ஜூலை மாதத்திற்கான ஒப்படைப்புகள்
ஒப்படைப்புகள் -2
விடைக் குறிப்புகள்
பத்தாம் வகுப்பு
இயல்-2
இயற்கை,சுற்றுச்சூழல்
விடைக்குறிப்புகள்
பகுதி-அ
1)இயற்கை
2)மென்காற்று
3)இளங்கோவடிகள்
4)இருத்தல்
5)முல்லைப்பாட்டு
6)தொகைநிலைத்தொடர்
7)பண்புத்தொகை
8)பண்புத்தொகை
9)பாஞ்சாலி சபதம்
10)பாரதியார்
பகுதி-அ
11)யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு செய்யுளும்,உரைநடையும் கலந்து எழுதப்
பெறுவது வசனகவிதை ஆகும்.
12) “ வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில்
ஆயுள் பெருக்கம் உண்டாம்” என்கிறார் ஔவையார்
13)கிழக்கு -கொண்டல்
மேற்கு-கோடை
வடக்கு-வாடை
தெற்கு-தென்றல்
14)உயிர்வளி(ஆக்சிஜன்)
15)விரிச்சி: ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ? முடியாதோ? என ஐயம் கொண்ட
பெண்கள் மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் ஊர் பக்கத்தில் போய்,
தெய்வத்தைத் தொழுது நின்று அயலார் பேசும் சொற்களைக் கூர்ந்து கேட்பர்.
அவர்கள் நல்ல சொல்லைக் கூறினால் தம் செயல் நன்மையில் முடியும் என்றும், தீய
மொழியைக் கூறினால் தீமையில் முடியும் என்றும்
கொள்வர்.
பகுதி-ஆ
16) அ.அமிலமழை உருவாதல்
ஆ.குழந்தைகளின் மூளைவளர்ச்சி குறைதல்
இ.காய்ச்சல்,நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் உருவாதல்
ஈ.மிகுந்த உயிரிழப்பு ஏற்படுதல்
17) கார்காலச்
செய்திகள்:
அகன்ற உலகத்தை வளைத்து பெருமழை பொழிகிறது. திருமால், குறுகிய
வடிவம் கொண்டு மாவலி மன்னன் நீர் வார்த்துத் தரும்பொழுது மண்ணுக்கும்
விண்ணுக்குமாகப்
பேருருவம் எடுத்து உயர்ந்து நிற்பது போன்றுள்ளது மழை மேகம்.
அம்மேகம் கடல் நீரைப்
பருகி பெருந் தோற்றம் கொண்டு வலமாய் எழுந்து
மலையைச் சூழ்ந்து விரைந்த வேகத்துடன் பெருமழையைப் பொழிகிறது.
துன்பத்தைச் செய்கின்ற மாலைப்பொழுதில்
முதிய பெண்கள் மிகுந்த
காவலையுடைய ஊர்ப் பக்கம் சென்றனர் யாழிசை போன்று ஒலிக்கும் வண்டுகள்
சூழ்ந்து ஆரவாரிக்கும் நறுமணம் கொண்ட அரும்புகள்;அந்த மலர்ந்த முல்லை
பூக்களோடு நாழியில் கொண்டு வந்த நெல்லையும் சேர்த்து தெய்வத்தின் முன்
தூவினர். பிறகு தெய்வத்தைத் தொழுது
தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றனர்.
Question pepper anuppuka
ReplyDeleteVijayaragavan
ReplyDelete