குறைக்கப்பட்ட தமிழ் பாடத்திற்கான வழிகாட்டி
மெல்ல கற்போர்
சிறப்பு வழிகாட்டி
பத்தாம் வகுப்பு – தமிழ்
கடிதங்கள்
மற்றும் விண்ணப்பங்கள்
1.
வாழ்த்து மடல்
மாநில அளவில நடைபெற்ற “ மரம் இயற்கையின்
வரம் “ என்னும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றிப் பெற்று
முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
சேலம்
03-03-202
அன்புள்ள நண்பனுக்கு,
நான் நலம். நீ அங்கு நலமா? என அறிய ஆவல்.” மரம் இயற்கையின் வரம் “ என்ற தலைப்பில் மாநில அளவில்
நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் நீ முதல் பரிசு பெற்றது மிக மகிழ்ச்சியாக உள்ளது.
மனமார வாழ்த்துகிறேன். நீ இன்னும் பல பரிசுகள்
பெற வாழ்த்துகிறேன்.
இப்படிக்கு,
உன்
அன்பு நண்பன்,
அ
அ அ அ அ அ அ .
உறைமேல் முகவரி;
பெறுதல்
திரு.இரா.இளங்கோ,
100,பாரதி தெரு,
சேலம்.
2.
புகார் விண்ணப்பம்
உணவு விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும்,விலைக் கூடுதலாகவும் இருந்தது குறித்து உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு கடிதம்
எழுதுக.
அனுப்புநர்
அ அ அ அ அ,
100,பாரதி தெரு,
சக்தி நகர்,
சேலம் – 636006.
பெறுநர்
உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,
உணவு பாதுகாப்பு ஆணையம்,
சேலம் – 636001
ஐயா,
பொருள்: தரமற்ற உணவு வழங்கிய உணவு விடுதி மீது நடவடிக்கை
எடுக்க வேண்டுதல் – சார்பு
வணக்கம். நான் நேற்று சேலத்தில் அன்பு உணவகத்தில் கோழி
பிரியாணி உண்டேன். அது கெட்டுப் போனதாகவும் மேலும் அதன் விலைப்பட்டியலைவிட
விலைக் கூடுதலாகவும் இருந்தது.இத்துடன் அந்த உணவிற்கான விலை இரசீது
நகல் மற்றும் உணவு பட்டியல் நகலையும் இணைத்துள்ளேன். தகுந்த நடவடிக்கை
எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.
நன்றி.
இணைப்பு: இப்படிக்கு,
1. விலை இரசீது – நகல் தங்கள் உண்மையுள்ள,
2. விலைப்பட்டியல்–நகல் அ அ அ அ அ.
இடம் : சேலம்
நாள் :
04-03-2021
உறை மேல் முகவரி:
பெறுநர்
உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,
உணவு பாதுகாப்பு ஆணையம்,
சேலம் – 636001.
3.
வேண்டுதல் விண்ணப்பம்
நாளிதழ்
ஒன்றின் பொங்கல் மலரில் “ உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்
“ என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி அந்நாளிதழ் ஆசிரியருக்கு கடிதம்
எழுதுக.
அனுப்புநர்
அ அ அ அ அ,
100,பாரதி தெரு,
சக்தி நகர்,
சேலம் – 636006.
பெறுநர்
ஆசிரியர் அவர்கள்,
தமிழ்விதை நாளிதழ்,
, சேலம் – 636001
ஐயா,
பொருள்: கட்டுரையை வெளியிட வேண்டுதல் – சார்பு
வணக்கம். நான் தங்கள்
நாளிதழில் பொங்கல் பண்டிக்கை முன்னிட்டு பொங்கல் மலரில் “ உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் “ எனும் தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளேன்.தாங்கள் அந்த கட்டுரையையும் பொங்கல் மலரில் வெளியிட வேண்டுமாய் பணிவன்புடன்
கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
இணைப்பு: இப்படிக்கு,
1. கட்டுரை தங்கள் உண்மையுள்ள,
இடம் : சேலம் அ அ அ அ அ.
நாள் :
04-03-2021
உறை மேல் முகவரி:
பெறுநர்
ஆசிரியர் அவர்கள்,
தமிழ்விதை நாளிதழ்,
, சேலம் – 636001.
4.
வேண்டுதல் விண்ணப்பம்
உங்கள்
தெருவில் மின் விளக்குகள் பழுதடைந்துள்ளன அதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு
ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்கு கடிதம் எழுதுக.
அனுப்புநர்
அ அ அ அ அ,
100,பாரதி தெரு,
சக்தி நகர்,
சேலம் – 636006.
பெறுநர்
மின்வாரிய அலுவலர் அவர்கள்,
மின்வாரிய அலுவலகம்,
சேலம் – 636001.
ஐயா,
பொருள்: மின்விளக்கு சரி செய்ய வேண்டுதல்
– சார்பு
வணக்கம். எங்கள் தெருவில் 100 குடும்பங்கள் உள்ளன. எங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. இதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே பழுதடைந்த மின்விளக்குகளை சரி செய்து கொடுக்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
இடம் : சேலம் இப்படிக்கு,
நாள் :
04-03-2021 தங்கள் உண்மையுள்ள,
அ அ அ அ அ.
உறை மேல் முகவரி:
பெறுநர்
மின்வாரிய அலுவலர் அவர்கள்,
மின்வாரிய அலுவலகம்,
, சேலம் – 636001.
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது