சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
ந.க.எண்.013186/அ5/2021 நாள். 22.09.2021
மேற்காணும் செயல்முறைகளின் படி 10,11,12 வகுப்புகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளப்படி வாராந்திர தேர்வுக்கான மாதிரித் தேர்வு வினாத்தாள் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இது சேலம் மாவட்ட ஆசிரியர்கள் மட்டுமன்றி மற்ற மாவட்ட ஆசிரியர்களும் தத்தம் மாணவர்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மாணவர்களுக்கு பயிற்சி வழங்க ஏதுவாக இருக்கும்.
மேலும் இந்த வினாத்தாள் வடிவமைப்பானது புத்தாக்கப்பயிற்சியினை மையமாகக் கொண்டு அதன் அடிப்படையில் அதனோடு ஒத்துப் போகிற வினாக்களைத் தேர்வு செய்து 40 மதிப்பெண் கொண்ட வினாத்தாளாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு தாங்கள் போதித்த பயிற்சிகள் / பாடங்களின் அடிப்படையில் வினாத்தாள் உருவாக்கி தேர்வு வைத்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வினாத்தாள் வடிவமைப்பு எந்த முறையையும் பின்பற்றப்படவில்லை. இதனை ஆசிரியர்கள் அப்படியே பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. இது ஒரு மாதிரி வாராந்திர தேர்வுக்கான வினாத்தாள் மட்டுமே.
அறிவிப்பு : இந்த வினாத்தாள் காகிதப் பயன்பாட்டைக் குறைத்து சுற்றுச்சூழலை காக்கும் வகையில் ஒரேத்தாளில் இரு பக்கம் வினாத்தாள் அமைந்திருக்கும். ஒரு தாளில் இரு வினாத்தாள் என்பது இரு மாணவர்களுக்கு நீங்கள் வழங்க ஏதுவாக இருக்கும். செப்டம்பர் மாதத்திற்கான மாதத்தேர்வு வினாத்தாள் சனிக்கிழமை பதிவேற்றம் செய்யப்படும். அந்த மாதத்தேர்வானது இரு வாரங்களுக்கு உண்டான வினாத்தாளாக இருக்கும். முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களால் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் செப்டம்பர் மாதத்தேர்வு வினாத்தாள் இரு வாரங்களிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களிலிருந்து அமையும். மாணவர்களுக்கு தினசரி தேர்வு, வாரத்தேர்வு, மாதத்தேர்வு இந்த வகையில் வினாக்கள் அமையும் போது மாணவர்கள் மீண்டும் மீண்டும் பயிற்சி செய்வதற்கும் அவை உதவியாக இருக்கும். ஆகவே இங்கு பதிவேற்றம் செய்யப்படும் வினாக்கள் பல தினசரி தேர்வு வினாத்தாள், வாரத்தேர்வு வினாத்தாள், மாதத்தேர்வு வினாத்தாள் மூன்று வகையான வினாத்தாள்களிலும் இடம் பெற்றிருக்கக் கூடும். மீண்டும் மீண்டும் அவை தேர்வு எழுதுவதால் அவர்களுக்கு பொதுத்தேர்வில் அவ்வகையான வினாக்களுக்கு விடைகளை விரைவாகவும், எளிமையாகவும் எழுதிட முடியும். இதனைப் பற்றி நீங்கள் உங்கள் கருத்துகளை தயவுக் கூர்ந்து செய்திப் பெட்டியில் ( comment box ) இடும் படி அன்போடு வேண்டுகிறேன். இந்த வாரத்திற்கான ( 27-09-21 முதல் 01-10-2021 ) வினாத்தாள் கீழே உள்ள DOWNLOAD என்ற பொத்தானை அழுத்துவதன் மூலம் பெறலாம். செப்டம்பர் நான்காம் வாரத்தேர்வு வினாத்தாளுக்கான விடைக் குறிப்பு சனிக்கிழமை மாலை பதிவேற்றம் செய்யப்படும்.
வகுப்பு :10 வாரம் : 27-09-21 TO 01-10-21
பாடம் : தமிழ் மதிப்பெண் : 40
வினாத்தாள் பதிவிறக்க
இங்கே சொடுக்கவும்
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
மாதாந்திர தேர்வுக்கான வினாத்தாள் இன்னும் பதிவேற்றவில்லை சார்.
ReplyDelete