பயிற்சிப்புத்தகம் - ஆறாம் வகுப்பு - தமிழ் - தாள் -7க்கான விடைக்குறிப்புகள்

 

ஆறாம் வகுப்பு

தமிழ்

பருவம் – 1

இயல் – 2 - விரிவானம் - கிழவனும் கடலும்

பயிற்சித்தாள் – 7 ( விடைகள் மட்டும் )

1. வா வா , சாப்பிடு சாப்பிடு , வா வா

2.

பெயர்ச்சொல்

வினைச்சொல்

1. சாண்டியாகோ

2. அவன்

3. மீனவர்

4. மீன்

5. மனிதன்

1. திரும்ப மாட்டார்

2. வந்தான்

3. இருந்தான்

4. அனுப்பிவிட்டனர்

 

3. அ. ஆங்கில மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது.

  ஆ. எர்னெஸ்ட் ஹெமிங்வே 

 

4. சாண்டியாகோ 

 

5. ஜிலேபி

  கோல்ட் பிஷ்

  பாறை மீன்

  வஞ்சிரம்

  கெண்டை

  கெழுத்தி

  ரோகு

  சுறா மீன்

  ஜெல்லி மீன்

 

6. நான் சாண்டியாகோவாக இருந்திருந்தால் மீன் கிடைக்காத நேரத்தில் புத்தக்ங்கள் வாசிப்பது, மரக் கன்று நடுவது, வீணாகும் நீரை தோட்டங்களுக்கு திருப்புவது, கவிதை,கட்டுரை எழுதுவது, மீன் பிடிக்கும் காலங்கள், மீன் அதிகமாக கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற வேலைகளை செய்துக் கொண்டு இருப்பேன்.

 

7. கனிஷ் : டே! முகில் எப்படி இருக்குற?

  முகில் : நான். நல்லா இருக்கேன் டா. உனக்கு ஒன்னு தெரியுமா?

  கனிஷ் : என்னடா முகில்?

  முகில் : போன வாரம் நம்ம தமிழ் ஐயா கிழவனும் கடலும் பாட்த்தை நடத்துனாருல்ல?

  கனிஷ் : ஆமாடா. பாவம் தாத்தா சாண்டியாகோ. ரொம்பவும் கஷ்டப்பட்டாரு.பாவம்           கடைசியில் மீன் தலை மட்டும் தான் கிடைத்தது. ஆனாலும் தாத்தவோட விடா            முயற்சி பாராட்ட்த்தக்கது. இதை ஐயா நயத்தோடு நடிச்சிக்காட்டுனாரு. அப்புறம்           அதுக்கு உண்டான காணொளியும் விரைவுத்துலங்கல் குறியீடு மூலமா                       காண்பிச்சாரே ! அதுக்கு என்னடா இப்ப.

  முகில்: ஆமாடா. நானும் இப்ப போன ஞாயிறு விடுமுறையில் பக்கத்து                         வீட்டு    மாமாவோட பூலாம்பட்டி ஏரிக்கு மீன் பிடிக்க  படகுல                                 போனேன் 

  கனிஷ்: என்னடா சொல்லுறா? ஏரியில படகுல போனீயா? பயமா                                         இல்லையா   உனக்கு? 

  முகில்: ஆமாடா பயமாத்தான் இருந்தது முதலில். அப்புறம் அந்த                                        மாமாவோட     தைரியம் இருந்ததால் பயம் இல்லடா. அவங்க                                 மீன் பிடிக்க தூண்டில், வலை,  மண்புழு,சின்ன சின்ன மீன்கள்,                             மாமிசத் துண்டுகள் இது எல்லாம்   எடுத்துக்கிட்டு போனாங்க..

  கனிஷ்: மீன் பிடிக்க வலை மற்றும் தூண்டில் போதுமே... மத்ததெல்லாம                         எதுக்குடா?

  முகில்: வெறும் தூண்டில் மற்றும் வலை மட்டும் இருந்தா மீன் பிடிக்க                                 முடியாது. மீன் நம் வலை மற்றும் தூண்டிலை நாடி வர                                             வேணும்னா இது எல்லாம்   அது மாட்டி விடணும் அப்ப தான்                                 மீன்கள் வந்து மாட்டும் அப்பிடின்னு அந்த  மாமா சொன்னாரு.

  கனிஷ்: அப்ப நீயும் மீன் பிடிக்க கத்துக்கிட்டயா? 

  முகில்:     ஆமாடா. அந்த மாமா சொல்ல சொல்ல நான் அதுப்படி                                             பண்ணுனேன். மீனும்           கிடைச்சது.

  கனிஷ்;     என்னென்ன மீன் கிடைச்ச்சது?

  முகில்:     பூலாம்பட்டி ஏரியில் ரோகு,ஜிலேபி, பாறை மீன் தான் அதிகம்                               கிடைக்குமாம்.  எங்களுக்கும் அது தான் கிடைச்சது. மீன்                                        பிடிக்கிறதும் கஷ்டமான   தொழில்ன்னு   அன்னிக்கி                                               தெரிஞ்சிக்கிட்டேன். கடலுக்குள் சென்று மீன் பிடிக்கும்                                         மீனவர்கள்  எல்லாம் உயிரை கையில பிடிச்சிக்கிட்டு தான்                                     தொழில்  செய்யறாங்கன்னு அன்று   தெரிஞ்சிக்கிட்டேன் டா.  இது                     எனக்கு  நல்ல  அனுபவம் டா.

  கனிஷ்: அப்படியா? டே நானும் வரேன்டா. எனக்கும் கத்துக் கொடுக்கச்                             சொல்லித்தாடா.

  முகில்: சரி, அடுத்த வாரம் அந்த மாமாவோட நான் போகும் போது                                     உன்னை   கூப்புடுறேன்  நீ வந்து விடு. சரியா?

  கனிஷ்: சரி.

 

8.       ஒருவரின் தோற்றத்தையும், வயதையும் வைத்து நாம் சாதரணமாக யாரையும் எடைப் போடக்கூடாது என்பதை இந்த கிழவனும் கடலும் என்ற கதை மூலமாக உணர முடிகிறது. ஒரு வயதான தாத்தா இவ்வளவு வயதிலும் இவ்வளவு நாள் தொடர்ந்து முயற்சி செய்து வெற்றிப் பெறுவது என்பது மிக எளிய காரியம் அல்ல.. இதனை தான் வள்ளுவர்

  தெய்வத்தான் ஆகாதெனின் முயற்சித் தன்மெய்

   வருத்தக் கூலி தரும்.

தெய்வத்தால் கூட முடியாத காரியம் தன்னுடைய விடா முயற்சியால் வெற்றிக்கிட்டும் எனக் கூறுகிறார்.

        ஒவ்வொரு நாளும் கடலுக்கு செல்வதும் வெறும் கையோடு வீடு திரும்புவதும் என நாற்பது நாட்களும் செல்கின்றன. இதில் அவரது தன்னம்பிக்கை தெரிகிறது. இந்த தன்னம்பிக்கை என்றாவது ஒரு நாள் அவருக்கு வெற்றித் தேடிவரும். சாண்டியாகோ அவர்கள் தன் நம்பிக்கை மீது நம்பிக்கை வைத்து தினமும் முயற்சி எடுத்து வெற்றியும் காண்கிறார். இதனைத் தான் நம் வள்ளுவர்,

  முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

   இன்மை புகுத்தி விடும்.

ஒருவன் ஒரு செயலில் நம்பிக்கை வைத்து தொடர்ந்து முயற்சி வந்தால் அந்த விடா முயற்சியானது அந்த செயலில் அவருக்கு வெற்றியைத் தேடி தந்துவிடும்.அவ்வாறு இல்லாமல் அது வரும் போது வரட்டும் என முயற்சி செய்யாமல் இருந்தால் தோல்வியே கிட்டும்.இந்த தள்ளாத வயதிலும் தான் மேற்கொண்ட செயலில் தன்னம்ப்பிகையுடன் விடாமுயற்சி செய்து வெற்றிப் பெற்றதை பார்க்கும் போது நாம் இந்த சிறு வயதிலேயே ஆக்கப்பூர்வமான வேலைகளில் ஈடுபட்டு தன்னம்ப்பிக்கையுடன் விடா முயற்சி மேற்கொண்டால் நமக்கும் வெற்றிக் கிடைக்கும் எனக் கூறி இத்துடன் என் சிற்றுரையை முடிக்கிறேன். நன்றி, வணக்கம்.

 

9. ( இது கற்பனை. மாணவர்கள் தங்களுக்கோ அல்லது தம்மைச் சார்ந்தவர்களுக்கோ சாவாலான நிகழ்வு ஏற்பட்டு இருப்பின் அதனை எழுதவும்)

 

         ஒரு கிராமத்தில் மிகவும் வயதான தம்பதிகள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் மண்பானைகளும், பொம்மைகளும் செய்யும் தொழில் செய்து வந்தனர். அவர்கள் தினமும் பானை செய்து அதனை விற்று வந்தால் அதில் வரும் தொகை தான் அவர்களின் அன்றாட தேவையை நிறைவு செய்யும். இவ்வாறு இவர்கள் செய்யும் பானையை அந்த வயதான தாத்தா பானை செய்து அதனை சந்தையில் விற்று வர வேண்டும். இவரும் மிதிவண்டியில் வைத்துக் கொண்டு நாள்தோறும் சந்தை நடைபெறும் இடங்களைத் தேடிச் சென்று விற்று வர வேண்டும். இவர் எடுத்துச் செல்லும் பானை அப்படியே மாலை வீடுத் திரும்பும். இவ்வாறே இவர் இருபது நாட்கள் வெறும் கையோடு வந்தார். ஆனால் உற்பத்தியும் செய்து அடுக்கிக் கொண்டே போனார்கள்.ஆனால் அவர் எப்படியாவது ஒரு பானையாவது இன்று விற்றுவிடலாம் என நம்பிக்கையோடு தினமும் பத்து மைல் தூரம் சென்று வந்து விடுவார்.ஒரு பானையும் விற்காமல் வருவது அவருக்கு அவரது நம்பிக்கையின் மீது சாவலாகவே இருந்தது. ஆனால் அவர் பானை கட்டிக்  கொண்டு விற்கும் முயற்சியை மட்டும் கை விடவில்லை. இவருடைய நம்பிக்கையும் முயற்சியும் வீண் போகவில்லை.

கோடை காலம் வந்தது. அவரின் பானைக்கு நல்ல வரவேற்பு. பலர் அவரின் வீடுத் தேடி வந்து வாங்கிச் சென்றனர். அவர் செய்து வைத்த அனைத்து பானைகளும் விற்றுத் தீர்ந்தன. மேலும் பல பானைகள் செய்ய முன்பணமும் வந்தது. ஆனால் இது எல்லாம் அந்த கோடை முடியும் வரை மட்டும். கோடை முடிந்தால் மீண்டும் அவரது முயற்சியும் , நம்பிக்கையும் அடுத்த கோடை வரும் வரை தொடரும்...........

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.


 

விடைக்குறிப்புகள் PDF வேண்டுவோர் 

இங்கே சொடுக்கவும்.... 

 



About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...