10TH - REDUSED SYLLABUS - VIRIVANAM

 

குறைக்கப்பட்ட தமிழ் பாடத்திற்கான வழிகாட்டி

மெல்ல கற்போர் சிறப்பு வழிகாட்டி

விரிவானம் வினாக்கள்

இயல் -3 

கோபல்லபுரத்து மக்கள்கி.ராஜ நாராயணன்

 

குறிப்புச் சட்டகம்

முன்னுரை

தேசாந்திரி

கருணை அன்னமய்யா

முடிவுரை

 

முன்னுரை :

          பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதை கொடுத்து காக்கின்ற மனித நேயம் விருந்தோம்பல்.இக்கட்டுரையில் கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பலைக் காணலாம்.

தேசாந்திரி:

Ø  சுப்பையாவின் வயலில் அருகு எடுக்கும் பணி.

Ø  அன்னமய்யாவுடன் ஒரு ஆள் உடன் வந்தான்

Ø  அவன் மிக சோர்வாக இருந்தான்

Ø  லாட சன்னியாசி போல உடை அணிந்து இருந்தான்.

Ø  குடிக்க தண்ணீர் கேட்ட அவனுக்கு நீச்ச தண்ணீர் கொடுக்கப்பட்டது.

Ø  வேப்பமர நிழலில் சோர்வாக அமர்ந்தான்

கருணை அன்னமய்யா:

Ø  அவன் பெயர் பரமேஸ்வரன் என்றும்,தற்போது மணி என்றும் கூறினான்.

Ø  அன்னமய்யா ஒரு உருண்டை கம்மஞ் சோற்றையும்,துவையலும் வைத்து கொடுத்தார்.

Ø  கடுமையான பசியிலும் அரை உருண்டை சாப்பிட்டுவிட்டு கண்மூடி உறங்கினான்.

Ø  ஆனந்த உறக்கம் கண்டான்.

முடிவுரை:

          பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதை கொடுத்து காக்கின்ற கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பல் போற்றுதலுக்கு உரியது.

இயல் -7

மங்கையராய் பிறப்பதற்கே

 

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

எம்.எஸ்.சுப்புலட்சுமி

பால சரஸ்வதி

ராஜம் கிருஷ்ணன்

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

சின்னப்பிள்ளை

முடிவுரை

முன்னுரை:

          ஆண்களும் பெண்களும் சமம்.இன்றைய உலகில் பெண்களில் ஆளுமை மிக்கவர்கள் பலர்.அவர்களில் சிலரை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி:

Ø  ஐந்தாம் வகுப்பு வரை படித்தவர்.

Ø  தில்லியில் காந்தி சந்திப்பின் போதுஇரகுபதி இராகவ ராஜாராம்பாடலை பாடியவர்

Ø  1954 –இல் தாமரையணி விருது பெற்றார்.

Ø  1974 மகசேசேச விருது பெற்ற முதல் இசைக் கலைஞர்.

Ø  இந்திய மாமணி விருதும் பெற்றவர்.

பால சரஸ்வதி :

Ø  ஏழு வயதில் பாரத நாட்டியத்திற்கு மேடை ஏறியவர்.

Ø  கலைக்கு இந்திய அரங்கிலும் உலக அரங்கிலும் மதிப்பையும்,ஏற்பையும் பெற்று தந்தவர்.

Ø  நாட்டுப்பண்ணுக்கு நடனமாடியது முதலும்,இறுதியுமாக அமைந்தது.

 

இராஜம் கிருஷ்ணன்:

Ø  வேருக்கு நீர் புதினத்திற்கு சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர்.

Ø  கற்பனையாக எழுத விருமாதவர்.

Ø  ஆய்வு செய்து உண்மையின் அடிப்படையில் எழுதுபவர்.

கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்:

Ø  சுதந்திரப் போராட்டங்களில் பங்கு கொண்டவர்

Ø  பூதான இயக்கத்தில் பணியாற்றியவர்

Ø  உழுப்வருக்கே நில உரிமை இயக்கம் ஏற்படுத்தியவர்.

சின்னப்பிள்ளை:

Ø  மகளிர் குழு ஏற்படுத்தியவர்.

Ø  பாரத பிரதமரால் பெண் ஆற்றல் விருது பெற்றவர்.

Ø  சுனாமியில் மீட்பு பணியில் ஈடுபட்டவர்.

முடிவுரை:

            ஆணுக்கு பெண் சளைத்தவர்கள் அல்ல என்பதனை இக்கட்டுரையில் பெண்களின் ஆளுமையை அறிய முடிந்தது.

 

இயல் - 8

இராமானுசர் ( நாடகம் )

 

குறிப்புச் சட்டகம்

முன்னுரை

திருமந்திரம்

பிறவிப்பிணி நீக்கும் மந்திரம்

முடிவுரை

முன்னுரை :

            தனக்கு கிடைத்த அற்புதமான மந்திரத்தை மக்களுக்கு கூறி அதன் பயனைப் பெற்ற இராமானுசர் நாடகத்தை இக்கட்டுரையில் காணலாம்.

திருமந்திரம்:

Ø  திருமந்திர திருவருள் பெற தண்டு,கொடியுமாக இராமானுசரை வருமாறு பூரணரால் செய்தி கொடுக்கப்பட்டது.

Ø  தண்டு, கொடியாக கூரேசர்,முதலியாண்டாருடன் பூரணர் இல்லம் சென்றார் இராமானுசர்.

Ø  பரம ஆச்சாரியார் ஆளவந்தார் அருளிய திருமந்திரம் மூவருக்கும் கூறப்பட்டது. மந்திரம் யாருக்கும் கூறக்கூடாது என கட்டளையிட்டார்.

பிறவிப்பிணி நீக்கும் மந்திரம்:

Ø  திருக்கோட்டியூர் செளமிய நாராயணன் திருக்கோவில் மதில் மேல் நின்று இராமானுசர் மக்களுக்கு பிறவிப்பிணி நீக்கும் அம்மந்திரத்தை கூறினார்.

Ø  பூரணரின் சீடர் அழைப்பின் பேரில் இராமானுசர் பூரணர் இல்லம் சென்றார்

Ø  மக்கள் தங்கள் பிறவிப்பிணி நீங்கி பேறு பெற இம்மந்திரத்தைக் கூறினேன் எனக் கூறினார்.

Ø  உமக்கு இருந்த இந்த அருள் உள்ளம் எனக்கு இல்லாமல் போனதே என வருந்தினார் பூரணர்.

முடிவுரை:

          இறைவனின் திருவருளை உலகிற்கு உணர்த்தியவர் இராமானுசர். அவர் நீடுடி வாழ வாழ்த்தி தனது புதல்வனையும் சீடனாக ஏற்குமாறு பணித்தார் பூரணர்.

 

இயல் - 9

ஒருவன் இருக்கிறான்

-கு.அழகிரிசாமி

குறிப்புச் சட்டகம்

முன்னுரை

குப்புசாமி

பக்கத்து வீட்டுக்காரர்

முடிவுரை

முன்னுரை:

          கல்மனதையும் கரைய வைக்கும் கதை இந்த ஒருவன இருக்கிறான். இதை இக்கட்டுரையில் காண்போம்.

குப்புசாமி:

Ø  குப்புசாமி 25 வயது வாலிபன்.வயிற்று வலிக்காரன்

Ø  உறவினர்கள் இவனை அனாதைப் போல நடத்தினார்கள்.

Ø  காரணமில்லாமல் பக்கத்து வீட்டுக்காரரால் வெறுக்கப்பட்டான் குப்புசாமி.

Ø  வயிற்றுவலிக்கு மருத்துவம் பார்க்க சென்னை வந்தவன் இந்த குப்புசாமி.

பக்கத்து வீட்டுக்காரர்:

Ø  பக்கத்து வீட்டுக்காரர் காரணமில்லாமல் வெறுப்பை அவன் மீது காட்டியவர். அவரின் மனைவி கருணையோடு இருந்தவர்.

Ø  குப்புசாமிக்கு ஆறுமுகம் மூலம் கடிதம் வந்தது. ஆறுமுகமும் தன் பங்காக இரு சாத்துகுடியும்,ஒரு ரூபாய் பணமும் கொடுத்தார்.

Ø  பக்கத்து வீட்டுக்காரர் குப்புசாமிக்கும் ஒருவன் இருக்கிறான் என்பதை வீரப்பனின் கடிதம் மூலம் அறிந்தார். கடன் வாங்கி கொடுத்த அந்த மூன்று ரூபாயும் அவரின் மனதை மாற்றியது.

Ø  மனைவியை உடன் அழைத்துக்கொண்டு மருத்துவமனை செல்ல சாத்துக்குடி வாங்க சென்றார்.

முடிவுரை:

          எல்லோருக்கும் ஒருவன் இருக்கிறான் யாரும் அனாதை இல்லை என்பதை இக்கட்டுரையின் மூலம் காணும் போது மனிதம் துளிர்க்கிறது எனபதனை அறிய முடிகிறது.

 

 

 

 

தயாரிப்பு:-

வெ.ராமகிருஷ்ணன்,

பட்டதாரி ஆசிரியர்.

இது போன்ற மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்

 பயன்படக்கூடிய படைப்புகளை பெற பின் வரும் தளங்களை பின் தொடரவும்….

www.thamizhvithai.com

https://tamilrk-seed.blogspot.com

கல்வித் தொடர்பான காணொளிகளைக் காண ( subscribe )

https://www.youtube.com/c/தமிழ்விதை



About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...