ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வணக்கம். கொராணா பரவல் அதிகரித்துள்ள காரணத்தால் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜனவரி - 31 வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதித்துள்ளது. மாணவர்கள் இந்த விடுமுறையை விழாக்கால விடுமுறை என கருதாமல் பொதுத் தேர்வுக்கு தங்களை தயார்ப்படுத்திக் கொள்ள விடப்பட்ட விடுமுறையாக எண்ணி, நாள் தோறும் பாடங்களை வீட்டிலிருந்து கற்க வேண்டும். மேலும் கல்வித் தொலைக்காட்சி வாயிலாக நடத்தப்படும் பாடங்களை கவனிக்க வேண்டும். இந்த வலைதளம் அன்றைய தினத்தில் ஒளிபரப்பாகும் கல்வித் தொலைக் காட்சி காணொளியினை உங்களுக்கு பகிர்வதோடு நில்லாமல் சம்பந்தபட்ட பாடத்திற்கு உண்டான பணித்தாளினையும் உடனிருந்து வழங்கி வருகிறது. மாணவர்கள் இவற்றைப் பயன்படுத்தி தங்களின் கற்றலை மேம்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் ஜனவரி 31 வரை விடுமுறை என்பதால் இந்த வலைதளம் மாணவர்களுக்கு இணையம் வழியாக பாடங்களை நடத்த அனுமானிக்கப்பட்டுவருகிறது. அதற்கான அறிவிப்பு விரைவில் உங்களை வந்தடையும். அதனால் நாம் எப்போதும் தமிழ்விதை வலைதளத்தோடு உடனிருந்து பயணிப்போம்.
எதிர் வரும் முதல் திருப்புதல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மாணவர்களும் ஆசிரியர்களும் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டு இருந்த இந்த வேளையில் கொராணா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. பிப்ரவரி மாதம் தான் தேர்வு நடைபெறும். அதற்கான அறிவிப்பு கிடைக்கப்பெற்றதும் இந்த வலைதளத்தில் அறிவிக்கப்படும். மாணவர்கள் தங்களை மேலும் செம்மையாக்கிக் கொள்ள இந்த விடுமுறை என கருதி பாடங்களை நன்கு ஆழ்ந்து படிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
மாணவர்கள் எதிர் வரும் திருப்புதல் தேர்விற்கு தயாரகும் விதம் இங்கு சமூக அறிவியல் பாடத்திலிருந்து ஒரு மதிப்பெண் வினாக்கள் இணைய வழி வினாக்களாகக் கொடுக்கப்பட்டு அதில் 80% சதவீத மதிப்பெண் பெறும் அனைவருக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும். மாணவர்கள் ஒரு முறை மட்டுமே தேர்வு எழுத முடியும். எனவே மாணவர்கள் கவனமுடன் தேர்வெழுத கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
சமூக அறிவியல் பாடத்தில் முதல் திருப்புதல் தேர்வுக்குரிய பாடப்பகுதியிலிருந்து ஒரு மதிபெண் வினாக்கள் 100 மதிப்பெண்களுக்குரிய வினாக்கள் உங்களுக்கு இணைய வழித் தேர்வாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆங்கிலப் பாடத்தினை நன்முறையில் பயிற்சி செய்து அந்த தேர்வினை எழுதுங்கள். இந்த தேர்வில் நீங்கள் 80% மதிப்பெண் பெற்றால் உங்களை பாராட்டி மின் சான்றிதழ் உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இணையத் தேர்வில் கேட்கப்பட்டுள்ள அடிப்படை தகவல்களை சரியாகவும் முழுமையாகவும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். நீங்கள் சரியான தற்சமயம் நடைமுறையில் உள்ள மின்னஞ்சல் முகவரியினை கொடுக்க வேண்டும். அப்போது தான் நீங்கள் தேர்ச்சி பெற்றால் உங்களுக்கான சான்றிதழை உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு சரியாக அனுப்ப இயலும். உதாரணமாக மின்னஞ்சல் முகவரியை கொடுப்பது எப்படி எனில் thamizhvithai@gmail.com இப்படி கொடுக்க வேண்டும். அதாவது @gmail.com என இருக்க வேண்டும். அல்லது @yahoo.com என இருக்க வேண்டும். மாணவர்கள் உங்களுக்கு மின்னஞ்சல் முகவரி இல்லையெனில் அண்ணன், தந்தை,தாய்,இவர்களின் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்தும் தேர்வு எழுதலாம்.
மாணவர்கள் இணைய வழித் தேர்விற்கு தங்களை நன்றாக தயார்ப்படுத்திக் கொண்டு எழுதவும். ஏனெனில் ஒருவர் ஒரு முறை மட்டுமே பங்கேற்க இயலும்.
தேர்வில் 80% மதிப்பெண் பெற வாழ்த்துகள்.
இணைய வழி சான்றிதழ் தேர்வு - சமூக அறிவியல்
CLICK HERE TO ATTEND THE QUIZ
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது