கொரானா பேரிடர் காலத்தில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க தமிழ் நாடு அரசு ஏற்படுத்திய கல்வித் தொலைக்காட்சி வாயிலாக மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர் என்பதனை நாம் அறிந்ததே....
மாணவர்கள் கல்வித்தொலைக்காட்சியை பார்க்கும் பார்வை பராமரிப்பு பதிவேடு இங்கு தரப்பட்டுள்ளது. ஐந்து நாட்களுக்கு உண்டான தாளாகவும், பத்து மாணவர்கள் வரிசையைக் கொண்ட தாளாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவேடு இரண்டு வழிகளிலே தந்துள்ளேன். ஒன்று PDF வடிவம், மற்றொன்று தங்கள் வகுப்பு மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்பே தாங்களே தட்டச்சு செய்துக் கொள்ளும்படியான அசல் வடிவம் இணைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் இதில் மாணவர்கள் பெயரை அடுத்து உள்ள பார்வை விபரம் என்ற கலத்தில் இரண்டு கட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. சிறிய கட்டத்தில் தேதியினை குறிப்பிடவும். அதற்கு அடுத்துள்ள கலத்தில் அன்றைய தினம் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடத்தலைப்பினை சுருக்கமாக கொடுக்கவும். அதற்கு கீழ் மாணவர்கள் அந்த பாடத்தினை கவனத்தார்களா? இல்லையா? என்பதனை (√ / ×) இந்த குறியீடு கொண்டு எழுதிக் கொள்ளவும். இந்த படிவத்தை அனைத்து வகை ஆசிரியர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் ஏதேனும் மாற்றம் வேண்டின் அல்லது வேறுவிதமான படிவம் வேண்டும் எனில் 8695617154 இந்த எண்ணில் தொடர்புக் கொள்ளவும்.
நன்றி, வணக்கம்
இந்த படிவத்தின் அசல் வடிவம் பெற ( திருத்தம் செய்துக் கொள்ள )
இந்த படிவத்தை PDF வடிவமாக பெற DOWNLOAD என்பதனைச் சொடுக்கவும்.
நன்றி சார்
ReplyDeleteநன்று
Delete