10TH - SLOW LEARNERS - SPECIAL GUIDE - UNIT -7-REDUSE SYALLABUS

 

WWW.THAMIZHVITHAI.COM

குறைக்கப்பட்ட தமிழ் பாடத்திற்கான வழிகாட்டி

மெல்ல கற்போர் சிறப்பு வழிகாட்டி

பத்தாம் வகுப்பு – தமிழ்

இயல் – 7

விதை நெல்

) பலவுள் தெரிக:-

1. ‘ மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும் ‘ – மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே

) திருப்பதியும்,திருத்தணியும்             

) திருத்தணியும்,திருப்பதியும்

) திருப்பதியும் திருச்செந்தூரும்

) திருப்பரங்குன்றமும் பழனியும்

2. ‘ தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன் என்னும் மெய்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள்-

) மேம்பட்ட நிருவாகத்திறன் பெற்றவர்  ) மிகுந்த செல்வம் உடையவர்             ) பண்பட்ட மனித நேயம்

) நெறியோடு நின்று காவல் காப்பவர்

3. இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்__________________

) நாட்டைக் கைப்பற்றல்         ) ஆநிரை கவர்தல்                            

) வலிமையை நிலைநாட்டல்  ) கோட்டையை முற்றுகையிடல்

4. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது___________________

) திருக்குறள்        ) புறநானூறு       ) கம்பராமாயணம்

) சிலப்பதிகாரம்

) குறு வினா

1. பாசவர்,வாசவர்,பல்நிண விலைஞர்,உமணர்சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?

·        பாசவர்வெற்றிலை விற்போர்

·        வாசவர்நறுமணப் பொருள் விற்போர்

·        பல்நிண வினைஞர்இறைச்சிகளை விற்பவர்

·        உமணர்உப்பு விற்பவர்

2. மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?

               அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைத்து நிற்க கல்லிலும் செப்பேட்டிலும் மெய்கீர்த்தி எழுதினார்கள்

3. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்குச் சான்று தருக.

·        பழைய புத்தக கடையில் புத்தகம் வாங்குதல்

·        உணவுக்கான பணத்தில் புத்தகம் வாங்குதல்

4. புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.

v  வெட்சிகரந்தை

v  வஞ்சிகாஞ்சி

v  நொச்சி - உழிஞை

5. பொருத்தமான இடங்களில் நிறுத்தக் குறியிடுக.

               பழங்காலத்தில் பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி

சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப் பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன். –.பொ.சி

பழங்காலத்தில் பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி,சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப் பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன். –.பொ.சி

) சிறு வினா

1. அவந்தி நாட்டு மன்னன்,மருத நாட்டு மன்னனுடன் போர் புரிந்து அந்நாட்டை கைப்பற்ற நினைக்கிறான்; அப்போர் நிகழ்வைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக.

v  அவந்தி நாட்டு மன்னன் மண்ணாசை காரணமாக வஞ்சிப் பூவைச் சூடிப் போருக்குச் செல்கிறான்வஞ்சித்திணை

v  அவந்தி நாட்டு மன்னனை மருத நாட்டு மன்னன் காஞ்சிப் பூவை எதிர்த்து போரிடுகிறான் - காஞ்சித்திணை

2. “ தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” – இடம் சுட்டிப் பொருள் விளக்குக.

இடம்: மாநகர தந்தை செங்கல்வராயன் தலைமைமாநகராட்சி சிறப்புக் கூட்டம்

பொருள் : மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது ஆந்திராவின் தலைநகர் சென்னை இருக்க வேண்டும் என்ற நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒருநபர் ஆணையத்தை எதிர்த்து முழங்கிய முழக்கம் இது.

விளக்கம் : இதன் பொருட்டு மா.பொ.சி. சென்னையை மீட்க தலைக்கொடுத்தேனும் தலைநகர் காப்போம் என முழங்கினார்.

3. பகர்வனர் திரிதிரு நகரவீதியும்;

  பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்

  கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;

  தூசும் துகிரும் ஆரமும் அகிலும்

               ) இப்பாடல் இடம் பெற்ற நூல் எது?

                              சிலப்பதிகாரம்

               ) பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.

                              கர்வனர்ட்டினும்

                              தூசும் - துகிரும்

               ) எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக.

                              ட்டினும்ட்டு

                              ர்வனர் -

) காருகர்பொருள் தருக.

                              நெய்பவர்

) இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?

சந்தனம்,அகில்

4. பின்வரும் பத்தியைப் படித்து மையக்கருத்தை எழுதுக:-

               பேரரசனது மெய்ப் புகழை எடுத்துக் கூறுவது மெய்கீர்த்தி. பொதுவாக இது சோழ மன்னருடைய சாசன்ங்களின் தொடக்கத்தில் அரசனுடைய இத்தனையாவது ஆட்சியாண்டு என்று கூறுமிடத்து அமைக்கப்பெறும். சிறப்பாக அவனுடைய போர் வெற்றிகளையும் வரலாற்றையும் முறையாகக் கூறி, அவன் தன் தேவியோடு வீற்றிருந்து நீடு வாழ்க எனக் கூறி,பிறகே சாசனம் எழுந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடும்.

               சோழ மன்னர் பரம்பரையிலும் மெய்க்கீர்த்தியோடு சாசன்ங்களைப் பொறிக்கும் வழக்கம் நெடுநாள் இருந்ததில்லை.முதல் இராசராசனுடைய எட்டாம் ஆண்டில் தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது. இதன் கண் வமிச பாரம்பரியம் விதந்து ஓதப்படவில்லை. ஏனைய பகுதிகள் உள்ளன.எனினும் இது மிகவும் சுருக்கமாகவே உள்ளது. இன்னும் பின்வந்த மெய்கீர்த்திகளின் வமிச பரம்பரையை மிகவும் விரித்துக் கூறியுள்ளன.

மையக்கருத்து:

               சோழ மன்னர்களின் ஆட்சிக்காலம்,போர் வெற்றிகள் ஆகியவற்றை எடுத்துக் கூறி பின்னர் மன்னரையும், அவர் மனைவியையும் வாழ்த்தி எழுதப்பட்டுள்ளது.

நெடுவினா

1. நாட்டு விழாக்கள்விடுதலைப் போராட்ட வரலாறுநாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்குகுறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில்மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.

குறிப்புச் சட்டகம்

Ø  முன்னுரை

Ø  நாட்டு விழாக்கள்

Ø  விடுதலைப் போராட்ட வரலாறு

Ø  நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்கு

Ø  முடிவுரை

முன்னுரை:

               மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும் பற்றி இக் கட்டுரையில் காணலாம்.

நாட்டு விழாக்கள்:

               சுதந்திர தினம், குடியரசு தினம், காந்திஜெயந்தி, தேசிய ஒருமைப்பாடு தினம், ஆகிய நாட்களில் மாணவர்கள் ஒற்றுமையோடு கொண்டாடி நாட்டிற்கு பெருமை சேர்க்கின்றனர்.

 விடுதலைப் போராட்ட வரலாறு:

               வெள்ளையனே வெளியேறு,உப்பு சத்தியாகிரகம் போன்ற போராட்டங்கள் மூலம் பெற்ற விடுதலையை எண்ணி போற்ற வேண்டும்.

நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்கு:

               மாணவர்கள் கல்வி பயில்வதோடு பள்ளியில் செயல்படும் சாரணர் இயக்கம்,இளஞ்செஞ்சிலுவை சங்கம்,NSS,NCC போன்ற இயக்கங்களில் இணைந்து சுதந்திர இந்தியாவை காப்பாற்றும் பொறுப்பு அறிந்து செயல் பட வேண்டும்.

முடிவுரை:

               நாட்டினை உயர்த்துவேன்,தலை நிமிர்ந்து வாழ்வேன் என்ற உறுதியான மனநிறைவோடு வாழ்ந்திடுவோம்.

2. பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள மெய்க்கீர்த்திப் பாடலின் நயத்தை விளக்குக.

v  இரண்டாம் இராச இராச சோழனின் நாட்டின் வளம்,ஆட்சிச் சிறப்பைச் சொல்கிறது.

v  யானைகள் மட்டும் பிணிக்கப்படுகிறது.மக்கள் பிணிக்கப்படவில்லை.

v  சிலம்புகள் புலம்புகின்றன. மக்கள் புலம்புவதில்லை.

v  ஓடைகள் கலக்கமடைகின்றன.மக்கள் கலக்கமடைவதில்லை.

v  நீர் அடைக்கப்படிகிறது. மக்கள் அடைக்கப்படுவதில்லை.

v  மாங்காய்கள் வடுபடுகிறது. மக்கள் வடுபடுவதில்லை.

v   நெற்போர் மட்டுமே இருக்கிறது.மற்ற போர்கள் இல்லை.

 

3. சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக:-

மருவூர்ப்பாக்க வணிக வீதி

இக்கால வணிக வளாகங்கள்

தானியக் கடைத் தெருக்கள்

தனித்தனி அங்காடிகள்

நேரடி வணிகம்

இடைத் தரகர்கள் அதிகம்

இலாப நோக்கமற்றது

இலாபம் மட்டுமே முக்கியம்

கலப்படம் இல்லாதது

கலப்படம் கலந்துள்ளது

தரம் உண்டு.விலை குறைவு

விலை அதிகம்

4. நிகழ்வுகளைத் தொகுத்து அறிக்கை எழுதுக.

மகளிர் நாள் விழா

இடம்பள்ளிக் கலையரங்கம்                               நாள் -08.03.2019

கலையரங்கத்தில் ஆசிரியர்கள்,மாணவர்கள் கூடுதல்தலைமையாசிரியரின் வரவேற்புஇதழாளர் கலையரசியின் சிறப்புரைஆசிரியர்களின் வாழ்த்துரைமாணவத் தலைவரின் நன்றியுரை.

 

மகளிர் நாள் விழா

அறிக்கை

               எம்பள்ளிக் கலையரங்கத்தில் 08-03-2019 அன்று மகளிர் நாள் விழா நடைபெற்றது.

மாணவர் ,ஆசிரியர் கூடுதல்:

               கலையரங்கத்தில் மாலை 3.00 மணியளவில் மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கூடினர்.தமிழ்த்தாய் வாழ்த்து பாடி விழா தொடங்கப்பட்டது.

தலைமையாசிரியர் வரவேற்பு:

               தலைமை ஆசிரியர் வந்திருந்த அனைவரையும் தேன் தமிழ் சொற்களால் வரவேற்றார். தலைமை ஆசிரியர் கூறிய இதழாளர் கலையரசி பற்றிய வரவேற்பும்,அறிமுகமும் மிகவும் சிறப்பாக இருந்தது.

இதழாளர் கலையரசியின் சிறப்புரை:

               இதழாளர் கலையரசியின் பேச்சு மகளிருக்கு மட்டுமல்ல. அனைவருக்கும் உந்து சக்தியாக அமைந்தது.

Ø  மகளிர்ன் சிறப்புகள்

Ø  மகளிருக்கு அரசின் நலத் திட்டங்கள்

Ø  சுய உதவிக்குழுக்களின் பங்கு

Ø  மகளிர் கல்வி

போன்ற கருத்துகள் தெளிவாகவும்,அருமையாகவும் இருந்தது.

ஆசிரியர்களின் வாழ்த்துரை:

               ஆசிரியர் கலையரசியின் உரைக்கு வாழ்த்து தெரிவித்ததோடு நம் பள்ளி மாணவிகளையும் பல்வேறு சாதனைகள் புரிய வேண்டும் என வாழ்த்துரை வழங்கினார்.

 மாணவத் தலைவரின் நன்றியுரை:

               மாணவத் தலைவர் சிறப்பு விருந்தினருக்கும்,தலைமை ஆசிரியருக்கும்,ஆசிரியர்களுக்கும்,மாணவர்கள் மற்றும் அவர் தம் பெற்றோருக்கும் நன்றி கூறினார். மகளிர் நாளில் உறுதி மொழி எடுக்கப்பட்டு நாட்டுப்பண் பாடி விழா இனிதே நிறைவுற்றது.

 

மொழியை ஆள்வோம்

) மொழிபெயர்க்க:-

               Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutam region was the fit for cultivation, as it had  the most fertile lands. The properity of a farmer depended on getting the necessary sunlight,seasonal rains and the fertility of the soil.Among these elements of nature,sunlight was considered indispensible by the ancient Tamils.

விடை: சங்க கால இலக்கியத்தில் ஐவகை நிலங்களில் மருதம் பயிரிட ஏற்றது. அங்குதான் செழிப்பான விளைநிலங்கள் உள்ளன. விவசாயின் உண்மையான உழைப்பின் பலன் தகுந்த சூரிய ஒளி,பருவ மழை மற்றும் மண்வளம் ஆகியவற்றை சார்ந்திருக்கிறது. ஆனாலும் அனைத்திலும் சிறந்ததாக சூரிய ஒளியே தமிழர்களால் தவிர்க்க முடியாத ஒன்றாய் குறிப்பிடப்பட்டுள்ளது.

) பின்வரும் தொடர்களைக் கொண்டு பொருத்தமான தொடர் அமைக்க.

வரப் போகிறேன்

இன்னும் சற்று நேரத்தில் வரப்போகிறேன்

இல்லாமல் இருக்கிறது

பெரும்பாலான கிணறுகளில் நீர் இல்லாமல் இருக்கிறது

கொஞ்சம் அதிகம்

இவனுக்கு குறும்பு கொஞ்சம் அதிகம்

முன்னுக்குப் பின்

பாலன் முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறான்

மறக்க நினைக்கிறேன்

சோகங்களை மறக்க நினைக்கிறேன்

) தொகைச் சொற்களைப் பிரித்து எழுதி,தமிழ் எண்ணுரு தருக

               மூவேந்தர்களால் நாற்றிசையும் போற்றி வளர்க்கப்பட்ட முத்தமிழே, உலக மொழிகளில் உயர்ந்ததென்ற செம்மாந்த கூற்றிற்கு, தமிழ் இலக்கியங்களில் அமைந்துள்ள இருதிணை அமைப்பே காரணமாகும். முப்பாலை முழுமையாகத் தந்த தமிழின் சிறப்பினை ஐந்திணைகளில் அழகுற விளக்குபவை சங்க இலக்கியங்கள். நானிலத்தில் பசித்தவருக்கு அறுசுவை உணவுபோல் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் படிப்பவர்க்கு மனதிற்கினிமை ஈந்து தமிழ்ப் பெருமை சாற்றுகிறது.

தொகைச்சொற்கள்

பிரித்து எழுதுக

தமிழ் எண்ணுரு

மூவேந்தர்

மூன்று + வேந்தர்

நாற்றிசை

நான்கு + திசை

முத்தமிழ்

மூன்று + தமிழ்

இருதிணை

இரண்டு + திணை

முப்பால்

மூன்று + பால்

ஐந்திணை

ஐந்து + திணை

நானிலம்

நான்கு + நிலம்

அறுசுவை

ஆறு + சுவை

பத்துப்பாட்டு

பத்து + பாட்டு

0

எட்டுத்தொகை

எட்டு + தொகை

 

மொழியோடு விளையாடு

) ஊர்பெயர்களின் மரூஉவை எழுதுக:-     

ஊர் பெயர்

மரூஉ

ஊர் பெயர்

மரூஉ

ஊர் பெயர்

மரூஉ

புதுக்கோட்டை

புதுகை

கோயம்புத்தூர்

கோவை

கும்பகோணம்

குடந்தை

திருச்சிராப்பள்ளி

திருச்சி

நாகப்பட்டினம்

நாகை

திருநெல்வேலி

நெல்லை

உதகமண்டலம்

உதகை

புதுச்சேரி

புதுவை

மன்னார்குடி

மன்னை

மயிலாப்பூர்

மயிலை

சைதாப்பேட்டை

சைதை

தஞ்சாவூர்

தஞ்சை

 PDF - FORMAT

தயாரிப்பு:-

வெ.ராமகிருஷ்ணன்,

பட்டதாரி ஆசிரியர்.

இது போன்ற மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்

 பயன்படக்கூடிய படைப்புகளை பெற பின் வரும் தளங்களை பின் தொடரவும்….

www.thamizhvithai.com

https://tamilrk-seed.blogspot.com

கல்வித் தொடர்பான காணொளிகளைக் காண ( subscribe )

https://www.youtube.com/c/தமிழ்விதை

 

 

 

 

 



About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...