10TH - REDUSE SYLLABUS - TAMIL - GENERAL ESSAYS

 

குறைக்கப்பட்ட தமிழ் பாடத்திற்கான வழிகாட்டி

மெல்ல கற்போர் சிறப்பு வழிகாட்டி

பத்தாம் வகுப்பு – தமிழ்

பொதுக்கட்டுரைகள்

1. சான்றோர் வளர்த்த தமிழ்

 

குறிப்புச்சட்டகம்
முன்னுரை
தமிழின் தொன்மை
சான்றோர்களின் தமிழ்ப்பணி
தமிழின் சிறப்பு
முடிவுரை

முன்னுரை:

               சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

தமிழின் தொன்மை:

Ø  தமிழின் தொன்மையைக் கருதி கம்பர் என்றுமுள தென்தமிழ் என்றார்.

Ø  கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ்.

சான்றோர்களின் தமிழ்ப்பணி:

Ø  ஆங்கில மொழியை தாய் மொழியாகக் கொண்ட ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து உலகறியச் செய்தார்.

Ø  வீரமாமுனிவர் தமிழில் முதல் சதுரகராதி வெளியிட்டார்

Ø  தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதன் அவர்கள் ஓலைச்சுவடியிலிருந்த பல தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிட்டார்.

தமிழின் சிறப்புகள்:

Ø  தமிழ் இனிமையான மொழி. பல இலக்கிய, இலக்கணங்களை கொண்ட மொழி.

Ø  இயல்,இசை,நாடகம் என முத்தமிழ் உடையது.

Ø  தமிழ் மூன்று சங்கங்களை கண்டு வளர்ந்தது.

முடிவுரை:

               சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் கண்டோம்.

 2. மதிப்புரை எழுதுதல்
பள்ளி ஆண்டுவிழா மலருக்காக நீங்கள் நூலகத்தில் படித்த

கதை/கட்டுரை/சிறுகதை/கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக.

 

குறிப்புச்சட்டகம்

நூலின் தலைப்பு

நூலின் மையப் பொருள்

மொழிநடை

வெளிப்படுத்தும் கருத்து

நூலின் நயம்

நூல் கட்டமைப்பு

சிறப்புக்கூறு

  நூல் ஆசிரியர்

நூலின் தலைப்பு:

                              பரமார்த்தகுரு கதை

நூலின் மையப் பொருள்:

                              சீடர்கள் குருவிடம் கொண்டுள்ள பக்தியும்,விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பது நூலின் மையப் பொருள்.

மொழிநடை:

                              நகைச்சுவையுடன் யாவருக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது.

வெளிப்படுத்தும் கருத்து:

                              பகுத்தறிவுடன் செயலபட வேண்டும் என ஒவ்வொரு கதையிலும் வெளிப்பட்டு இருக்கிறது.

நூலின் நயம்:

                              விழிப்புணர்வுடனும் நகைச்சுவையுடனும் எழுதப்பட்டுள்ளது.

நூல் கட்டமைப்பு:

                              சிறுவர்கள் ஆர்வமுடன் படிக்கும் வகையில் நூலின் கட்டமைப்பு உள்ளது.

சிறப்புக்கூறு:

                              ஒவ்வொரு கதையும் பகுத்தறியும் திறனை வெளிப்படுத்துவதாக உள்ளது.

நூல் ஆசிரியர்:

                              வீரமாமுனிவர்.

 3. அரசுப் பொருட்காட்சி 

 உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச்

சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.

 

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

பொருட்காட்சி

நுழைவுச் சீட்டு

பல்துறை அரங்கம்

அங்காடிகள்

பொழுதுபோக்கு

முடிவுரை

முன்னுரை :

எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப்பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம்.

பொருட்காட்சி :

               மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் பொருட்காட்சி நடைபெற்றது.

நுழைவுச் சீட்டு:

               பொருட்காட்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது.பெரியவர்களுக்கு 30 ரூபாயும்,சிறுவர்களுக்கு 15 ரூபாயும் என நுழைவுச்சீட்டு நிர்ணயம் செய்யப்பட்டது.

பல்துறை அரங்கம் :

               அரசின் சாதனைகள் கூறும் பல்வேறு அரசுத்துறை அரங்கங்களும்,தனியார் பொழுது போக்கு நிறுவனங்களும் நிறைய இருந்தன.

அங்காடிகள்:

               வீட்டு உபயோகப் பொருட்கள்,விளையாட்டுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என பல்வேறு பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்தன.

பொழுதுபோக்கு :

               சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாட பொம்மை அரங்கம் போன்ற பல்வேறு அரங்கங்களும்,இராட்டின்ங்களும் நிறைய இருந்தன.

முடிவுரை:

               எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வினை இக்கட்டுரையில் கண்டோம். 

 

4. வாழ்த்துரை

உங்கள் பள்ளியில் நடைபெறும் நாட்டுநலப் பணித்திட்ட முகாமின்தொடக்க விழாவில் மாணவர்களுக்கான வாழ்த்துரை ஒன்றை உருவாக்கி தருக.

v  அனைவருக்கும் வணக்கம்.

v  நாட்டு நலப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மாணவர்களை வாழ்த்துகிறேன்.

v  சேவை மற்றும் தொண்டு பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட மாணவர்களுக்கு நன்றி.

v  மாணவர்களின் உங்களின் இந்த பொது நலத் தொண்டு நாட்டின் வளத்தினை உயர்த்தும்.

v  சேவை மனப்பான்மையை வளர்க்கும் நாட்டு நலப் பணித்திட்ட செயல்பாட்டாளர்களுக்கும், பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் வாழ்த்துகள்.

 

5. நன்றியுரை 

 

பள்ளி வளாகத்தில் நடைபெற்றமரம் நடுவிழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினருக்கும்,பெற்றோருக்கும், பள்ளியின் பசுமைப் பாதுகாப்புப் படை சார்பாக நன்றியுரை எழுதுக.

 

v  பசுமைப் பாதுகாப்புப் படை அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக செயல்படுகிறது.இதன் மூலம் பள்ளிகள் பசுமையாக உள்ளது.

v  மரங்கள் நம் வாழ்வில் முக்கிய அங்கம். அதனை உணர்ந்து அனைவரும் மரங்களை வளர்க்க வேண்டும்.

v  மரம் நடும் விழாவிற்கு வருகைப்புரிந்த சிறப்பு விருந்தினர் மரங்களின் அவசியம்,மாணவர்கள் மற்றும் சமூகத்தின் கடமை ஆகியவற்றை எடுத்துரைத்து நமக்கு சிறப்பாக வழிகாட்டினார்.

v  இவ்விழாவினை ஏற்பாடு செய்த தலைமை ஆசிரியருக்கும் மற்றும் பள்ளியின் பசுமைப் பாதுகாப்புப் படைக்கும், சிறப்பான கருத்துகளை கூறிய சிறப்பு விருந்தினருக்கும்,பெற்றோருக்கும் பள்ளியின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

PDF - FORMAT


தயாரிப்பு:-
வெ.ராமகிருஷ்ணன்,

பட்டதாரி ஆசிரியர்.

இது போன்ற மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்

 பயன்படக்கூடிய படைப்புகளை பெற பின் வரும் தளங்களை பின் தொடரவும்….

www.thamizhvithai.com

https://tamilrk-seed.blogspot.com

கல்வித் தொடர்பான காணொளிகளைக் காண ( subscribe )

https://www.youtube.com/c/தமிழ்விதை



About தமிழ்விதை

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 $type={blogger}:

Post a Comment

தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது

இணையபணித்தாள்கள்

LEARN ENGLISH - ACTIVE VOICE AND PASSIVE VOICE

  ACTIVE AND PASSIVE VOICE VOICE  Subject is Active Subject is InActive  Active voice Passive voice  Doer of the action Receiver of the acti...