BASIC QUIZ HI - TECH LAB
STUDENT ATTENDANCE
REGISTER
அன்பார்ந்த உயர் கணினி தொழில் நுட்ப ஆய்வக பொறுப்பு ஆசிரியர்களுக்கு வணக்கம். இந்த கொராணா காலக்கட்டத்தில் மாணவர்கள் கடந்த 18 மாதங்களுக்கும் மேலாக கல்வி கற்பதில் இடர்பாடுகள் ஏற்பட்டது. அதனால் அரசு கல்வித்தொலைக்காட்சி, வானொலி அலைவரிசை,வலையொளி மூலம் மாணவர்களின் இல்லங்களுக்கே கல்வியைக் கொண்டு சேர்ந்தது. இந்த 18 மாத இடைவெளிக்குப் பின் தற்போது 9 முதல் 12 வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடி வகுப்பு செப்டம்பர் 01-09-21 அன்று முதல் நடைபெற்று வருகிறது. இதனிடையே மாணவர்களின் கற்றல் திறனை சோதிப்பதற்காக இணையம் வழியாக அதாவது exams.tnschools.gov.in/login என்ற கல்வி மேலாண்மை வலைதளம் வழியே பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முன்னோட்டமாக அடிப்படைத் திறன்களை சோதிப்பதற்கான BASIC QUIZ தேர்வானது தமிழ்,ஆங்கிலம்,கணிதம்.அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களிலிருந்து ஒவ்வொரு பாடத்திற்கும் 10 கேள்விகள் மொத்தம் 50 மதிப்பெண்களுக்கான தேர்வு ஒவ்வொரு மாணவருக்கும் 1 மணி 30 நேரம் ஒதுக்கி மாலை வரை தேர்வு நடைபெறுகிறது. இது ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நாட்களில் நடைபெறும், மேலும் அன்றைய தினம் தேர்வைத் தவறவிட்ட மாணவர்கள் மீண்டும் ஒரு வாய்ப்பாக செவ்வாய் கிழமை அந்த தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு பெரும்பாலும் நமது பள்ளியில் உள்ள உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தில் நடத்தப்படுவது தெரிந்தது. இந்த உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தில் நடக்கும் செயல்பாடுகளை குறித்துக் கொள்ள ஏதுவாக இந்த பதிவேடு இந்த பதிவின் வழியாக உங்களுக்கு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு அடுத்ததாக உயர் தொழில் நுட்ப ஆய்வக செயல்பாடுகள் பதிவேடு பகிரப்படும். தற்போது மாணவர்கள் BASIC QUIZ வருகைப் பதிவேடு இங்கு பகிரப்பட்டுள்ளது. தேவைப்படும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் உயர் தொழில் நுட்ப கணினி ஆய்வக பொறுப்பாளர் இதனை பதிவிறக்கம் செய்து பராமரித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். வாராவாரம் தேர்வு நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளதால் இதனை தேவையான அளவு தாங்கள் பதிவிறக்கம் செய்து அச்சுப்படியாக கோர்த்து பராமரிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நன்றி, வணக்கம்.
KINDLY DOWNLOAD
ATTENDANCE RECORD
CLICK HERE
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது