குறைக்கப்பட்ட தமிழ் பாடத்திற்கான வழிகாட்டி
மெல்ல கற்போர் சிறப்பு வழிகாட்டி
பத்தாம் வகுப்பு – தமிழ்
இயல் – 5
அ) பலவுள் தெரிக:-
1. அருந்துணை என்பதைப் பிரித்தால்_______________
அ) அருமை + துணை ஆ) அரு + துணை இ) அருமை
+ இணை ஈ) அரு + இணை
2.”இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்டது______________வினா.
“ அதோ,அங்கே நிற்கும்” என்று மற்றொருவர் கூறியது ___________ விடை.
அ) ஐய வினா,வினா எதிர்
வினாதல் ஆ)
அறிவினா,மறைவிடை
இ) அறியா வினா,சுட்டு விடை ஈ) கொளல்வினா,இனமொழிவிடை
3. “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும்
தெருளை”
-என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?
அ) தமிழ் ஆ) அறிவியல் இ) கல்வி ஈ) இலக்கியம்
2. குறு வினா
1.செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக:-
Ø அறிவைத் திருத்தி சீராக்குவோம்
Ø கல்வி பெற்று மயக்கம் அகற்றுவோம்
2. தாய்மொழியும் ஆங்கிலமும் தவிர நீங்கள் கற்க விரும்பும் மொழியினைக்
குறிப்பிட்டுக் காரணம் எழுதுக.
Ø இந்தி
Ø இந்தியா முழுவதும் பேசப்படுகிறது
3. இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின்விளக்கின்
சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது?இதோ...இருக்கிறதே! சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே!
மின்சாரம் இருக்கிறதா?இல்லையா?
மேற்கண்ட உரையாடலில்
உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.
மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? – அறியாவினா
மின்சாரம் இருக்கிறதா?இல்லையா? – ஐய வினா
3. சிறு வினா:-
1. உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பைப் பாதியில்
நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை
எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?
Ø கல்வி நமக்கு மகிழ்ச்சியான வாழ்வைத் தரும்
Ø சமூகத்தில் நற்பெயருடன் இருக்க கல்வி அவசியம்.
Ø பிறருடைய உதவி நாடாமல் சுயமாக வாழ கல்வி அவசியம்
Ø கல்வி நமக்கு உறுதியான பாதுகாப்பு தரும்
2. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.-இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின்
வகையைச் சுட்டி விளக்குக.
Ø ஆற்றுநீர் பொருள்கோள்
Ø
விளக்கம் : பாடலின் தொடக்கம் முதல் இறுதி வரை நேராக பொருள் கொள்ளுமாறு
அமைவது.
Ø
பொருத்தம் : முயற்சி ஒருவனுக்கு செல்வத்தைப் பெருக்கும். முயற்சி இல்லாதிருந்தால் வறுமை சேரும்.
இக்குறள் தொடக்கம் முதல் இறுதி வரை நேராக பொருள் கொள்ளுமாறு அமைந்துள்ளது.
மொழியை ஆள்வோம்
அ) மொழி பெயர்ப்பு:-
ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களைக் கவிதையில் கண்டு எழுதுக:-
யாழிசை |
It’s like new lute music |
அறைக்குள் யாழிசை ஏதென்று சென்று எட்டிப் பார்த்தேன் பேத்தி, நெட்டுருப் பண்ணினாள் நீதிநூல் திரட்டையே.
பாரதிதாசன் |
Wondering at the lute music Coming from the chamber Entered I to look up to in still My grand – daughter Learning by rote the verses Of a didactic compilation
Translated by Kavingar Desini |
Ø
Lute music |
யாழிசை |
Grand - daughter |
பேத்தி |
chamber |
அறை |
rote |
நெட்டுரு |
To look up |
பார்த்தல் |
Didactic compilation |
நீதிநூல் திரட்டு |
2. அட்டவணையில் விடுபட்டதை எழுதுக.
வேர்ச் சொல் |
எழுவாய்த் தொடர் |
பெயரெச்சத் தொடர் |
வினையெச்சத் தொடர் |
விளித் தொடர் |
வேற்றுமைத் தொடர் |
ஓடு |
அருணா ஓடினாள் |
ஓடிய அருணா |
ஓடி வந்தாள் |
அருணா ஓடாதே! |
அருணாவிற்காக ஓடினாள் |
சொல் |
அம்மா சொன்னார் |
சொன்ன அம்மா |
சொல்லிச் சென்றார் |
அம்மா சொல்லாதே! |
கதையைச் சொன்னார் |
தா |
அரசர் தந்தார் |
தந்த அரசர் |
தந்து சென்றார் |
அரசே தருக! |
புலவருக்குத் தந்தார் |
பார் |
துளிர் பார்த்தாள் |
பார்த்த துளிர் |
பார்த்துச் சிரித்தாள் |
துளிரே பார்க்காதே |
துளிருடன் பார்த்தேன் |
வா |
குழந்தை வந்தது |
வந்த குழந்தை |
வந்து பார்த்தது |
குழந்தையே வா |
குழந்தைக்காக வந்தாள் |
3. தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.
Ø 1. கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்.
Ø
விடை: அழகிய குளிர்ந்த கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்
Ø 2. மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.
Ø விடை: நிழல் தரும் மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.
Ø 3. வாழ்க்கைப்பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத்
தருகிறது.
Ø விடை: இன்பத் துன்பம் நிறைந்த வாழ்க்கைப்பயணமே வேறுபட்ட பாடங்களைக்
கற்றுத் தருகிறது.
4. கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.
Ø விடை: சிறந்த கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.
Ø 5. குழந்தைகள் தனித்தனியே எழுதித் தர வேண்டும்.
Ø விடை: சுட்டிக் குழந்தைகள் தனித்தனியே எழுதித் தர வேண்டும்
மொழியோடு விளையாடு
Ø
அ) புதிர்ப் பாடலைப் படித்து விடையைக் கண்டுபிடிக்க:-
Ø தார்போன்ற
நிறமுண்டு கரியுமில்லை
Ø பார்
முழுதும் பறந்து திரிவேன் மேகமுமில்லை
Ø சேர்ந்து
அமர்ந்து ஒலிப்பேன் பள்ளியுமில்லை
Ø சோர்ந்து
போகாமல் வீடமைப்பேன் பொறியாளருமில்லை
Ø வீட்டுக்கு
வருமுன்னே, வருவதைக் கூறுவேன்
Ø
.நான் யார்?________காகம்_____________
Ø
ஆ. தொழிற்பெயர்களின் பொருளைப் புரிந்து கொண்டு தொடர்களை முழுமை செய்க
Ø
1. நிலத்துக்கு அடியில் கிடைக்கும்
____புதையல் _____யாவும் அரசுக்கே சொந்தம்.நெகிழிப் பொருள்களை மண்ணுக்கு அடியில் ___ புதைத்தல்
__ நிலத்தடி நீர் வளத்தைக் குன்றச் செய்யும்.(புதையல்,புதைத்தல்)
Ø
2. காட்டு விலங்குகளைச் ____ சுடுதல் ____தடை செய்யப்பட்டுள்ளது.
செய்த தவறுகளைச் _______ சுட்டல்
____திருத்த உதவுகிறது.( சுட்டல்,சுடுதல்
)
Ø
3. காற்றின் மெல்லிய __ தொடுதல் ____ பூக்களைத் தலையாட்ட
வைக்கிறது. கைகளின் நேர்த்தியான ____ தொடுத்தல் ____பூக்களை மாலையாக்குகிறது.
( தொடுத்தல்,தொடுதல் )
Ø
4. பசுமையான ____ காட்சி ___ஐக்____ காணுதல் ______ கண்ணுக்கு நல்லது.( காணுதல்,காட்சி)
Ø
5. பொது வாழ்வில்__ நடித்தல்____கூடாது
____நடிப்பு ____இல் அவரை மிஞ்ச ஆள் கிடையாது.
( நடித்தல்,நடிப்பு )
இ. அகராதியில் காண்க.
மன்றல் |
திருமணம்,மணம் ( வாசனை ) |
அடிச்சுவடு |
காலடிச்சுவடு |
அகராதி |
அகரவரிசையில் பொருள் தரும் நூல் |
தூவல் |
தூவானம்,இறகு,எழுதுகோல் |
மருள் |
மயக்கம்,பேய்,வியப்பு |
ஈ) கலைச் சொல் அறிவோம்.
Emblem |
சின்னம் |
Thesis |
ஆய்வேடு |
Intellectual |
அறிவாளர் |
Symbolism |
குறியீட்டியல் |
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது