நாள் : 15 -11-2021 முதல் 20 -11-2021
வாரம் : நவம்பர் - மூன்றாம் வாரம்
வகுப்பு : ஆறாம் வகுப்பு
( புத்தாக்கப் பயிற்சி)
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : அடிப்படை மொழித் திறன்கள்
பக்க எண் : 12 - 16
நோக்கம் :
Ø மூவிடங்கள் மற்றும் காலங்கள் அறிதல்.
Ø ஒருமை,பன்மை அறிதல்
Ø வினாச்சொற்கள் அறிதல்
Ø பெயர்ச்சொல்,வினைச்சொல் அறிதல்
Ø தொடர் அமைப்பு அறிதல்
கற்றல் விளைவுகள்:
Ø
தொடர்களில் மூவிடங்கள் மற்றும் காலங்கள் உணர்தல்.
Ø
ஒருமை, பன்மை விகுதிகளை அடையாளம் காணுதல்
Ø
வினா எழுத்துகள் அறிந்து வினாத் தொடர் அமைத்தல்
Ø
பெயர்ச்சொல், வினைச்சொல் பற்றி அறிதல்
Ø
தொடரில் எழுவாய்,பயனிலை மற்றும் செயப்படு பொருள் அறிதல்.
கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் :
Ø மூவிடங்கள் :
தன்மை |
முன்னிலை |
படர்க்கை |
தன்னை குறிப்பது |
முன்னால் இருப்பவரைக் குறிப்பது |
மற்றவரை குறிப்பது |
Ø காலங்கள்
- இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்
Ø ஒருமை
– ஒன்றைக் குறிப்பது
Ø பன்மை
– ஒன்றுக்கு மேற்பட்டதைக் குறிப்பது
Ø வினா
எழுத்துகள் – எ,யா,ஆ,ஓ,ஏ
Ø வினாச்சொல்
அமையும் தொடரின் இறுதியில் வினாக்குறி ( ? ) இடுதல் அவசியம்.
பெயர்ச்சொல் |
வினைச்சொல் |
Ø பெயரைக்
குறிப்பது |
Ø வினையைக்
குறிப்பது |
Ø தொடர்
அமைப்பு அறிதல்
எழுவாய் |
பயனிலை |
செயப்படுபொருள் |
செயலைச் செய்தவரைக் குறிப்பது |
எழுவாய் செய்யும் செயலைக் குறிப்பது |
எழுவாய் ஒரு செயலைச் செய்ய அதற்கு அடிப்படையாக அமைந்த பொருள் |
வலுவூட்டல்:
Ø கற்பித்தல் செயல்பாடுகளை விளையாட்டு முறையில்
மாணவர்களுக்கு மீண்டும் நினைவூட்டி பாடப்பொருளை
வலுவூட்டி மாணவர்களை வகுப்பறையில் மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
மதிப்பீடு:
Ø
நான் வந்தேன் – இத்தொடரில் “ நான் “ என்பதன் இடம் யாது?
Ø
விளையாடு – இச்சொல்லை மூன்று காலத்திற்கும் எவ்வாறு அமையும்?
Ø
ஒருமையைப் பன்மையாக மாற்றுக : பறவை , கல், ஆள், வந்தார்
Ø
விடுபட்ட இடத்தில் வர வேண்டிய வினா சொற்களை எழுதுக.
·
வந்தவர் __________ , அவர் ________ கொடுத்தார்?
·
உன் நண்பர் ________ கூறினான்?
Ø
மாறன் படம் வரைந்தான் – இத்தொடரில் உள்ள பெயர்ச்சொல், வினைச்சொல்
யாது?
Ø
எழுவாய்,செயப்படுபொருள், பயனிலை
அமையுமாறு தொடர் கூறுக.
தொடர்பணி:
Ø மூவிடங்களை உணர்த்தக் கூடிய தொடர்கள் 5 எழுதி வருக.
Ø வினையடி சொல்லை மூன்று காலத்திற்கும் வருமாறு எழுதி வருக.
Ø உமது வீட்டில் உள்ள பொருட்களைக் ஒருமை, பன்மை என
வகைப்படுத்தி எழுதி வருக.
Ø நாள் தோறும் செய்யக் கூடிய செயல்பாடுகளை எழுதி அதில்
பெயர்ச்சொல், வினைச் சொல் தனியே எழுதி வருக.
Ø தொடர் அமைப்பு முறை அறிந்து 5 தொடர்கள் எழுதி வருக.
make a simple download button
ReplyDelete