நாள் : 13-09-2021 முதல் 18-09-2021
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு ( புத்தாக்கப் பயிற்சி)
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : அகராதியைப் பார்த்துப் பொருளறிதல்,
உரையாடல் அமைத்தல்
பக்க எண் : 8 - 11
நோக்கம் :
Ø சொற்களின்
பொருள் உணர்தல்.
Ø அகராதியைப்
பயன்படுத்துதல்,கலைக்களஞ்சியம் பயன்படுத்துதல்.
Ø உரையாடல்
அமையும் பாங்கு அறிதல்
Ø எளிதில்
புரியும் படியான உரையாடல் அமைத்தல்.
கற்றல்
விளைவுகள்:
Ø படித்தவற்றைப்
பற்றி சிந்தனை செய்து புரிதலை சிறப்பாகுதல்.
Ø அகராதியை
பயன்படுத்துதல்,இணைய தளத்தினை முறையாக பயன்படுத்துதல்
Ø செய்யுள்
நயம் பாராட்டும் திறனையும், அகராதியைப் பயன்படுத்தும் திறனையும் வளர்த்தல்.
கற்றல்-கற்பித்தல்
செயல்பாடுகள் :
Ø செய்யுள்
பகுதியினைக் கொண்டு சொற்களுக்கான பொருள் அறிதல்.
Ø அன்றாட
வாழ்க்கையில் பயன்படுத்தக் கூடிய சொற்களை சொற்பொருளுடன் இணைத்து கற்பித்தல்.
Ø மாணவர்கள்
தமது பாடப்பகுதியில் ஒரு செய்யுளினை தேர்ந்தெடுத்து அதில் காணப்படும் பொருள் அறியா
சொற்களை இனம் காணுதல்.
Ø அன்றாட
வாழ்க்கையில் காணும் நிகழ்வுகளில் உரையாடலாக உள்ளதை நினைவுப்படுத்துதல்.
Ø உரையாடலானது
புரிதல் நோக்கத்தில் அமைந்த ஒன்று
Ø எளிய
ஒரு நிகழ்வை மாணவர்களுக்கு வழங்கி அதிலிருந்து உரையாடல் அமைப்பது எவ்வாறு என்பதனைக்
கூறல்.
Ø மாணவர்களிடையே
சிறு உரையாடல் நிகழ்வை நிகழ்த்துதல்
வலுவூட்டல்:
Ø கட்டகத்தில்
காணும் மதிப்பீடு செயல்பாடுகளுக்கு விடைக் காண முற்படுதல்
Ø இணையத்தில்
எவ்வாறு சொற்களுக்கான பொருள் காணல் முறையைக் கூறி வலுவூட்டல்.
Ø வீட்டில்
நடக்கும் உரையாடலை நினைவுப்படுத்துதல்.
Ø ஆசிரியர்,மாணவர்களுக்கிடையே
நடக்கும் உரையாடலை கூறி வலுவூட்டல்
மதிப்பீடு:
Ø பொருள்
அறிக : அடிசில்,ஆவலி, இம்மி.நண்ணலர்,வங்கூழ்
Ø கொராணா
விழிப்புணர்வு உன் வீட்டில் நீ எவ்வாறு உண்டாக்குவாய் என்பதற்கு உரையாடல் அமைக்க
Ø ஆசிரியர்
தயாரித்து வைத்த விடுபட்ட உரையாடலை நிரப்பச் செய்தல்.
தொடர்பணி:
Ø உமது
பாடப்பகுதியில் செய்யுள் பகுதியில் காணும் சொல்லும் பொருளும் தொகுத்து வருமாறு கூறல்.
Ø கொராணாவினால் ஏற்பட்ட கல்வி இழப்பை எவ்வாறு சரி செய்வது என்பதற்கு உனது நண்பருடன் கலந்துரையாடும் கருத்துகளை உரையாடல் வடிவில் அமைத்து வருக.
PDF - format
குறிப்பு :
தமிழ்விதை தினசரி செய்ய
வேண்டிய செயல்பாடு திட்டங்கள் அட்டவணை கொண்ட பட்டியல் படி இந்த பாடக்குறிப்பேடு தயார்
செய்யப்பட்டுள்ளது. இதனை அப்படியே பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லை. சூழலுக்கு ஏற்றவாறு
மாறுபாடு செய்துக் கொண்டு எழுதுக. இதற்கு அடுத்ததடுத்த வரும் பாடக் குறிப்பேடுகளும்
ஒரு மாதிரிக்காகத் தான் பதிவு செய்யப்படுகிறது என்பதனை நினைவில் கொள்க. நன்றி, வணக்கம் – தமிழ்விதை
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது