6TH - REFRESH COURSE - NOTES OF LESSON


WWW.THAMIZHVITHAI.COM


 நாள்                         :           01 -11-2021   முதல்  06 -11-2021                                      

வாரம்                     :         நவம்பர் -  முதல் வாரம்

வகுப்பு                  :           ஆறாம் வகுப்பு 

                                        ( புத்தாக்கப் பயிற்சி)                             

பாடம்                    :           தமிழ்

பாடத்தலைப்பு    :           அடிப்படை மொழித் திறன்கள்

பக்க எண்            :              01 -  06

நோக்கம்  :

Ø  எழுதுதல் திறன்

Ø  சொற்களஞ்சிய பெருக்கம்

Ø  அடுக்குத்தொடர் ,இரட்டைக்கிளவி

Ø  திணை மற்றும் பால் வகை

Ø  மூவிடங்கள் மற்றும் காலங்கள்

Ø  ஒருமை,பன்மை அறிதல்

கற்றல் விளைவுகள்:

Ø  எழுத்துகளை அறிதல்

Ø  எழுத்துகளைக் கொண்டு சொற்களை அறிதல் மற்றும் உருவாக்குதல்

Ø  அடுக்குத்தொடர் மற்றும் இரட்டைகிளவி வகைப்பாடுகளை அறிதல்

Ø  திணை மற்றும் பால் விகுதிகளை காணல்

Ø  மூவிடப்பெயர்களையும், காலங்களையும் அறிதல்

Ø  ஒருமை,பன்மை வகைப்பாடு அறிந்து பயன்படுத்துதல்

கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் :

Ø  தமிழில் உள்ள மொத்த எழுத்துகளின் எண்ணிக்கையை நினைவூட்டல், ஒலித்துக்காட்டுதல்.

Ø  முதல் எழுத்தைக் கொடுத்து இரண்டு எழுத்து சொற்கள், மூவெழுத்து சொற்கள் உருவாக்குதல்

Ø  ஓசைகளை உச்சரிக்கச் செய்து இரட்டைக் கிளவி சொற்களையும், சொற்களை அடுக்கிக் கூறச் சொல்லி அடுக்குத் தொடர் சொற்களை உருவாக்குதல்

Ø  வீட்டில் உள்ளவர்களைக் கொண்டு பால் பகுப்பும், திணை வகையையும் அறியச் செய்தல்

Ø  தனக்கு,முன் இருப்பவருக்கு,மற்றவருக்கு பொருட்களைக் கொடுக்கச் செய்து மூவிடங்களைக் கூறச் செய்தல்.

Ø  கையில் உள்ள / வகுப்பறையில் உள்ள பொருட்களைக் கொண்டு ஒருமை, பன்மை அறிய வைத்தல்

வலுவூட்டல்:

Ø  கற்பித்தல் செயல்பாடுகளை விளையாட்டு முறையில் மாணவர்களுக்கு மீண்டும் நினைவூட்டி  பாடப்பொருளை வலுவூட்டி மாணவர்களை வகுப்பறையில் மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்,

மதிப்பீடு:

Ø  தமிழில் உள்ள உயிர்மெய்யெழுத்துகளின் எண்ணிக்கை ________

Ø  த, கா, பொ – எழுத்துகளை முதலாக் கொண்ட சொற்களை உருவாக்குக.

Ø  வாழ்க வாழ்க , சட சட –  எவ்வகைச் சொற்கள்?

Ø  நான் வந்தேன் – பிழையைத் திருத்துக

Ø   நிரப்புக :- அவைகள் _____________ ( பற )

தொடர்பணி:

Ø  தமிழ் எழுத்துகளின் வகைகள் எழுதி வருக

Ø  வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு திணை,பால் அறிக.

Ø  மூவிடங்களுக்கும்  உண்டான  தொடர்களை எழுதி வருக.

 PDF - SOON 

குறிப்பு :

தமிழ்விதை தினசரி செய்ய வேண்டிய செயல்பாடு திட்டங்கள் அட்டவணை கொண்ட பட்டியல் படி இந்த பாடக்குறிப்பேடு தயார் செய்யப்பட்டுள்ளது. இதனை அப்படியே பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லை. சூழலுக்கு ஏற்றவாறு மாறுபாடு செய்துக் கொண்டு எழுதுக. இதற்கு அடுத்ததடுத்த வரும் பாடக் குறிப்பேடுகளும் ஒரு மாதிரிக்காகத் தான் பதிவு செய்யப்படுகிறது என்பதனை நினைவில் கொள்க.  நன்றி, வணக்கம் – தமிழ்விதை




About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...