GOOGLE PHOTOS பயன்படுத்துவரா நீங்கள்?உங்களுக்கான GOOGLE முக்கிய அறிவிப்பு

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு Google Photosஸை அறிமுகம் செய்தோம். அன்றுமுதல் இது உங்கள் படங்களை நிர்வகிக்கும் ஆப்ஸாக மட்டுமல்லாமல் மேலும் பல அம்சங்களையும் வழங்கி வருகிறது. உங்கள் கடந்தகால நினைவுகளைப் புரட்டிப்பார்த்து மகிழ ஏற்ற இடமாக மாறியுள்ளது. Google Photos இன்று ஒரு லட்சம் கோடி படங்களுக்கும் வீடியோக்களுக்குமான உறைவிடமாக உள்ளது. இதில் உங்களுடைய நினைவுப் பொக்கிஷங்களும் அடங்கும், அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு வாரமும் இரண்டாயிரத்து எண்ணூறு கோடி படங்களும் வீடியோக்களும் இதில் பதிவேற்றப்படுகின்றன. உங்களிடமிருந்து மேலும் பல நினைவுகளைத் திரட்டி எதிர்காலத்துக்கான Google Photosஸைக் கட்டியமைக்க, எங்கள் சேமிப்பகக் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்துகிறோம்.

Google Drive, Gmail போன்ற பிற Google சேவைகளுக்கு ஏற்கெனவே கணக்கிடப்படுவதைப் போன்றே ஜுன் 1, 2021 முதல் உயர்தரத்திலும் அடிப்படைத் தரத்திலும்* காப்புப் பிரதி எடுக்கப்படும் எல்லாப் புதிய படங்களும் வீடியோக்களும் உங்கள் Google கணக்கின் 15 ஜி.பை. இலவசச் சேமிப்பகத்தின் கீழோ நீங்கள் வாங்கியிருக்கக்கூடிய கூடுதல் சேமிப்பகத்தின் கீழோ கணக்கிடப்படும்.

ஜுன் 1, 2021க்கு முன்பு உயர்தரத்திலும் அடிப்படைத் தரத்திலும் காப்புப் பிரதி எடுக்கப்படும் எல்லாப் படங்களுக்கும் வீடியோக்களுக்கும் இந்த மாற்றத்திலிருந்து விலக்களிக்கப்பட்டு அவை உங்கள் Google கணக்குச் சேமிப்பகத்தின் கீழ் கணக்கிடப்படாது. உயர்தரத்திலும் அடிப்படைத் தரத்திலும் ஏற்கெனவே பதிவேற்றப்பட்ட உள்ளடக்கம் அனைத்தும் இதில் அடங்கும்.

இது சாதாரணமான முடிவல்ல, ஒரு மாபெரும் திருப்புமுனை என்றே கருதுகிறோம். எனவே இது குறித்து முன்கூட்டியே தெரிவித்து இந்த மாற்றத்துக்கு ஏற்ப உங்களைத் தயார்ப்படுத்தத் தேவையான உதவிகளை வழங்க விரும்புகிறோம்.

நான் இப்போதே எதுவும் செய்ய வேண்டுமா?

வேண்டியதில்லை, நீங்கள் தொடர்ந்து உங்கள் படங்களையும் வீடியோக்களையும் Google Photosஸில் காப்புப் பிரதி எடுத்துக்கொள்ளலாம். ஜூன் 1, 2021க்குப் பிறகு நீங்கள் சேமிப்பக வரம்பை நெருங்கும்போது உங்களுக்கு நினைவூட்டல்களை அனுப்புவோம். பெரும்பாலான பயனர்களுக்கு இந்நடவடிக்கைக்கான தேவை பல ஆண்டுகளுக்குப் பிறகே ஏற்படும்.

எனது 15 ஜி.பை. இலவசச் சேமிப்பகத்தின் வரம்பை எட்ட எவ்வளவு காலம் ஆகும்?

உங்களுக்கான சேமிப்பக ஒதுக்கீட்டு வரம்பை எட்ட எவ்வளவு காலம் உள்ளது என்பதைக் காட்டும் தனிப்பட்ட கணக்கீடு ஒன்றை உருவாக்கியுள்ளோம். உங்கள் Google கணக்கில் எவ்வளவு அடிக்கடி படங்கள், வீடியோக்கள் உள்ளிட்ட பிற உள்ளடக்கத்தைக் காப்புப் பிரதி எடுக்கிறீர்களோ அதைப் பொறுத்து இந்தக் கணக்கீடு அமைந்திருக்கும்.

எனது சேமிப்பகத்தை நிர்வகிக்க என்ன செய்ய வேண்டும்?

ஜூன் 1, 2021 அன்று ஒரு புதிய சேமிப்பக நிர்வாகிக் கருவியை அறிமுகம் செய்யப்போகிறோம், அது இருண்ட, மங்கலான, பிற தேவையில்லாத உள்ளடக்கத்தை எளிதாகக் கண்டறிந்து நீக்க உதவும். கூடுதலான Google One சேமிப்பகத்தையும் கிடைக்கும் இடத்தில் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.
உங்கள் நினைவுகளைப் பாதுகாப்பாகச் சேமிக்க Google Photosஸைத் தேர்வுசெய்ததற்கு நன்றி. படச் சேமிப்பகத்திற்கான தேவை அதிகரித்துவரும் நிலையில் அதற்கு ஈடுகொடுக்கவும் எதிர்காலத்திற்கான Google Photosஸைக் கட்டமைப்பதில் தனிக்கவனம் செலுத்தவும் இந்த மாற்றம் எங்களுக்கு உதவுகிறது. இந்த மாற்றம் குறித்து மேலும் அறிய, எங்கள் உதவி மையக் கட்டுரையையோ வலைப்பதிவு இடுகையையோ பார்க்கவும்.
நன்றி,
உங்கள் Google Photos குழு



About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...