சேலம் மாவட்டத்தில் பணிபுரியும் தமிழ் ஆசிரியர்கள் தங்களின் தமிழ் இலக்கியத் திறன்களை வெளிப்படுத்திக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு.
சேலம் மாவட்டத்தில் இயங்கி வரும் சிலம்பொலி செல்லப்பனார் தமிழ் காப்பு மன்றம் சேலம் மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்காக இலக்கிய கருத்தரங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கொரானா ஊரடங்கு காலத்தில் தமிழாசிரியர்கள் தங்களின் இலக்கியத்திறனை வெளிப்படுத்த இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும். சேலம் வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட ஐந்து கல்வி மாவட்டங்களுக்கு 33 தலைப்பு வீதம் மொத்தம் 165 தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி ஆசிரியர்கள் 5பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை எழுதி சமர்ப்பிக்கவும்.
இந்த வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பை பயன்படுத்தி ஆசிரியர்கள் தங்கள் விபரங்களை பதிவிட்டு பெயரை பதிவு செய்துக் கொள்ளவும். ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கும் தனித்தனியே தலைப்புகள் கீழ்க்கண்ட இணைப்பின் மூலம் நீங்கள் பெறலாம்.
திறனாய்வு கட்டுரை பற்றி கவனத்தில் கொள்ள வேண்டியவை
1. ஒருவர் ஒரு தலைப்பு மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும்.
2. திறனாய்வு கட்டுரைகள் தட்டச்சு செய்து மட்டுமே அனுப்ப வேண்டும்.( DOCX )
3. PDF அல்லது எழுதி புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டாம்.
4. UNICODE FONT - இல் தட்டச்சு செய்ய வேண்டும்.
5. புள்ளி அளவு - 10 முதல் 12 .
6. குறிப்பிட்ட காலக் கெடு இன்னும் தீர்மானிக்கப்பட வில்லை. ( ஊரடங்கு நீங்கிய பின் கருத்தரங்கு நடத்தும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் )
7. சேலம் வருவாய் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் அந்தந்த கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட தலைப்பை மட்டுமே தேர்ந்தெடுத்து எழுதவும்.
8. ஆசிரியர்கள் தங்களுக்கு திறனாய்வு குறித்த விளக்கங்களை பெற அந்தந்த கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட கல்வி மாவட்ட தமிழக தமிழாசிரியர் கழகத் தலைவர்களை அணுகவும்.( தலைவர்கள் எண்கள் ஒவ்வொரு கல்வி மாவட்டத்தலைப்பில் உள்ளது )
9. பிற மாவட்ட தமிழாசிரியர்கள் கலந்துக் கொள்ள விரும்பினால் பாவலர். திரு.இரா.மோகன் குமார் ஐயா, அவர்களைத் தொடர்புக் கொண்டு விளக்கங்களைப் பெற்று இணையத்தில் தங்களின் பெயரைத் பதிவு செய்துக் கொள்ளலாம். திரு.மோகன் குமார் ஐயா - 9363383888.
10. வெற்றிப் பெற அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.
பதிவு செய்யும் இணைப்பு
சேலம் வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட கல்வி மாவட்டத் தலைப்புகளை பதிவிறக்க இங்கே சொடுக்கவும்.
சிலம்பொலி செல்லப்பனார் தமிழ்காப்பு மன்றம் கடிதமும், அறிவுரைகளும்
சேலம்- நகர்ப்புறம் கல்வி மாவட்டத் தலைப்பு
சேலம் - ஊரகம் கல்வி மாவட்டத் தலைப்பு
சங்ககிரி - கல்வி மாவட்டத் தலைப்பு
ஆத்தூர் - கல்வி மாவட்டத் தலைப்பு
எடப்பாடி - கல்வி மாவட்டத் தலைப்பு
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது