நாள் : 15 -11-2021 முதல் 20 -11-2021
வாரம் : நவம்பர் - மூன்றாம் வாரம்
வகுப்பு : ஆறாம் வகுப்பு
( புத்தாக்கப் பயிற்சி)
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : அடிப்படை மொழித் திறன்கள்
பக்க எண் : 12 - 16
நோக்கம் :
Ø மூவிடங்கள் மற்றும் காலங்கள் அறிதல்.
Ø ஒருமை,பன்மை அறிதல்
Ø வினாச்சொற்கள் அறிதல்
Ø பெயர்ச்சொல்,வினைச்சொல் அறிதல்
Ø தொடர் அமைப்பு அறிதல்
கற்றல் விளைவுகள்:
Ø தொடர்களில் மூவிடங்கள் மற்றும் காலங்கள் உணர்தல்.
Ø ஒருமை, பன்மை விகுதிகளை அடையாளம் காணுதல்
Ø வினா எழுத்துகள் அறிந்து வினாத் தொடர் அமைத்தல்
Ø பெயர்ச்சொல், வினைச்சொல் பற்றி அறிதல்
Ø தொடரில் எழுவாய்,பயனிலை மற்றும் செயப்படு பொருள் அறிதல்.
கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் :
Ø மூவிடங்கள் :
தன்மை | முன்னிலை | படர்க்கை |
தன்னை குறிப்பது | முன்னால் இருப்பவரைக் குறிப்பது | மற்றவரை குறிப்பது |
Ø காலங்கள் - இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்
Ø ஒருமை – ஒன்றைக் குறிப்பது
Ø பன்மை – ஒன்றுக்கு மேற்பட்டதைக் குறிப்பது
Ø வினா எழுத்துகள் – எ,யா,ஆ,ஓ,ஏ
Ø வினாச்சொல் அமையும் தொடரின் இறுதியில் வினாக்குறி ( ? ) இடுதல் அவசியம்.
பெயர்ச்சொல் | வினைச்சொல் |
Ø பெயரைக் குறிப்பது | Ø வினையைக் குறிப்பது |
Ø தொடர் அமைப்பு அறிதல்
எழுவாய் | பயனிலை | செயப்படுபொருள் |
செயலைச் செய்தவரைக் குறிப்பது | எழுவாய் செய்யும் செயலைக் குறிப்பது | எழுவாய் ஒரு செயலைச் செய்ய அதற்கு அடிப்படையாக அமைந்த பொருள் |
வலுவூட்டல்:
Ø கற்பித்தல் செயல்பாடுகளை விளையாட்டு முறையில் மாணவர்களுக்கு மீண்டும் நினைவூட்டி பாடப்பொருளை வலுவூட்டி மாணவர்களை வகுப்பறையில் மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
மதிப்பீடு:
Ø நான் வந்தேன் – இத்தொடரில் “ நான் “ என்பதன் இடம் யாது?
Ø விளையாடு – இச்சொல்லை மூன்று காலத்திற்கும் எவ்வாறு அமையும்?
Ø ஒருமையைப் பன்மையாக மாற்றுக : பறவை , கல், ஆள், வந்தார்
Ø விடுபட்ட இடத்தில் வர வேண்டிய வினா சொற்களை எழுதுக.
· வந்தவர் __________ , அவர் ________ கொடுத்தார்?
· உன் நண்பர் ________ கூறினான்?
Ø மாறன் படம் வரைந்தான் – இத்தொடரில் உள்ள பெயர்ச்சொல், வினைச்சொல் யாது?
Ø எழுவாய்,செயப்படுபொருள், பயனிலை அமையுமாறு தொடர் கூறுக.
தொடர்பணி:
Ø மூவிடங்களை உணர்த்தக் கூடிய தொடர்கள் 5 எழுதி வருக.
Ø வினையடி சொல்லை மூன்று காலத்திற்கும் வருமாறு எழுதி வருக.
Ø உமது வீட்டில் உள்ள பொருட்களைக் ஒருமை, பன்மை என வகைப்படுத்தி எழுதி வருக.
Ø நாள் தோறும் செய்யக் கூடிய செயல்பாடுகளை எழுதி அதில் பெயர்ச்சொல், வினைச் சொல் தனியே எழுதி வருக.
Ø தொடர் அமைப்பு முறை அறிந்து 5 தொடர்கள் எழுதி வருக.
தங்கள் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது. சரி பார்ப்பது மிகவும்
ReplyDeleteவரவேற்கத் தக்கது.
Kindly message at 8695617154
Delete