இந்த கொரானா காலக் கட்டத்தில் பள்ளிகள் இயங்காமல் உள்ள நிலையில் மாணவர்கள் வீட்டிலிருந்து பயில வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது. இந்நிலை விரைவில் மாறி அனைவரும் பள்ளி சென்று பயிலும் காலம் விரைவில் வரும். அதுவரை மாணவர்கள் பாதுகாப்போடு இருந்து வீட்டிலிருந்தே கல்வி பயில தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சி வழிகாட்டுகிறது. மாணவர்கள் அதனை நன்றாக கவனித்து பாடங்களை பயில வேண்டும். மாணவர்கள் பாடங்களை பயில்வதோடு நில்லாமல் அதற்குரிய பயிற்சிகளையும் வீட்டில் செய்தால் தான் அந்த கற்றல் நிலையாக இருக்கும். அதனை மனதில்க் கொண்டு இந்த வலைதளம் பல்வேறு பயிற்சித்தாள்களை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. மாணவர்கள் இந்த பயிற்சித்தாள்களில் நன்கு பயிற்சி செய்து பல புதிய புதிய தகவல்களையும், தங்களின் மொழித்திறன்களையும் வளர்த்துக் கொள்ளும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
பள்ளி செல்ல இருக்கும் குழந்தைகள் தங்களின் எழுதும் திறனை வளர்த்துக் கொள்ள வரியொற்றி எழுதும் பயிற்சித்தாள்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு மாணவர்கள் தங்களின் எழுதும் திறனை வளர்த்துக் கொள்ளவும்.
தமிழ் - உயிர் எழுத்துகள் பயிற்சித்தாள்
தயவுசெய்து எழுத்தின் வடிவம் மற்றும் இரண்டு கோட்டில் எப்படி எழுதப்பட வேண்டும் என்ற சரியான முறையை அளிக்கவும். இது தவறாக உள்ளது. இணையத்தில் அளிக்கும்போது முறையானதை சரியானதை மட்டுமே அளியுங்கள்
ReplyDelete