ஆறாம் வகுப்பு
தமிழ்
பருவம் – 2
இயல் – 2 – மதிப்பீடு
பயிற்சித்தாள் – 20 ( விடைகள் மட்டும் )
1. சரி
2. அ. மகாபலிபுரம்
ஆ. மகேந்திர வர்ம பல்லவர்
இ. மகேந்திரவர்மனின் மகனான மாமல்லரின் பெயரால் மாமல்லபுரம் எனப் பெயர் பெற்றது
3. அ. மலை – உயர்ந்த நிலப் பகுதி, மழை – நீர் பொழிவு
ஆ. வெல்லம் - இனிப்பு வெள்ளம் – நீர்ப் பெருக்கு.
இ. அறை - வீட்டின் ஒரு பகுதி அரை - பாதி
4. அ. நன்றியுணர்வு – நமக்கு யாரேனும் உதவி செய்து இருந்தால் அதை மறக்காது நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும்.
ஆ. உழைப்பு : உழைப்பே ஒருவருக்கு உயர்வு தரும்.
5. “ பழையன கழிதலும்,புதியன புகுதலும் ‘” என்பது ஆன்றோர் மொழி. போகியன்று வீட்டைச் சுத்தம் செய்து தூய்மை நாளாக கொண்டாடி இருப்பர். வீட்டில் உள்ள பயனற்ற பொருட்கள் எல்லாம் நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாளாக இந்த போகி திருநாள் கொண்டாடப்படுகிறது. அக்காலத்தில் போகியானது மழைக் கடவுளை நோக்கி வழிபடும் நோக்கில் இந்திர விழாவாக கொண்டாடப்பட்டது. ஆனால் இன்றோ வீட்டில் உள்ள பயனற்ற தேவையற்ற பொருட்களாக நெகிழிக் குப்பைகளை எரித்து காற்று மாசுபாடு அடையச் செய்கிறோம்.
6. அன்று காலாண்டுத் தேர்வு முடிந்து ஆசிரியர் தேர்வுத்தாளினை திருத்திக் கொண்டு இருந்தார். என்னுடைய நண்பனும் எப்போதும் நன்றாகப் படிக்க கூடியவன். ஆனால் அவனது குடும்பம் கொஞ்சம் ஏழ்மையானது. அவன் சரியாகப் படிக்கவில்லை என்றால் அவனை கூலி வேலைக்கு அனுப்பிவிட்டுவிடுவார் அவரது தந்தை. இதனால் அவன் படிப்பில் எப்போதும் கவனம் செலுத்துவான். ஆனால் இந்த காலாண்டுத் தேர்வில் அவனுக்கு உடல் நிலை சரியில்லாமல் படிப்பில் கவனம் செலுத்தவில்லை. இதனால் தான் எங்கே தேர்ச்சி பெறாமல் போய்விடுமோ என்று எண்ணி, வீட்டிலேயே அந்த தேர்வுக்கான விடைகளை எழுதி அதை ஆசிரியர் திருத்தும் தாளின் கட்டில் வைத்து விட்டான். ஆனால் அவன் தேர்வன்று எழுதிய தாளினை எடுக்கவில்லை. ஆனால் அவன் வைத்த தாளில் என்னுடைய பெயர் இருந்தது. ஆசிரியர் தாளினைத் திருத்தும் போது என்னுடைய தாள் இரண்டு இருந்தது கண்டு என்னை கண்டிக்கவும்,அடிக்கவும் செய்தார். ஆனால் நான் அவன் தான் வைத்தான் என்பதனை நான் கூறவில்லை.
7. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன். அவருக்கு தெய்வப்புலவர், செந்நாபோதகர், மாதனுபங்கி என சிறப்புப் பெயர்கள் கொண்ட திருவள்ளுவரால் திருக்குறள் இயற்றப்பட்டது. இது அறம், பொருள், இன்பம் என மூன்று பிரிவுகளையும், 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டது. திருக்குறள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே சிறந்த அறக்கருத்துகளைக் கூறுகிறது. இந்த அறக்கருத்துகள் உலக மக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் உள்ளது. இதனால் இது உலகப்பொதுமறை என வழங்கப்படுகிறது. திருக்குறள் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
8. 1. அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்
2. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
3. விளையும் பயிர் முளையிலேயே தெரியும்
4. ஆடிப்பட்டம் தேடி விதை
5. புஞ்சைக்கு நாலு உழவு நஞ்சைக்கு ஏழு உழவு
9. தஞ்சை பெரிய கோவில்
இக்கோவில் விமான உயரம் 216 அடி. தமிழின் உயிர்மெய்யெழுத்துகளின் எண்ணிக்கை 216. இந்த கோயிலின் அமைப்பும் தமிழுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மேலும் இந்த கோயிலானது தமிழ் உணர்வோடு கட்டப்பட்டது. இந்த கோவில் 1010ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஒரு கோவில் நிலைத்து இருப்பது பெருமையாக இருக்கிறது. இதன் பொருட்டு இங்கு ஒரு முறையாவது செல்ல வேண்டும் என மனம் ஏங்குகிறது.
பயிற்சித்தாள் -20க்கான விடைக்குறிப்புகள் - PDF FORMAT
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது