அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களுக்கு வணக்கம். சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளின் படி சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு ஆகிய வகுப்புகளுக்கு SLIP TEST, வாராந்திரத் தேர்வு. மாதத்தேர்வு நடத்தி உரிய பதிவேடுகளில் பதிவு செய்து வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பொருட்டு இந்த தமிழ் விதை வலைதளத்தில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள் ஒவ்வொரு வாரமும் பாடக்குறிப்பேடு பகிரும் போது பகிரப்படும். அந்த வினாத்தாட்களை மாதிரியாகக் கொண்டு நீங்கள் உங்கள் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்திக் கொள்ளலாம்.
இப்போது இந்த பதிவில் நீங்கள் மேற்கண்ட தேர்வுகளுக்கான பதிவேடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பதிவேடு முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் அனுப்பப்பட்ட படிவங்களில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ( சிறிய மாற்றம் : பத்து மாணவர்கள் மட்டுமே பதியும் படி இருந்தது.. அதனை 15 மாணவர்கள் பட்டியல் இடம் பெறும் படி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. யாருக்கேனும் திருத்தப்பட்ட EXCEL - FILE வேண்டுமெனில் COMMENT BOX - இல் உங்களுடைய புலன எண்ணை பதிவிடுக. )
மாதாந்திர தேர்வுப் பதிவேடு
வாராந்திர தேர்வுப் பதிவேடு
SLIP TEST - மதிப்பெண்கள் பதிவேடு


9842756505
ReplyDelete