நாள் : 20-09-2021 முதல் 25-09-2021
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு ( புத்தாக்கப் பயிற்சி)
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : செய்யுள் பாடலின் கருத்து அறிதல், நோக்கத்தின் அடிப்படையில்
வினாக்கள் உருவாக்குதல்
பக்க எண் : 17 -21
நோக்கம் :
Ø செய்யுளின்
நயம் உணர்தல்.
Ø சொற்சித்திரத்திறனை
பாராட்டுதல்
Ø வினா
எழுத்துகளை அறிந்து நோக்கத்தின் அடிப்படையில் வினாக்களை உருவாக்குதல்
Ø வினாச்சொற்களைப்
பயன்படுத்தி வினாக்களை அமைத்தல்.
கற்றல்
விளைவுகள்:
Ø பல்வேறுவகை
படித்தல் பொருள்களில் காணப்படும் சொற்கள்,தொடர்கள்,மரபுத் தொடர்கள் ஆகியவற்றைப் புரிந்து
கொண்டு நயம் பாராட்டுதல்.
Ø வினாச்சொற்களைப்
பயன்படுத்தி வினாக்களை அமைத்தல்.
கற்றல்-கற்பித்தல்
செயல்பாடுகள் :
Ø படித்தல்
பொருள்களில் காணப்படும் சொற்கள், தொடர்கள்,
மரபுத்தொடர்கள் இவற்றை அறிதல்.
Ø செய்யுள்/பாடலின்
மையக்கருத்து உணர்தல்
Ø செய்யுளில்
காணப்படும் நயங்களை அறிந்து பாராட்டுதல்.
Ø வினா
எழுப்புவதற்காக பயன்படுத்தப்படும் சொற்களே வினா சொற்கள்.
Ø பொதுவாக
வினாச் சொற்றொடரின் இறுதியில் வினாக்குறி அமைந்திருப்பதை கூறல்.
Ø காரணத்தை
அறிந்துக் கொள்வதற்குப் பயன்படுத்தக் கூடியவை ஏன்? எதற்கு?.
Ø காரியம்
நடந்த விதம் அறிய எப்படி?, எவ்வாறு ? என்ற வினாச்சொற்களைப் பயன்படுத்துதல்.
வலுவூட்டல்:
Ø பாடப்பகுதியில்
இடம் பெற்றுள்ள ஒரு செய்யுளை நயமுடன் படித்தல் /பாடுதல்
Ø பாடப்பட்ட
செய்யுளின் பொருள் மற்றும் அதன் நயங்களை எடுத்துரைத்தல்.
Ø வீட்டிலும்,
பள்ளியிலும் நாம் கேட்கும் வினாக்களை அறிதல்.
Ø காரண
காரிய அடிப்படையில் வினாக்களை உருவாக்குதல்
மதிப்பீடு:
Ø பயிற்சிப்புத்தகத்தில்
கொடுக்கப்பட்டுள்ள வினாக்களை வினவுதல்.
Ø செய்யுளில்
பொருள் புரியா சொற்களை எழுதி அதன் பொருள கேட்டல்
Ø காரண
அடிப்படையில் விடைகளை கொடுத்து வினாக்களை அமைக்கும் படி கூறல்
தொடர்பணி:
Ø உமது
பாடப்பகுதியில் செய்யுள் பகுதியில் மையக் கருத்தும், அதன் பொருளும் எழுதி வருமாறுக்
கூறல்.
Ø செய்தித்தாள்
– செய்தி மூலம் வினாக்களை உருவாக்கல் / பாடப்பகுதியில் ஏதேனும் உரைப்பத்தியைத் தேர்ந்தெடுத்து
அதிலிருந்து இந்து கேள்விகள் எழுதி வருமாறுக் கூறல்.
PDF - FORMAT
குறிப்பு :
தமிழ்விதை தினசரி செய்ய
வேண்டிய செயல்பாடு திட்டங்கள் அட்டவணை கொண்ட பட்டியல் படி இந்த பாடக்குறிப்பேடு தயார்
செய்யப்பட்டுள்ளது. இதனை அப்படியே பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லை. சூழலுக்கு ஏற்றவாறு
மாறுபாடு செய்துக் கொண்டு எழுதுக. இதற்கு அடுத்ததடுத்த வரும் பாடக் குறிப்பேடுகளும்
ஒரு மாதிரிக்காகத் தான் பதிவு செய்யப்படுகிறது என்பதனை நினைவில் கொள்க. நன்றி, வணக்கம் – தமிழ்விதை
0 $type={blogger}:
Post a Comment
தங்களின் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகிறது