- சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு 2015-ம் ஆண்டு முதல், முதல் - அமைச்சர் மாநில விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 6 பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன் படி இந்த ஆண்டுக்கான விருது வருகிற சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ளது. இந்த விருதை பெற த்குதியான விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம். இந்த விருது 15 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 01-04-2020 முதல் 31-03-2021 வரை உள்ள சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருக்க வேண்டும்.
- மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இந்த விருதுக்கு விண்ணபிக்க முடியாது. விண்ணப்பதாரர்களுக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.
- இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வருகிற 30-06-2021 கடைசி நாளாகும். இதனை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
- இணைய தள முகவரி : www.sdat.tn.gov.in
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது