10TH STD - ASSIGNMENT- 2-UNIT-3 -ANSWER KEY

WWW.THAMIZHVITHAI.COM

 ஜூலை  மாதத்திற்கான  ஒப்படைப்புகள் 

ஒப்படைப்புகள் -2

விடைக் குறிப்புகள்

பத்தாம் வகுப்பு

இயல்-3 

விடைக் குறிப்புகள்

பண்பாடு

பகுதி-அ

1)       ஒடு

2)     விருந்தோம்பல்

3)     வினைத்தொகை

4)     தொல்காப்பியர்

5)     தமிழர் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை செயல்

6)    செவ்விலக்கியம்

7)     உரைத்தல்

8)     மலைபடுகடாம்

9)     இல்லம்

10)     கேட்ட பாடல்

பகுதி-ஆ

11)    குடும்பத்தலைவி நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று

 உணவிடும் நற்பண்பு கொண்டவள் என நற்றிணை குறிப்பிடுகிறது.

12)    இளையான்குடி மாறநாயனார் வீட்டிற்கு வந்த சிவனடியார்க்கு விருந்தளிக்க

 தானியமில்லாதபோது,அன்று விதைத்துவிட்டு வந்த விதைநெல்லை அரித்து வந்து,

 சமைத்து விருந்து படைத்தார் எனப் பெரியபுராணம் கூறுகிறது.

13)     கொற்கை நகரத்தின் அரசர் அதிவீரராம பாண்டியன்.


    தமிழ்ப்புலவராகவும் திகழ்ந்த இவர் இயற்றிய நூலே காசிகாண்டம்.


   இவரின் மற்றொரு நூலான வெற்றிவேற்கை என்று அழைக்கப்படும் நறுந்தொகை

  சிறந்த கருத்துகளை எடுத்துரைக்கிறது.


    சீவலமாறன் என்ற பட்டப் பெயரும் இவருக்கு உண்டு.


    நைடதம், இலிங்கபுராணம், வாயு சம்கிதை,திருக்கருவை அந்தாதி, கூர்ம

 புராணம் ஆகியனவும் இவர் இயற்றிய நூல்கள் ஆகும்.


14)     ஒரு தொடரில் சொற்களுக்கு இடையில் சொல்லோ, உருபோ மறைந்து

 வராமல்வெளிப்படையாகப் பொருளை உணர்த்துவது தொகைநிலைத்தொடர்

 எனப்படும்.

(எ-டு) காற்று வீசியது, குயில் கூவியது.


15)      முற்றுப் பெறாத வினை, வினைச் சொல்லைக் கொண்டு முடிவது

 வினையெச்சத்தொடர் ஆகும்


  பாடி மகிழ்ந்தனர்- 'பாடி' என்னும் எச்சவினை மகிழ்ந்தனர் என வினையைக்

 கொண்டு முடிந்துள்ளது.

பகுதி -3

16) விருந்தினராக ஒருவர் வந்தால்,

   அவரை வியந்து உரைத்தல்,

   நல்ல சொற்களை இனிமையாகப் பேசுதல்,


   முகமலர்ச்சியுடன் அவரை நோக்குதல்


   'வீட்டிற்குள் வருக' என்று வரவேற்று அவர் எதிரில் நிற்றல்.


   அவர் மனம் மகிழும்படி பேசுதல்.


   அவர் அருகிலேயே அமர்ந்து கொள்ளுதல்


   அவர் விடைபெற்றுச் செல்லும்போது வாயில் வரை பின்தொடர்ந்து செல்லல்


    அவரிடம் புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்புதல்


         ஆகிய ஒன்பதும் விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கம் ஆகும்.


17)     பகலில் இளைப்பாறிச் செல்லுங்கள். இரவில் சேர்ந்து தங்குங்கள்.


    எரியும் நெருப்பைப் போல ஒளிரும் பூங்கொத்துகளைச் சுற்றத்தோடு அணிந்து

 கொள்ளுங்கள்.


    சிவந்த பூக்கள் கொண்ட மரங்களை உடைய பொருத்தமான பாதையில்

 செல்லுங்கள்.
    அசையும் மூங்கில்கள் ஓசை எழுப்பும் கடின பாதையில் சென்று மலைச்சரிவில்

 உள்ள  சிற்றூரை அடையுங்கள்


     அங்குள்ளவர்களிடம் பகைவரைப் பொறாமல் போர் செய்யும் வலிய முயற்சியும்

 மானமும் வெற்றியும் உடைய நன்னனின் கூத்தர்கள் என்று சொல்லுங்கள்.


    அதன் பிறகு நீங்கள் உங்கள் வீட்டிற்குள் போவது போலவே அவர்களுடைய

 வீட்டிற்குள் உரிமையுடன் நுழையுங்கள்.


    உங்கள் உறவினர் போலவே அவர்கள் உங்களுடன் பழகுவர்.


    நீண்ட வழியைக் கடந்து வந்த உங்களின் துன்பம் தீர இனிய சொற்களைக்

 கூறுவர்.


அங்கே நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியலையும் தினைச்சோற்றையும்

 உணவாகப் பெறுவீர்கள்.


        இன்று ஒரு கூத்தன் மற்றொரு கூத்தனுக்குக் கூறினார்




About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...