அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களுக்கு வணக்கம். நீண்ட இடைவெளிக்கு பின் பள்ளிகள் 01-09-2021 அன்று ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ள வகுப்புகள் செயல்பட உள்ளன. அவர்களுக்கு புத்தாக்கப்பயிற்சி வழங்கும் விதமாக பள்ளிக்கல்வித்துறை சென்ற வாரத்தில் புத்தாக்கப்பயிற்சி கட்டகம் வெளியிட்டது. அது நமது வலைதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது வரை பயிற்சிக்கட்டகம் பதிவிறக்கம் செய்யாத ஆசிரியர்கள் புத்தாக்கப்பயிற்சிக் கட்டகம் என்ற இந்த வார்த்தையினைத் தொடுவதன் மூலம் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
இந்த புத்தாக்க பயிற்சிக்கட்டகமானது 45 நாட்களுக்கு மாணவர்களுக்கு நடத்தப்பட வேண்டும். இந்த பயிற்சிக் கட்டகத்தை 45 நாட்களுக்கு நடத்துவதற்கான தின வழிகாட்டியானது நமது தமிழ்விதை வலைதளத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் மேல்நிலை - இரண்டாம் ஆண்டு வகுப்பு தமிழ் பாடத்திற்கான தினசரி வழிகாட்டி தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இதனை மாதிரியாகக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம். இதனை அப்படியே பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லை.
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது