )
விடை: ஒயிலாட்டத்தில்
குழுவினர் ஒரே நிறத் துணியை முண்டாசு போலக் கட்டிக்கொள்வர்.காலில் சலங்கை அணிந்து கொள்வர்.
கையில் ஒரு சிறுதுணியை இசைக்கேற்ப வீசியும் ஆடுவர்.
4. கூத்துக் கலைஞர்
பாடத் தொடங்கினார். கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.
( கலவைச் சொற்றொடராக மாற்றுக )
விடை: கூத்துக் கலைஞர்
பாடத் தொடங்கியதும் கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.
5. ஓடிக் கொண்டிருந்த மின் விசிறி சட்டென நின்றவுடன்,அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைபட்டது.
( தனிச் சொற்றொடராக மாற்றுக )
விடை: ஓடிக் கொண்டிருந்த
மின் விசிறி சட்டென நின்றதும் அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைபட்டது.
இ) பிறமொழிச்சொற்களைத் தமிழ்ச் சொற்களாக மாற்றுக:-
புதிர்
உங்களிடம்
ஏழு கோல்டு பிஸ்கட் உள்ளது. அதில் ஒன்று மட்டும் எடை குறைவானது.
உங்களிடம் உள்ள ஒரு தராசை இரு முறைகள் மட்டுமே யூஸ் பண்ணி வெயிட் குறைந்த
கோல்டு பிஸ்கட்டைக் கண்டுபிடிக்கவும்.
விடை
தராசின்
இரண்டு தட்டுகளிலும் மூன்று மூன்று கோல்டு பிஸ்கட்டுகளை வையுங்கள்.இரண்டு தட்டுகளும் ஈக்வலாக இருந்தால்,கையில் மிச்சம்
உள்ள பிஸ்கட்டே வெயிட் குறைவானது. பட் ஆனால், ஒரு பக்க தராசுத் தட்டு உயர்ந்தால் அதில் உள்ள மூன்று பிஸ்கட்களில் ஒன்று வெயிட்
குறைவானது. அந்த மூன்று பிஸ்கட்டுகளை மட்டும் எடுத்து வைத்துக்
கொள்ளுங்கள். இரண்டு தட்டுகளிலும் ஒரு ஒரு பிஸ்கட்டைப் போட்டு
இதே எக்ஸ்பெரிமெண்ட்டை ரிப்பீட் செய்து ஆன்சரைக் கண்டுபிடியுங்கள்! ஆல் தி பெஸ்ட்!.
பிறமொழிச் சொல் |
தமிழ்ச்சொல் |
பிறமொழிச் சொல் |
தமிழ்ச்சொல் |
கோல்ட் பிஸ்கட் |
தங்கக்கட்டி |
வெயிட் |
எடை |
யூஸ் |
பயன்படுத்தி |
எக்ஸ்பெரிமெண்ட் ரிப்பீட் |
சோதனை மீண்டும் |
ஆல் தி பெஸ்ட் |
வாழ்த்துகள் |
ஈக்வலாக |
சரிசம்மாக |
பட் |
ஆனால் |
ஆன்சரை |
விடையை |
ஈ) நாட்டுப்புறப் பாடலுக்கேற்ற சூழலை எழுதுக:-
பாடல் |
பாடல் எழுந்த சூழல் |
பாடறியேன் படிப்பறியேன் – நான் தான் பள்ளிக்கூடம் தானறியேன் ஏடறியேன் எழுத்தறியேன் – நான் தான் எழுத்துவகை தானறியேன் படிக்க நல்லா தெரிஞ்சிருந்தா – நான் தான் பங்காளிய ஏன் தேடுறேன் எழுத நல்லா தெரிஞ்சிருந்தா – நான் தான் எதிராளிய ஏன் தேடுறேன் நாலெழுத்துப் படிச்சிருந்தா – நான் தான் நாலு தேசம் போய்வருவேன் நாலு பக்கம் வரப்புக்குள்ள – தெனமும் நான் பாடுறேன் தெம்மாங்கு தான் |
படிக்காதவர் தனது ஏக்கத்தை சித்தரிக்கும் விதமாக பாடல்
அமைந்துள்ளது |
உ) மனுதனுக்கும் மலருக்குமான மணம் வீசும் இந்த நயவுரையைத் தொடர்க;-
Ø
வண்டுகளை ஈர்க்கும் வாசனையில்
Ø
பூக்களிடம் வசப்படுவது
மனிதர்களே!
Ø
பூச்சியைக் கவரும் வண்ணங்களில்
Ø
பூக்களிடம் விழுவது மனிதர்களே!
Ø
தென்றலின் வருடலில்
Ø
பூக்களிடம் விழுவது மனிதர்களே
Ø
இறகை விட மென்மைக் கொண்ட
Ø
பூக்களில் மயங்குவது
மனிதர்களே.
மொழியோடு
விளையாடு
அ) தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக:-
1. வானம் கருக்கத் தொடங்கியது. மழை
வரும் போலிருக்கிறது.
2. அனைவரின் பாராட்டுகளால்,வெட்கத்தில்
பாடகர் முகம் சிவந்தது
3. வெள்ளந்தி மனம் உள்ளவரை அப்பாவி
என்கிறோம்.
4. கண்ணுக்குக் குளுமையாக இருக்கும் பசும் புல்வெளிகளில்
கதிரவனின் மஞ்சள் வெயில் பரவிக்கிடக்கிறது.
5. வெயில் அலையாதே;உடல் கருத்து விடும்
ஆ. பொருத்தமானவற்றைச் சொற்பெட்டியில் கண்டு எழுதுக.
தங்கும், மரம் வீடு, அவிழும், தயங்கும்,மரவீடு, தோற்பாவை,
விருது, தோற்பவை,கவிழும்,விருந்து |
1. விரட்டாதீர்கள் – பறவைக்கு மரம் வீடு
வெட்டாதீர்கள் – மனிதருக்கு அவை தரும் மரவீடு
2. காலை ஒளியினில் மலரிதழ் அவிழும்
சோலைப் பூவினில் வண்டினம்
கவிழும்
3. மலைமுகட்டில் மேகம் தங்கும்
அதைப்
பார்க்கும் மனங்கள் செல்லத்
தயங்கும்
4. வாழ்க்கையில் தோற்பவை மீண்டும் வெல்லும் – இதைத்
தத்துவமாய்த் தோற்பாவை கூத்து
சொல்லும்.
5. தெருக் கூத்தில் நடிகருக்குக் கைதட்டலே விருது அதில்
வரும் காசு குறைந்தாலும் அதுவேயவர் விருந்து
தயாரிப்பு:-
வெ.ராமகிருஷ்ணன்,
பட்டதாரி ஆசிரியர்.
இது போன்ற மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்
பயன்படக்கூடிய
படைப்புகளை பெற பின் வரும் தளங்களை பின் தொடரவும்….
https://tamilrk-seed.blogspot.com
கல்வித் தொடர்பான காணொளிகளைக் காண ( subscribe )
https://www.youtube.com/c/தமிழ்விதை
PDF - FORMAT
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது