அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களுக்கும், மாணவர்களுக்கும் நன்றிகள். இந்த தளத்தினை தொடர்ந்து பார்வையிட்டு வரும் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள். கல்வித் தொலைக்காட்சியில் தினந்தோறும் ஒளிபரப்பாகும் 6 முதல் 10 வகுப்பு வரைக்குமான தமிழ்ப் பாடங்களை தினந்தோறும் வலையொளி இணைப்பினை இந்த தளத்தில் பகிர்ந்து வருவது நீங்கள் அனைவரும் அறிந்த ஒன்று. அதோடு நில்லாமல் தினமும் அந்த பாடங்களிலிருந்து 10 மதிப்பெண்கள் கொண்ட இணைய பணித்தாளும் உடன் வழங்கப்பட்டு மாணவர்களின் கற்றலில் சிறு உதவியை செய்வதில் இந்த தமிழ் விதை வலைதளமானது பெரு மகிழ்வு கொள்கிறது. நாள் தோறும் என்னிடம் இணைய பணித்தாளின் PDF வடிவம் கொடுங்கள் என்று கேட்க்கின்றனர். இந்த வலைதளத்தின் இணைப்புகளில் PDF வடிவம் கொடுத்துக் கொண்டு வருகிறேன். இருப்பினும் அதனை தொகுத்து கொடுத்தால் அவற்றை பதிவேடாகவும் பராமரிக்க ஏதுவாக இருக்கும் என்பதனைக் கருத்தில்க் கொண்டு இந்த PDF வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.
தலைப்புகளுக்கு எதிரே உள்ள DOWNLOAD என்பதனை தெரிவு செய்து நீங்கள் இந்த இணைய பணித்தாளின் PDF வடிவம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உங்கள் ஆதரவுடன்
நன்றி,வணக்கம்.
பத்தாம் வகுப்பு - பயிற்சித்தாள்கள்
PDF - FORMAT
ஜுன் - மாத பணித்தாள் பெற
ஜுலை - மாத பணித்தாள் பெற
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது