நாள் : 20-09-2021 முதல் 25-09-2021
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு ( புத்தாக்கப் பயிற்சி)
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : பிறமொழி சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்களை எழுதுதல்.
செய்யுள் அடிகளின்
கருத்தை அறிதல்
பயன்பாட்டு இலக்கணம் – ஆகுபெயர்
பக்க
எண் : 18-26
நோக்கம் :
Ø தமிழ்ச்சொற்கள்
மற்றும் பிறமொழிச் சொற்களை அறிதல்.
Ø கவிதைகள்,செய்யுள்
அடிகளின் பொருள் அறிதல்.
Ø மொழிப்
பயன்பாட்டில் ஆகுபெயர் பயன்படும் விதம் அறிதல்.
கற்றல்
விளைவுகள்:
Ø தமிழ்ச்
சொற்களையும்,பிறமொழிச் சொற்களையும் வேறுபடுத்தி அறிதல்
Ø தமிழரின்
சிந்தனை மரபுகளை அறிதல்
Ø தமிழ்
இலக்கியங்கள் காட்டும் அறச்சிந்தனை அறிந்து அறத்தோடு வாழும் வாழ்வியல் திறனை பெறுதல்.
Ø மொழிப்பயன்பாட்டில்
ஆகுப்பெயர் எவ்விதம் வெளிப்படுத்தப்படுகிறது என்பதனைக் கண்டறிதல்.
கற்றல்-கற்பித்தல்
செயல்பாடுகள் :
Ø வளர்ந்து
வரும் அறிவியல் துறைக்கான கலைச்சொற்களை உடனுக்குடன்
தமிழ்மொழியில் மொழிப்பெயர்த்து அத்துறைகளை மேலும் வளர்த்தல்.
Ø
தமிழ்மொழி |
பிறமொழி |
தீ நுண்மி |
வைரஸ் |
முடக்கலை |
ஆஃப் லைன் |
கீச்சகம் |
ட்விட்டர் |
படவரி |
இன்ஸ்டாகிராம் |
சானிடைசிங் |
கிருமி
நீக்கம் |
Ø பாடல்
அல்லது செய்யுளைப் படித்து பொருளுணர்ந்து சுவைத்தல்
Ø பயிற்சிப்புத்தகத்தில்
உள்ள செய்யுள் அல்லது வேறு செய்யுளை படித்து அதன் பொருளை உணர வைத்தல்
Ø ஒன்றன்
இயற்பெயர் அதனோடு தொடர்புடைய வேறொன்றுக்கு ஆகி வருவது ஆகுபெயர்
Ø ஒரு
சொல் அதன் பொருளை குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு சொல்லுக்கு ஆகி வருவது ஆகுபெயர்
எ.கா
:
1.
மல்லிகை சூடி வந்தாள்.
2.
நாதஸ்வரம் கேட்டு மகிழ்ந்தான்
3.
மட்டைப்பந்தில் இந்தியா வெற்றிப் பெற்றது. ஆசிரியர்கள் மேலும் பல உதாரணங்களைப் பயன்படுத்தவும்.
வலுவூட்டல்:
Ø பத்தாம்
வகுப்பு பாடப்புத்தகத்தில் உள்ள கலைச் சொற்களை
சிலவற்றைக் கூறி வலுவூட்டல்
Ø அன்றாடம்
நாம் பயன்படுத்தும் சில சொற்களில் பிறமொழிச்சொற்களும் கலந்து வருவதை கண்டு அதற்கான
தமிழ் சொற்களைக் காணுதல்.
Ø பழமொழிக்கான
சரியான பொருள் கூறல்.
Ø ஆசிரியர்
ஆகுபெயருக்கு மேலும் பல உதாரணங்களைக் கூறி அதன் வகையைக் கூறல்.
மதிப்பீடு:
Ø பின்
வரும் சொற்களுக்கு தமிழ்ச்சொற்களை எழுதுக
சிச்சுவேசன்,
சந்தேகம், ஹேண்ட்வாசிங், மாஸ்க், பிளாக்போர்டு
Ø வானமளந்தது
அனைத்தும் அளந்திடு
வண்மொழி
வாழியவே – இவ்வடிகளின் பொருள் விளக்கம் யாது?
Ø ஆகுபெயர்களின்
வகைகளைக் கூறுக:-
முல்லை
மணம் வீசுகிறது.
இரண்டு
கிலோ வாங்கி வா
சோளம்
சாய்ந்து கிடைக்கிறது.
தொடர்பணி:
Ø செய்தித்தாளில்
காணும் பிறமொழி சொற்களை அடையாளம் கண்டு அதற்கு தமிழ் சொல் எழுதி வருக.
Ø பத்தாம்
வகுப்பில் உள்ள அன்னைமொழியே என்ற பாடலின் பொருளை நீ படித்து உணர்ந்து கொண்டதன் அடிப்படையில்
அதன் பொருள் எழுதுக.
Ø ஆகுப்பெயர்களின் வகையை அறிந்து ஒரு சிறு உரையாடலை அமைக்க.
PDF - FORMAT
குறிப்பு :
தமிழ்விதை தினசரி செய்ய
வேண்டிய செயல்பாடு திட்டங்கள் அட்டவணை கொண்ட பட்டியல் படி இந்த பாடக்குறிப்பேடு தயார்
செய்யப்பட்டுள்ளது. இதனை அப்படியே பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லை. சூழலுக்கு ஏற்றவாறு
மாறுபாடு செய்துக் கொண்டு எழுதுக. இதற்கு அடுத்ததடுத்த வரும் பாடக் குறிப்பேடுகளும்
ஒரு மாதிரிக்காகத் தான் பதிவு செய்யப்படுகிறது என்பதனை நினைவில் கொள்க. நன்றி, வணக்கம் – தமிழ்விதை
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது